விருது

ஜூன் 2, 2008

தியோபந்திகளின் இஸ்லாமிய ஃபட்வா

Filed under: அரசியல்,இஸ்லாம்,முஸ்லிம்,Islam,muslim — விருது @ 5:13 முப
Tags: ,

இஸ்லாமியர்கள் உண்மையிலேயே மனம் திருந்தி தீவிரவாதத்தை வெளிப்படையாக எதிர்க்கும் சமுதாயத்தை உருவாக்க ஒரு நல்ல முயற்சி என்ற முறையில் இந்த ஃபட்வா வரவேற்கப் பட வேண்டியது.

ஆனால்,  இந்த ஃபட்வாவின் அடக்க விவரங்களை படிக்கும்போது, (ஆதாரம் எகனாமிக் டைம்ஸ் செய்தி)   இந்த ஃபட்வா ஒரு திறமையான ஏமாற்று வேலையாக இருக்குமோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது.

1.   “He said that while terrorism is destructive, jehad is constructive.”

தீவிரவாதம் வேறு ஜிகாத் வேறு  என்று இந்த அமைப்பு அறிவிக்கிறது.   ஜிகாத் என்றால் என்ன என்று விளக்கம் அளிக்கப்படவில்லை.  (ஜிகாத் ஆன்மீகமானது என்று இன்னமும் நம்பச்சொல்கிறார்களோ!).   இது ஜிகாத் என்ற பெயரில் வழங்கும் தீவிரவாதத்தை எந்த விதத்தில் தடுக்கும் என்று புரியவில்லை.

2.   இந்த அமைப்பின் பிரகடனம் இதோ.   “Islam rejects all kinds of unjust violence, breach of peace, bloodshed, murder and plunder and does not allow it in any form”. அதாவது,  நியாயமில்லாத வன்முறையை இந்த அமைப்பு கண்டிக்கிறதாம்.    நியாயமில்லாத வன்முறை என்றால் என்ன? நியாயமான வன்முறை என்று ஒன்று இருக்கிறதா?   பாபரி மசூதி இடித்ததால் மும்பையில் குண்டு வெடித்தால் அது நியாயமானதா?   குஜராத் கலவரத்தால் டெல்லியில் குண்டுவெடித்தால் அது நியாயமானதா?   இம்மாதிரி அடைமொழிகளை கொடுத்து தீவிரவாதத்தை – வன்முறையை –  நியாயப்படுத்தும் இந்த தீர்மானம் பொதுமக்களை ஏமாற்ற உதவுமே அல்லாது வேறு எப்படி உபயோகமாகும்?

3.    Citing the “sinister campaign” to malign “Islamic faith…by linking terrorism with Islam and distorting the meanings of Quranic Verses and Prophet traditions”, Mahmood Asad Madani, leader of Jamiat Ulema-e-Hind, had wanted Deoband to spell out the stand of Islam on world peace.

இந்த பிரகடனத்தில் இஸ்லாத்தின் பெயரால் வன்முறை செய்யும் ஜிகாதிய அமைப்புகளை ஒரு கண்டனமும் செய்யவில்லை.   மாறாக,   வழக்கம்போல,  இந்த வன்முறையை பொதுவில் விமர்சிக்கும் ஊடகங்கள் மற்றும் அமைப்புகளின் மேல் (இவர்கள் பார்வையில் இவை “sinister campaign”  அதாவது சதிப்பிரசாரங்கள்)  இவர்களுக்கு கோபம் வருகிறது.

ஜெய்ப்பூரில் குண்டு வெடித்ததும் அந்த வன்முறைக்கு பொறுப்பேற்றுக்கொண்ட “இந்திய முஜாகிதீன்” அமைப்பு இந்த தியோபந்திகளின் முந்தைய பிரகடனத்தை கேலி செய்திருக்கிறது.   வன்முறைதான் இஸ்லாமிய வழி என்று குர்ஆனை ஆதாரமாக சொல்லியிருக்கிறது.    இந்த தியோபந்தி அமைப்பினரை “நாய்கள்” என்று கேலி செய்திருக்கிறது.

இப்படி இஸ்லாத்தை அவமானப்படுத்தி இஸ்லாத்துக்கு இழுக்கு சேர்க்கும் உண்மையான காரணிகளை இவர்கள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?   மாறாக,  தேவையில்லாமல் பொது ஊடகங்கள் மீதும்,  பிற மதத்தினர் மீதும், கிருத்துவ அமெரிக்க அமைப்புகள் மீதும் காழ்ப்புடன் இவர்கள் வெறுப்பை உமிழ்வது ஏன்?

இந்த எகனாமிக் டைம்ஸ் செய்தியில் இந்த அமைப்பினர் அமெரிக்க அரசைக் கண்டிக்கும்போது பெருத்த ஆரவாரம் எழுந்ததாக சொல்கிறார்கள்.

“it was when the deputy rector of Deoband, Usman, came down heavily on “the dual policy of America” that the massive crowds cheered the most”

மொத்தத்தில்,  இந்த பிரகடனம் மிதவாத பெரும்பான்மை இஸ்லாமிய சகோதரர்களை உண்மையாகவே உள்ளன்போடு வன்முறையை வெறுக்க செய்யுமானால் அதுவே இஸ்லாமிய சமுதாயத்தின் வெற்றியாகும்.   மாறாக,  இம்மாதிரி பிரகடனம் பொது அரங்கில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இருக்குமானால் இதனால் தற்காலிக பலன் மட்டுமே கிட்டும்.

மேலும்,  இந்த பிரகடனம் இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை என்று குர்ஆனில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது.

“It is proved from clear guidelines provided in the Holy Quran that allegations of terrorism against a religion which preaches and guarantees world peace is nothing but a lie.

அப்படியானால்,   ஜிகாதிய அமைப்புகள் குர்ஆனை மேற்கோள் காட்டி தங்கள் வன்முறைகளை நியாயப்படுத்துவது ஏன்?   குர்ஆன் குறித்த விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் கொடுக்காமல் அம்மாதிரி விமர்சனங்களுக்கு அடக்குமுறை மிரட்டல்கள் விடுப்பது ஏன்?  உதாரணத்துக்கு, இணையத்தில் இஸ்லாத்தை கொள்கை அடிப்படையில் விமர்சிக்கும் நேசகுமார் முதலிய பதிவர்களுக்கு கொலை மிரட்டல் விடப்படுவது ஏன்?

4.   இந்த அமைப்பின் மிகப்பெரிய பொய் (தவறு!)

உஸ்மான் அவர்கள் பேசிய பேச்சு இதோ

Terrorism is the gravest crime as held by Quran and Islam. We are not prepared to tolerate terrorism in any form and we are ready to cooperate with all responsible people,”

“தீவிரவாதம் இஸ்லாத்தின் மிகப்பெரிய குற்றமாக குர்ஆனில் நிறுவப்பட்டிருக்கிறது – தமிழாக்கம்.

இதை எல்லா பத்திரிக்கைகளும் கொட்டை எழுத்தில் பிரசுரிக்கின்றன.  டைம்ஸ் 4 ஜூன் இதழில் எடிட்டோரியலுக்கு மேலே கட்டம் கட்டி இந்த வரிகளை பிரசுரித்திருக்கிறார்கள்!

ஆனால், இங்கு சொல்லப்பட்டது அப்பட்டமான உண்மைக்கு புறம்பான தவறு (அதாவது பொய்!)

இஸ்லாத்தில் மிகப்பெரிய பிழை ஷிர்க்.  அதாவது இறைவனுக்கு இணைவைப்பது.   இது மன்னிக்க முடியாத குற்றம்.    இது இஸ்லாத்தின் அடிப்படை பாடம் படித்தவர்களுக்கு கூட தெரியும்.

இஸ்லாத்தில் தீவிரவாதம் என்ற வார்த்தைகளே விளக்கப்படவில்லை. இஸ்லாத்தின் பார்வையில் செய்யும் நோக்கத்தை பொறுத்து கொலை, கொள்ளை மற்றும் வன்முறைகள் சரி அல்லது தவறு என்று கொல்லப்படுகின்றன.    இஸ்லாத்தின் வரலாற்றில் பல இடங்களில் கப்ஜா (அதாவது தாக்குதல்),  கொலை, கொள்ளைகள்,  அடிமைப்படுத்துதல் என்பதை நாம் சாதாரணமாக காண்கிறோம்.   அதனால், தீவிரவாதம் இஸ்லாத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது.   ஆனால், அதற்கு இஸ்லாம் கூறும் நியாயங்கள் வேறு.

அதனால்,  இந்த இயக்கம் இப்படி கூறி இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?   ஒன்று –  இவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை தெரியவில்லை.    இது இருக்க முடியாது.   இரண்டாவது –  இந்த இயக்கம் உண்மையல்லாத ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.  இது இருக்கலாம்.

“Deoband first: A fatwa against terror,” from The Economic Times, June 1:

NEW DELHI: For the first time ever, Islamic seminary Darul-Uloom Deoband issued a fatwa against terrorism on Saturday, stating Islam had come to wipe out all kinds of terrorism and to spread the message of global peace. The Darul-Uloom had denounced terrorism for the first time in February, but had not issued a fatwa so far.

Saturday’s fatwa, signed by Darul-Uloom’s grand mufti Habibur Rehman, asserts that “Islam rejects all kinds of unjust violence, breach of peace, bloodshed, murder and plunder and does not allow it in any form”.

Citing the “sinister campaign” to malign “Islamic faith…by linking terrorism with Islam and distorting the meanings of Quranic Verses and Prophet traditions”, Mahmood Asad Madani, leader of Jamiat Ulema-e-Hind, had wanted Deoband to spell out the stand of Islam on world peace.

The fatwa, issued before a huge gathering of Muslims in Delhi’s Ramlila Ground for the Anti-Terrorism and Global Peace Conference, went on to say, “It is proved from clear guidelines provided in the Holy Quran that allegations of terrorism against a religion which preaches and guarantees world peace is nothing but a lie. The religion of Islam has come to wipe out all kinds of terrorism and to spread the message of global peace. Allah knows the best.”

The conference was addressed by Jamiat chief and Darul-Uloom’s deputy rector Hazrat Maulana Qari Sayed Mohammed Usman.

He called the conference historic as Muslims of different sects and ideologies — including Nadwatul Ulama Lucknow, Jamaat-e-Islami Hind and All India Muslim Personal Law Board — ratified the fatwa against terrorism.

The exclusively-male turnout that read an “oath of allegiance” to the fatwa cheered most lustily as speakers attacked the US.

Jamiat Ulema-e-Hind leader Madani, an MP, stated that the fatwa should be welcomed by the entire Islamic world.

“Killing of innocent people is not compatible with Islam. The biggest challenge faced by us today is terrorism (which) threatens to strike at the very root of the secular structure of our society besides causing irreparable loss,” stated Madani.

Notwithstanding the caveats like “unjust” and “innocent”, which may make it appear falling short of an unequivocal condemnation of terrorism, the fatwa is viewed by many as a significant step forward towards rallying the public opinion against terrorism.

Coming after the February 25 denunciation, it is seen as reflective of the growing recognition on the part of clerics to counter misgivings about interpretations of scriptures.

Deoband has lately been under intense focus because many of the terrorist groups — from Taliban to Jaish and Harkat — are widely perceived to be Deobandi in orientation.

However, it was when the deputy rector of Deoband, Usman, came down heavily on “the dual policy of America” that the massive crowds cheered the most. “Whenever Christian and American interests are hurt in any part of the world, they take prompt action to set things right even at the cost of human lives. They maintain silence though when Muslims are the victims,” he said, further criticizing the US for its support to Israel.

According to Usman, Jamiat recently held a series of conferences and meetings with madrassas in Lucknow, Ahmedabad, Hyderabad, Kanpur, Surat, Varanasi and Kolkata to carry forward the anti-terror movement which was initiated at Deoband in February. Usman said that many people, especially in the West, were carrying out a propaganda that terrorism was synonymous with jehad.

He said that while terrorism is destructive, jehad is constructive. “Terrorism is the gravest crime as held by Quran and Islam. We are not prepared to tolerate terrorism in any form and we are ready to cooperate with all responsible people,” he said.

Advertisements

Create a free website or blog at WordPress.com.