விருது

மார்ச் 22, 2009

மாண்புமிகு செக்குலர் திலகம் மதானி

Filed under: Uncategorized — விருது @ 6:19 முப

இந்த பாரதப்பூமியை பீடித்துள்ள ஒரே வியாதியான பாஜபாவை வீழ்த்தி இந்த புண்ணிய பூமியில் அழிந்துகொண்டிருக்கும் செக்குலர் உணர்வை காத்து இங்கிருக்கும் நூத்திப்பத்து கோடி இந்தியர்களையும் (முப்பத்து முக்கோடி தேவர்களை அழித்துவிடவேண்டும்…) காப்பாத்த சீன காருண்யத்தின் வரப்பிரசாதமாய் நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் கட்சியான சிபிஎம் செக்குலர் திலகங்களை தேடித்தேடி வெளிக்கொணர்வது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது.

இந்த சிகப்புச்சிட்டை சின்ன ராசுகள் கேரளாவில் இப்போது PDF லீடர் மதானியோடு கை கோர்த்து கட்டிப்பிரண்டுகொண்டிருக்கிறார்கள்.   அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மாண்புமிகு அப்துல் நாசர் மதானி ஒரு செக்குலர் திலகமாம்.   PDF கட்சி செக்குலர் கட்சியாம்.

எந்த மதானி என்கிறீர்களா?   கிழிஞ்சது போங்க  –  நம்ப கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு புகழ் மதானி தாங்க…

மதானி செக்குலர் திலகம் என்றால் நான்தான் பராக் ஒபாமா.

இந்த தடவை சிகப்புச்சட்டைகளின் சாயம் வெளுத்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.  திடீரென்று பெய்த மழையில் எதிர்பாராமல் முளைத்த காளான்களாய் இவர்கள் 60 சீட் போனதடவை வாங்கி தேசத்தை சோனியாவின் கையில் கொடுத்து சீரழித்தது இனிமேலும் நடப்பது மிகவும் சந்தேகம்தான்.  அதனால்,  இவர்கள் இப்போது யாரைப்பார்த்தாலும் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்ளும் கிறுக்கர்களாய் அலைகிறார்கள். 

இவர்கள் மதானிக்கு கொடுத்த இந்த சர்டிபிகேட்டை அந்த கட்சியின் அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ ஏடான இந்துப்பத்திரிக்கை முழுதும் கட் செய்யாமல் வெளியிட்டு சந்தோஷப்படுகிறது.

http://www.hindu.com/2009/03/22/stories/2009032250430100.htm

Mr. Vijayan said the LDF had opposed Mr. Maudany strongly in the past. However, Mr. Maudany made it clear that he was in favour of secularism following his release from jail. He came out in the open against religious extremism and communalism and rightly approached political parties that followed similar principles.

இவர்களின் செக்குலர் ஒப்பாரியை இனிமேல் எங்கள் தெரு நாய்கூட மதிக்காது.  எப்போதுதான் மதித்திருக்கிறது என்கிறீர்களா, அதுவும் சரிதான்!!!

அடுத்து சிபி எம் சொல்லப்போவது என்ன?   அப்சல் குரு ஒரு காந்தியவாதி.  அப்துல் கசாப் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்…

 இப்படியெல்லாம் ஓட்டு வாங்குவதற்கு..  இவர்களுக்கு .  தூ…

Advertisements

ஜூன் 23, 2008

சன் டிவியின் உள்குத்து

Filed under: Uncategorized — விருது @ 10:39 முப

“ஏண்யா அந்த புள்ளய போட்டு இந்த அடி அடிக்கிற?”

“அவன் என்னய தேவாங்கு ன்னு சொல்லிபுட்டான் ஐயா”

“எப்பய்யா உன்னய அப்படி திட்டினான்?”

“அது இருக்கும் ஒரு ஆறு மாசம் முன்னாடி!”

“அடேலே!  ஆறு மாசம் முன்னாடி திட்டினதுக்கு இப்ப ஏன்யா அவன இந்த மொத்து மொத்தற?”

“நான் நேத்துதானே தேவாங்க நேர்ல பாத்தேன்!”

———–

நேற்று 22 ஜூன் சன் டிவி அசத்தப்போவது யாரு வில் சொன்ன ஜோக்

ஜூன் 3, 2008

நூல் தேர்வு 1 – “சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுகிறேன்”

Filed under: Uncategorized — விருது @ 7:58 முப

நான் படிக்க வேண்டும் என்று தெரிந்தெடுக்கும் புத்தகங்களை இந்த தொடரில் குறிப்பிடலாம் என்று நினைத்து இதை ஆரம்பிக்கிறேன்.

“சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுகிறேன்” என்ற புத்தகத்தின் மதிப்புரை தினமலர் 1-6-2008 இதழில் வெளியாகியுள்ளது.

அந்த மதிப்புரையில் என்னை ஈர்த்த பொருள்களை இங்கே எழுதுகிறேன்.

இந்த புத்தகத்தை எழுதியவர் சாமி.தியாகராசன்.  இவர் குன்றக்குடி அடிகளாரின் மாணவராம்.  இந்த நூலுக்கான அறிமுகம் இதோ.

சைவ சமய உலகில் காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த நம்பிக்கை மரபுகளை சில போலிப் புரட்சியாளர்கள் உடைத்தெறிந்து, ஊர் முழுவதும் வெற்றி ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.  இவர்களைத்தடுத்து நிறுத்தி அவர்கள் போலியானவர்கள், ஆழ்ந்த அறிவோ, பரந்த குணமோ இல்லாத விளம்பர வீரர்கள் என்பதைத் தக்க சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டும் சமயக் காவல் நூல் இது.

(தினமலர் நூல் மதிப்புரையில் மா.கி. இரமணன்)

இந் நூலில் இடம் பெற்றுள்ள பல கேள்விகளும் அதற்கான விடைகளும்.   ஒரு கேள்வி பதில் இதோ.

கேள்வி:  தமிழில் திருமணத்தை நடத்தி வைக்கும் இன்றைய “தமிழ் புரோகிதரர்கள்” திருஞானசம்பந்தரின் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற தேவாரத்தையே பாடி நடத்துகின்றனரே இது சரியா?

பதில் :  மரணமுற்ற பின் மறுஉலகில் நல்ல கதியுடம் வாழ்க என்னும் கருத்தமைந்த “மண்ணில் நல்ல வண்ணம்” என்ற சம்பந்தர் தேவாரம் பாடி, இன்று தாலி கட்டச் செய்வது எந்த அளவு தமிழ் புரோகிதர்களின் அவல நிலை என்பதை ஆதாரத்துடன் இந்த நூல் விளக்கும்.

காசியில் சிவலிங்கத்தை நாமே தொட்டு மலரிட்டு மஞ்சனம் ஆட்டுவதை யாவரும் போற்றும் வகையில் இங்கு திருப்பனந்தாள் ஆதீன கர்த்தர் தற்போது மதுரையில் செய்துள்ளார் என்பதை இந்த மதிப்புரையில் தெரிந்துகொண்டேன்.  இது வரவேற்கதக்க முயற்சி.

இந்த நூலில் நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் கீழ்க்கண்ட மாதிரியானவை:

– வடமொழியா,  தமிழ் மொழியா – சிவபெருமான் பேசிய மொழி என்ன?

– இறைவனுக்கு மிகவும் பிடித்தது வடமொழி அர்ச்சனையா தமிழ்மொழி பூசனையா?

– கண்ணப்பரின் அன்புக்கு காளத்திநாதர் அருள் கொடுத்தார்.   ஆனால், சிவகோசரியாரின் ஆகம பூசையை கண்டுகொள்ளாமல் ஏன் வெறுத்தார்?

–  ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வடமொழி நான்கு வேதங்கள் போல, தமிழிலும் நான்மறை இருந்ததா?  அது கடல்கோளால் அழிந்ததா?

மேற்சொன்ன கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது.    ஆனால், இந்த புத்தகத்தில் பதில் இருப்பதாக அறிகிறேன்.  படித்துவிட்டு வந்து அது பற்றி விமர்சனமோ இல்லை விளக்கமோ தருகிறேன்.

இந்த புத்தகத்தை வெளியிட்டவர்கள் :  தெய்வச் சேக்கிழார் மன்றம், கும்பகோணம் –  612001.  புத்தகத்தின் விலை ரூ.50  பக்கம்-217.

இந்த புத்தகம் சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.   எல்லா புது புத்தகங்களுக்கும் நான் உடனே நாடுவது எனிஇந்தியன் கடையைத்தான்.   அவர்கள் இந்த புத்தகத்தை வரவழைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

 சொன்னால் விரோதம்....  மதிப்புரை

நீங்கள் இந்த மதிப்புரையை முழுதுமாக படிக்க இங்கே இணைத்துள்ள படத்தை பார்க்கவும்

 

 

 

மே 27, 2008

சென்னை உட்லண்ட் ஹோட்டல் விவாகாரத்தின் பிண்ணனி

Filed under: Uncategorized — விருது @ 6:33 முப
//////  நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவனாக அறியப்பட்டவன். 38 ஏக்கர் நிலம், கடந்த 180 ஆண்டுகளாக வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது.

நகரில் தூய்மையான காற்று வீசவும், பசுமையான சுற்றுச்சூழல் நிலவவும், வேளாண் தோட்டக்கலைச் சங்கம் சார்பில் இந்த நிலத்தில் நூற்றுக்கணக்கான அரிய மரங்களும், மூலிகை தாவரங்களும் பூக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் என் மீதான வெறுப்பில் இந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முயன்று வருகிறது. இந்த இடத்தில் வேளாண் தோட்டக்கலைப் பூங்கா அமைக்கப் போவதாக அரசு கூறுகிறது.

இந்தப் போர்வையில் நிலத்தை கையகப்படுத்தி என்னைத் துன்புறுத்த முயற்சிக்கிறது. ///

 
http://thatstamil.oneindia.in/news/2008/05/27/india-sc-puts-break-in-woodlands-drive-in-hotel.html
 
கரு-நா-நிதி ஆதாயம் இல்லாமல் ஆட்டையைப் போட மாட்டார் என்பதற்கு இன்னொரு உதாரணம்!!
 

பீடுநடை போடும் தமிழ்இந்து.காம் இணையதளம்

Filed under: Uncategorized — விருது @ 6:11 முப

சமீபத்தில்  தமிழ்இந்து.காம் என்ற ஒரு இணையதளத்தின் அறிமுகம் கிடைத்தது.

பொதுவாக இந்து இணைய தளங்கள் என்றால் அவை ஒன்று பஜனைமடங்களாகவோ இல்லை வெறும் அரசியல் சார்பாகவோ இருக்கின்றன.    இவை இரண்டு வகைகளும் தவறு என்று நான் சொல்லவில்லை.  நானே வைதிகஸ்ரீ பஜனை தளம்தானே நடத்துகிறேன்.

ஆனால்,  இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு பெரிய வெற்றிடம் இருக்கிறது.

இன்றைய இந்து சமுதாயத்திற்கு இந்து உணர்வு என்பது ஒன்று ஆன்மீகம் சார்ந்தோ இல்லை அரசியல் சார்ந்தோ இருக்கிறது.    இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு ஒரு கலாசார, தேசீய இழையோடும் ஒரு உணர்வை முதன்மைப்படுத்தும் சிறந்த தளங்கள் பொதுவாக இல்லை என்றே சொல்லலாம்.   அதுவும் தமிழில்.

இன்றைய நவீன கலாசார மற்றும் நவீன சமுதாய சூழலில் வளர்ந்துவரும் இளைய இந்து சமுதாயத்திற்கும் மற்றும் மாறிவரும் முதிர் இந்து சமுதாயத்திற்கும் தங்கள் வாழ்வியலை ஒட்டிய கலாசார உணர்வுகளை பேசவும், பகிர்ந்துகொள்ளவும் இந்த தளம் ஒரு சரியான வழிகாட்டியாக தெரிகிறது.

அதுவும்,  ஒவ்வாத மற்றும் காழ்ப்பு தீராவிட கொள்கைகளால் பலவீனப்பட்டும்,  தாக்குதலுக்கு உள்ளாகியும் உள்ள தேசீய கலாசார இந்து உணர்வுகள் தமிழர்களிடையே மீண்டும் தழைக்கச்செய்ய இந்த தளம் முயலுமானால் அது ஒரு சிறந்த எழுச்சியாக இருக்கும்.   அதுவே இன்றைய தேவை!

தமிழனையும், இந்துவையும் இல்லாத இருவேறு இனங்களாக காட்ட முயலும் சில தேசவிரோத சக்திகளை முறியடித்து தமிழனின் தாய் மதத்தை பிரதிபலிக்கும் உண்மையான பண்டைய கலாசாரத்தில் பெருமைகளை  இன்றைய தமிழர்களை உணரச்செய்து அந்த கலாசாரத்தில் நம்மை பெருமைப் பட செய்ய இந்த தளம் முயலவேண்டும் என்பது என் ஆசை.

இந்த தளத்தை நடத்தும், பயன்படுத்தும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.  நன்றிகள்.

இந்த தளத்தை விடாமல் கவனித்து வரும் நான் அதில் மயங்கி அந்த தளத்துக்கு ஒரு இணைப்பை என் பதிவில் கொடுத்துவிட்டேன்.

 

வாழ்த்துக்கள்.

நன்றி

ஜயராமன்

ஏப்ரல் 17, 2008

பிராமணர்கள் தமிழர்களா – பதில்

Filed under: Uncategorized — விருது @ 4:40 முப

 

திரு.  லட்சுமிநாராயணன் அவர்களின் பதிவு “பிராமணர்கள் தமிழர்களா” என்பது.   அங்கு நடந்துவரும் விவாதத்திற்கு நான் போட்ட பின்னூட்டம் இது.  சற்று நீண்டுவிட்டதால் தனிப்பதிவாக.

ஐயா,

ஆரியம்-திராவிடம் என்பது ஒரு கற்பனை.  இது இன்று மேலைநாட்டு அறிஞர்களாலேயே முழுதுமாக நிராகரிக்கப்பட்டு விட்டது.  அது குறித்து புரிந்துகொள்ளும் விவரமும்,  நேர்மையும் இல்லாத சில வெத்துவேட்டு ஈனப்பிறவிகள் தங்கள் காழ்ப்பு உணர்வுகளை பின்னூட்டங்களில் காட்டி தங்கள் தரத்தை வெளிக்காட்டுகிறார்கள்.  இவர்களை ஒதுக்கிவிட்டு மேலே செல்லுங்கள்.  இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

ஆரியர் படையெடுப்பு குறித்த எந்த ஒரு கதையும் எந்த ஒரு இலக்கியத்திலும் இல்லையே!   அப்படியென்றால், திராவிடர்களை அடிமைப்படுத்தியவர்களோ,  அடிமைப்பட்டவர்களோ இதை ஏன் மறந்து போனார்கள்.

இப்படி ஆரியர் படையெடுப்பு நடந்தது பஞ்சாப் முதலிய வட மாநிலங்களிலாம்.  அப்படி என்றால் திராவிட நாகரீக சுவடுகள் அங்கு இல்லையே,  ஏன்?  அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டனவா?

ஆரியர்கள்தாம் குதிரையை அறிமுகப்படுத்தினார்கள் என்று சொன்னது தப்பு என்று கர்நாடகா மற்றும் மகாராட்டத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிகள் காட்டி விட்டன.   இதையெல்லாம் இந்த மூடர்கள் அறிவார் இல்லை.

ஆரியர்கள் 5000 ஆண்டுக்கு முன் வந்து அடிமைப்படுத்திவிட்டார்களாம்.  5000 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த கூறு கெட்ட ஒரு இனமா திராவிட இனம்?  இவர்கள் இப்படிச்சொல்லி தங்கள் மூதாதையர்களை அவமானப்படுத்துகிறார்கள்!

சாதி சாதி என்று வெறி பிடித்து அலைவது இந்த ஆதிக்க சாதி திராவிடர்கள்தாம்.  கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றை பார்த்தால் எப்போதுமே கல்வியிலும்,  வியாபாரத்திலும் இந்த சாதிகளே ஆக்கிரமித்து வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்துக்கு முற்பட்ட கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை இந்த ஆதிக்க சாதி திராவிட இனத்தவர்கள்தாம் என்று வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன.   கோயிலில் மணி அடித்துக்கொண்டிருந்த அந்தணர் குலம் ஆங்கிலேயர்கள் வரவால் அவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தயவு பெற்று பல பதவிகள் பெற்றார்கள்.   அப்போதெல்லாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடாத்த இந்த வெட்கங்கெட்ட பகுத்தறிவாளர்கள், மாறாக ஆங்கிலேய ஆட்சிக்கு அடிவருடி அடிமை சாசனம் தொடர வேண்டும் என்று நினைத்தார்கள்.  இவர்களா சுயமரியாதைக்காரர்கள்!

தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை.   தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது.  அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே.

ஏனென்றால்,  தீண்டாமைக்கு முன்னோடிகள் கிருத்துவ மிஷனரிகளே.   கடந்த 50 வருடங்கள் முன் வரை கருப்பு அடிமைகளை வைத்திருந்து அந்த அடிமைத்தளை போக்கூடாது என்று போராடிய கிருத்துவ கூட்டம் இந்து மதத்தை குறை சொல்வதா? வெட்க்க்கேடு! 

எந்த ஒரு இந்து கடவுளும், வேதமும் தீண்டாமை சொன்னதில்லை.  மனு தர்மம் என்ற ஒரு புனைப்பு சாத்திரம் 800 ஆண்டுகளுக்கும் மேலாக புனைத்து எழுதப்பட்டதாக வரலாறு.  அந்த சாத்திரம் எப்போதும் இந்து கலாசாரத்தில் பின்பற்றப்படவில்லை.  மனு தரும வழியாக ஆட்சி புரியப்பட்டதாக எந்த ஒரு சரித்திரமும் இல்லை.  அப்படி இந்து மதம் புறக்கணித்த ஒரு ஒவ்வாத சாத்திரத்தை ஆங்கிலேயர்கள் இந்துமத அழிப்புக்கு பயன்படுத்தினார்கள்.  அந்த மனுதருமம் சொல்லும் பல நல்ல விஷயங்களை இவர்கள் என்றுமே பின்பற்றுவதில்லை. 

 கிருத்துவம் எப்போதும் வர்க்க சாதி அடக்குமுறையை ஆதரித்தே வந்துள்ளது.  ஏழு அடுக்கு சாதி அமைப்பு கொண்டதாக அவர்கள் மிஷனரிகள் கடந்த 50 ஆண்டுவரை போராடித்திரிந்தார்கள்.   சரித்திரம் தெரியாமல் இந்த தமிழர்கள் திராவிடம், பார்ப்பான், இந்துமதம் என்று சொல்லித்திரிகிறார்கள்.

இந்து மதம் தன் நாட்டார் வழிபாட்டுகளை எப்போதும் காத்தே வந்துள்ளது.  ஆனால், பிற மதங்கள் – இஸ்லாம், கிருத்துவம் – எப்போதும் தங்களின் ஆதிகால இறை வழிபாடுகளை அடையாளம் இல்லாமல் அழித்துவிடுகிறது.  பார்ப்பனீயம் என்று கத்தும் இந்த வெத்துவேட்டுகள் இப்படி கலாசார கொலை எழுப்பும் மற்ற ஆப்ரகாமிய மதங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

 இதே கரு.நா.நிதி பால் தினகரன் மறைவுக்கு மலர் வளையம் வைக்கிறார்.  அவர் மகன் ஸ்டாலின் ஆலேலூயா கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.  முடவன் நடக்கிறான், குருடன் பார்க்கிறான் என்று மூடநம்பிக்கையை வளர்க்கும் இந்த கிருத்துவ கூப்பாடுகளில் பகுத்தறிவு இருக்கிறதா, இல்லை கடமையைச்செய், பலன் தானே வரும் என்ற இந்து மதத்தில் பகுத்தறிவு இருக்கிறதா!  இவர் மகள் கனிமொழி அவர்களோ, பொட்டை அழித்துவிட்டு முஸ்லிமாக்களின் கூட்டத்தில் கஞ்சி சாப்பிடுகிறார்.

ஆனால், இவர்கள் 5000 ஆண்டுக்கு முன்னால் கைபர் இடுக்கில் வந்தான் பிராமணன் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.   என்ன ஒரு அபத்தம்!

நன்றி

ஜயராமன்

ஏப்ரல் 15, 2008

தடுமாறும் தமிழ்ப் புத்தாண்டு

Filed under: Uncategorized — விருது @ 8:29 முப

Tuesday April 15 2008 00:00 IST

தினமணியில் 15 ஏப்ரல் 2008 செவ்வாய்கிழமை வெளிவந்த திரு. நெல்லை முத்து அவர்களின் கட்டுரை.   இந்த கட்டுரையாளர் ஸ்ரீஹரிகோட்டாவின் விஞ்ஞானி ஆவார்.

தடுமாறும் தமிழ்ப் புத்தாண்டு – ஓர் அலசல்

நெல்லை சு. முத்து

தமிழ்ப் புத்தாண்டு என்பதும், தமிழர் புத்தாண்டு என்பதும் இன்று வெவ்வேறு மாதிரி என்று ஆகிவிட்டது. இந்தப் பிரச்னையை அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும்தான் அனைவரும் அணுகுகிறார்களே தவிர விஞ்ஞான ரீதியாக அணுகத் தயங்குகிறார்கள்.

பகுத்தறிவு பேசுபவர்களும், விஞ்ஞானம் பற்றிப் பேசுபவர்களும் இந்த விஷயத்தில் அரசியல்தான் பேசுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை.

இந்த மாதம் ஏப்ரல் 5 அன்று சந்திரன் சூரியனுக்கு அண்மையில் வசித்தது. “அண்மை வாசி’ தானே அமாவாசை? ஏப்ரல் 20 அன்று சந்திரன், சித்திரை நட்சத்திரத்தில் நிலைப்பதாகத் தோன்றும். கன்னி (virgo) உடுக்கணத்தில் “ஆல்ஃபா வெர்ஜினிஸ்’ என்னும் விண்மீனே நாம் கூறும் சித்திரை. இதற்கு வானவியலில் “ஸ்பைக்கா’ ( Spica) என்றும் பெயர். அதுவே பண்டைய சித்திரை மாதத் தொடக்கம். சந்திரன் சஞ்சரிக்கும் உடுக்கணத்தின் பெயராலேயே அந்தந்த மாதத்தை நாம் “திங்கள்’ என்று குறிப்பிடுகிறோம்.

அவ்வாறே, அடுத்த பௌர்ணமி அன்று (2008 மே 19) விசாக நட்சத்திரத்தில் தோன்றும். அந்த “விசாக’ மாதம் வைகாசி என்கிறோம். இது எல்லாம் நம் நாட்காட்டிகள் தரும் தகவல்கள் தாம். ஆனால் விஷயம் அது அல்ல.

பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை தான். தமிழ்ச் சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடை எனும் சங்கப் பாடல் காட்டும் ஓர் உண்மை இங்கு முக்கியம் ஆனது. “”ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரு வீங்கு செலன் மண்டிலம்” (160 – 161) என்கிற வரிகளில் பண்டைய தமிழர் வானவியல் திறன் விரிகிறது. கோப்பெருந்தேவியின் கட்டிலுக்கு நேர் மேலாக “ஆடு தலை’யாகப் பன்னிரெண்டு உடுக்கணங்கள் தோற்றமும் விதான ஓவியமாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளது. அதில் மேஷம் ( Aries) ஆகிய ஆடு உருவம் கொண்ட தலையாய உடுக்கணம் முதலில் சுட்டப் பெறுகிறது.

ஆனால் சித்திரை முதல் தேதி என்பது ஏப்ரல் 13 ஞாயிறு, அரசு விடுமுறை – தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று நாட்காட்டிகள் அசடு வழிந்தன. உள்ளபடியே ஆண்டுத் தொடக்கம் மட்டுமல்ல, நாட்காட்டிகளும், நாள் கணக்குகளுமே காலந்தரமாகத் திருத்தப்பட வேண்டியது அவசியம்.

இப்படி ஆண்டு, மாதம், நாள் கணக்குகளை மாற்றுவது சரியா? என்றால் வரலாற்றில் இத்தகைய செய்திகள் நடந்தேறி இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் 365.242 சூரிய நாள்களைப் பண்டைய உரோமானியர் பத்து சம பாகங்கள் ஆக்கி மாதங்களாக வகுத்தனர். அந்தப் பத்து மாதங்களுக்கு முறையே மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு என மன்னர்கள், தெய்வங்கள் பெயர்களைச் சூட்டினர். பின்னர் ஏழாவது (“சப்த’ – செப்டம்பர்), எட்டாவது (“அஷ்ட’ – அக்டோபர்), ஒன்பதாவது (“நவ’ – நவம்பர்), பத்தாவது (“தச’ – டிசம்பர்) என்ற அடிப்படையில் கிரேக்கப் பெயர்களால் குறிப்பிட்டனர். இங்கு வடமொழிச் சொற்களும் கிரேக்கப் பெயர்களும் ஒலி அமைப்பில் ஒத்துப் போகின்றன என்பது ஆய்வுக்கு உரியது.

எப்படியோ, பிற்காலத்தில் ஆண்டு பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இறுதி இரண்டு மாதங்களுக்குப் புதிதாக ஜனவரி, பெப்ரவரி என்ற தெய்வப் பெயர்கள் சூட்டப்பெற்றன.

எனினும், பிற்காலத்தில் எட்டாம் போப் கிரகோரி என்பவர் “கூதிர் சந்தி’ அடிப்படையில் கிரகோரியன் நாட்காட்டி ( Gregorian calender) ஒன்றை வரையறுத்தார். வானத்தில் தென்கோடியில் சூரியன் விலகிய பின் மீண்டும் வடக்கு முகமாக ஏறத் தொடங்கும் நாள் “கூதிர் சந்தி’ ( winter solstice). இது டிசம்பர் 21 அன்று நிகழும்.

இன்றைக்குத் திருவள்ளுவர் ஆண்டு மாதிரியே அன்றைக்குக் கிறிஸ்து பிறந்த நாளையொட்டி ஜனவரி முதல் நாள் அந்த நாட்காட்டியின் முதல் நாள் ஆயிற்று. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது பிந்தைய வரலாறு. அந்த நாட்காட்டியில் ஜனவரி தொடங்கிப் பத்தாவதான டிசம்பர் பன்னிரண்டாம் மாதமும் ஆயிற்று.

விஷயத்துக்கு வருவோம். பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இங்கிருந்து கவனிப்போருக்குச் சூரியன் வானில் வெவ்வேறு விண்மீன் கூட்டங்களின் ஊடாகப் பயணம் செல்வது போல் தோன்றும். இதுவே சூரியவீதி. அதனைப் பன்னிரண்டு சம பிரிவுகளாகப் பகுத்து அவற்றிற்கு “”ராசி வளையம்” ( zodiac) என்று பெயரிட்டு வழங்குகிறோம். ஆயின், சூரியனின் இந்த சஞ்சாரத்தை இரவில் விண்மீன்களிடை காண்பது இயலாது அல்லவா? ஆதலால் சூரியனுக்குப் பதிலாக நமது திங்களாகிய சந்திரன் பௌர்ணமியாக இயங்குவதைக் கவனித்தனர் நம் முன்னோர்.

சூரியன் வடக்கு நோக்கிய உத்தராயணப் பயணத் தொடக்க நாளில் பூமியில் இரவுப் பொழுதும், பகற்பொழுதும் சமமாக 12 மணி நேர அளவாக அமையும். இதுவே வசந்த சமநோக்கு நாள் ( vernal equinox). சங்க காலத்தில் அந்த வசந்த சமநோக்கு நாளில் சூரியன் மேஷ ராசியில் இயங்கியது. சித்திரைத் திருவிழா இதுவே.

ஆனால் இந்த வசந்த சமநோக்கு நாளில் வானவியல் சம்பவங்கள் இன்றைக்கு 2008 மார்ச் 21 அன்றே நிகழ்ந்துவிட்டன. சங்க காலத் தமிழர் கணக்குப்படி பங்குனி மாதமே தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது.

இங்கு தான் உதைக்கிறது. அதற்குத் தீர்வாக, வானவியல் கருத்துகள் சிலவற்றை ஆராய்வோம். பூமியும் சூரியனும் தொடர்ந்து இடம் பெயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இன்று நமக்கு நிலையானதாகத் தோன்றும் “போலாரிஸ்’ ( polaris) துருவ நட்சத்திரமே நிலையானது அல்ல. கி.மு. 4000 – 3000 வாக்கில் காளைமுகத் தோற்றங் கொண்ட “ரிஷப’ ( CPT) ராசியில் வசந்த சமநோக்கு நாள் அமைந்தது. அன்றைக்கு தூபான் ( Thuban) எனும் விண்மீனே நம் துருவ நட்சத்திரமாக இருந்தது.

இதில் இன்னொரு வேடிக்கை. கி.பி. 14000 ஆண்டில், அதாவது இன்றிலிருந்து சுமார் 12000 ஆண்டுகளுக்குப் பிறகு – “”அபிஜத்” ( Vega) எனும் விண்மீனே நமது புதிய துருவ நட்சத்திரமாக நிலைபெறுமாம்.

பூமியின் சுழற்சி அச்சு தலையாட்டம் போடுவதனால் அதன் துருவ நட்சத்திரமும் இவ்விதம் இடம் மாறி வருகிறது. சராசரியாக ஒவ்வொரு 2000 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வீதம் மெல்ல வசந்த சமநோக்கு நாள் ஒவ்வொரு ராசியாக முன்னேறி வருகிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இடபம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு மேஷம், இன்று மீனம்.

அவ்வாறே, அன்றைய குளிர்காலச் சம்பிரதாயங்களான தைந்நீராடல், தைப்பொங்கல் முதலிய நிகழ்ச்சிகள் இன்று மார்கழிக் குளிர்காலப் பூசைகள், பண்டிகைகள் ஆகிவிட்டன. பண்டைய கார்த்திகை ஒளிவிழாக்கள் தீபாவளி என்ற பெயரில் ஐப்பசியிலுமாக முன்னேறி வருகின்றன. அதாவது இன்று வசந்த சமநோக்கு நாளில் சூரியன் மேஷ ராசியில் இல்லை. மீனத்தில் இருக்கிறது. உள்ளபடியே, சூரியனின் உத்தராயண சஞ்சாரம் தொடங்கி ஒரு மாதம் ஆயிற்று.

அவ்வாறே, ஆறு மாதங்கள் வடக்கே சஞ்சரித்த சூரியன் செப்டம்பர் 21 அன்று தெற்குப் பயணம் தொடங்கும். அதுவே இலையுதிர் சமநோக்கு நாள் ( Autumnal equinox). மூன்று மாதங்கள் கழித்துச் சூரியன் தெற்கே 23.5 பாகை தாழ்ச்சியினைத் தொடும். தென்கோடியில் சூரியன் இறங்கிய பின் மீண்டும் வடக்கு முகமாக ஏறத் தொடங்கும் நாள் “கூதிர் சந்தி’ ( Winter solstice). டிசம்பர் 21 அன்று நிகழும் பண்டைய நாளில் இது மகர ராசியில் நிகழ்ந்தது. அதனைக் “காப்ரிகார்னஸ்’ ( Capricornus) என்பர்.

ஆழ்கடல் நன்னீரோட்டத்தின் கடவுளாகக் கருதப்படும் பாபிலோனிய “”இயா” ( Ea) எனும் தெய்வக் குறியீடு மகரம் எனும் நீர்ப்பிராணி. செம்மறியாட்டின் உடலும், மீனின் வாலும் கொண்ட அபூர்வத் தோற்றத்துடன் அது சித்திரிக்கப்பட்டது. அதன் பெயராலேயே 23.5 பாகை தெற்கு அட்ச ரேகைக்கு மகர ரேகை என்று பெயர். இன்று இது “தனுசு ரேகை’ என்று பெயர் மாற்றப்பட வேண்டும்.

திருவள்ளுவர் காலத்தில் வசந்த சமநோக்குநாள் மேஷத்தில் நிகழ்ந்தது. இலையுதிர் சமநோக்கு நாள் துலாம் உடுக்கணத்தில் ஐப்பசித் திங்களில் நிகழ்ந்தது. கூதிர் சந்தி மகர ராசியில் நிகழ்ந்தது. அதுவே தை மாதம். ஆனால் இன்றோ, திருவள்ளுவ ஆண்டின் அந்தக் குளிர்காலச் சந்தியானது முன் கூட்டியே மார்கழியில் (டிசம்பர் 21 வாக்கில்) நிகழ்ந்து விடுகிறது. அப்போது சூரியன் தனுசு ராசியில் நிலைபெறுகிறது.

ஆதலால் இனி, மகர சங்கராந்திக்குப் பதில் “தனுசு சங்கராந்தி’யில் மார்கழி மாதமே உழவர் திருநாளாகிய “தைப்பொங்கல்’ கொண்டாடி விடுவது தான் நியாயம். அதாவது டிசம்பர் மத்தியில் “புதிய’ தை மாதமும் வர வேண்டும். தமிழர் போற்றும் திருவள்ளுவர் ஆண்டு அதாவது டிசம்பர் 21 அன்று தான் கொண்டாடப்பட வேண்டும்.

பகுத்தறிவு, விஞ்ஞானம் என்று பேசுபவர்கள் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் முறையாக வானசாஸ்திர ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இப்போது நிகழ்த்த முயற்சித்திருக்கும் மாற்றங்கள் அரசியல்தானே தவிர விஞ்ஞானபூர்வமானதல்ல!

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, ஸ்ரீஹரிகோட்டா)

ஏப்ரல் 14, 2008

உலக தமிழர்கள் ஒதுக்கிய கருணாநிதியின் புத்தாண்டு கொள்கை

Filed under: Uncategorized — விருது @ 7:34 முப

1.  சென்னை மற்றும் உலகெங்கிலும் ஈழ தமிழர்கள் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடினார்கள்..

 
சென்னை கொண்டாட்ட படங்கள் மற்றும் செய்திகளை இங்கே பாருங்கள்…
 
http://www.asiantribune.com/?q=node/10545
 
http://www.asiantribune.com/?q=node/10511
 
 
2.   ஈழப்புலி இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் (நம் கரு.நா.நிதியின் இதயம் இவருக்காக இடைவிடாது  துடிக்கிறது என்று சொல்லிக்கொள்வார்)  தமிழ்ப்புத்தாண்டு செய்தி விடுத்து தமிழ் ஈழ போராளிகளை வாழ்த்தினார்.
 
http://www.tamilnet.tv/index.php/sinhala-tamil-new-year-04013?blog=1
 
3.    மலேசியாவில் எல்லா தமிழர்களும் நேற்று புத்தாண்டு விமர்சையாக கொண்டாடினார்கள்.
 
http://www.nst.com.my/Current_News/NST/Monday/National/2212857/Article/index_html
 
4.  கனடா நாட்டின் அதிபர் தமிழர்களுக்கு நேற்று புத்தாண்டு வாழ்த்து அறிக்கை சொன்னார்.  (நம் மன்மோகன் சிங் அவர்களுக்கும், பிரதிபா பாட்டீல் ராஷ்ட்ரபதி அவர்களுக்கும் கருணாநிதி அனுமதி கொடுக்காததால் பேச முடியாமல் போனது வெட்கக் கேடு!)
 
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25285
 
5.  போலந்து நாட்டில் நேற்று தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
 
http://www.polskieradio.pl/thenews/lifestyle/?id=79837
 
சரி, நம் தமிழ்நாட்டில்.   கரு.நா.நிதியின் சட்டத்திற்கு ஒரு மதிப்பும் இல்லாமல் இங்கும் தமிழ் புத்தாண்டு விமர்சை…
 
http://www.thaindian.com/newsportal/uncategorized/tamils-ignore-government-fiat-celebrate-new-year_10037583.html
 

Tamils ignore government fiat, celebrate New Year

April 13th, 2008 – 6:51 pm

Chennai, April 13 (IANS) Even as several major temples “obeyed” the diktat of the Tamil Nadu government and avoided special worship, the laity here celebrated Tamil New Year with usual gaiety Sunday. Just as the biggest Hindu Shiva temple in Mylapore area here allowed people to offer special prayers, the famed Vishnu shrine at Srirangam, 300 km south of Chennai and considered a “heaven on earth“, celebrated the occasion with pomp.

The Meenakshi Amman temple at Madurai, 400 km south of here, steered clear of controversy and avoided any special prayer.

The government early this year declared that from now on, Pongal, the harvest festival falling Jan 14, would herald the Tamil New Year.

It prohibited special prayers on the traditional Tamil New Year day in all government-controlled temples. It also banned the reading of the Tamil almanac on the traditional New Year day in shrines.

Hindus across the state, however, celebrated the occasion regardless of the government’s fiat. Festoons were seen everywhere and feasts were held at almost every home.

A leading Hindu priest explained why the masses ignored the wishes of the DMK government.

“The year is named ‘Sarvadhari’ after Lord Vishnu, in whom all Hindus believe and the term itself means ‘one who bears all burdens’,” said Shankara Shastri, a priest consulted by many leading business houses here.

“This is as per the Hindu calendar’s 60-year cycle that has been in vogue since the time of the Vedas, of which astrology and astronomy are essential parts. And it is not just the Tamils – several Indian subcultures have a New Year almost at the same time,” Shastri told IANS.

The opposition AIADMK had exhorted its workers to celebrate the occasion and “tell the government that the people do not care for orders against Indian culture and sentiment”.

Several Bharatiya Janata Party (BJP) volunteers garlanded an icon of Mother India in Madurai and read the almanacs publicly to register their protest against the government.

“One does not know whether the people of Tamil Nadu will take a cue from the next New Year’s name ‘Virodhi’ and end up believing that the ruling DMK is their enemy, which is what the word means,” said political commentator and satirist Cho S. Ramaswamy.

மார்ச் 16, 2008

கருநா நிதியின் மற்றும் ஒரு இராமாயண அறியாமை

Filed under: Uncategorized — விருது @ 4:28 முப

பழைய ஒரு ஜோக் உண்டு. ஒரு பள்ளிக்கு வந்த இன்ஸ்பெக்டர் பசங்களைப்பார்த்து “சிவதனுசை முறித்தது யார்?” என்று கேட்டாராம்.. பசங்கள் விடை தெரியாமல் முழித்தார்களாம்.. அதைப்பார்த்த ஆசிரியர் “சார், இவிங்க எல்லாம் நல்ல பசங்க, அந்த வில்லை முறிச்சிருக்க மாட்டாங்க என்றாராம்’

இந்தியாவில் இராமாயணக்கதை எல்லோருக்கும் தெரியும். எந்த மதக்காரர்களுக்கும், எந்த சமுதாயத்திருக்கும் இந்த கதை தெரியும்.

ஒரே ஒருவரைத்தவிர. அவர்தான் மாண்புமிகு முதலமைச்சர் கருநா-நிதி..

ஒரு டிவி பேட்டியில் “எனக்கு எல்லா இராமாயணமும் தெரியும். உதாரணமாக, இந்தி இராமாயணத்தில் இராமன் சீதையின் சகோதரன்” என்று சொன்னார். அதை கனிமொழி அவர்கள் மொழி பெயர்த்தார். அந்த பேட்டியைப்பார்த்து இந்தியாவே சிரித்தது.

இராமாயணத்தில்  ராமன் ஒரு  குடிகாரன் என்று   சொன்னார்.     வடமொழியில் மது என்பதை  சாராயம் (அதாவது தமிழில் மது…) என்று “விளங்கி”க்கொண்ட   கலைஞரின்   குழப்பம் இது.      இப்படி   பொறுப்பில்லாமல் திருப்பித்திருப்பி   இராமாயணத்தை   சம்பந்தம் இல்லாத இடத்தில் எல்லாம் இழுக்கிறாரே,   ஒருவேளை   அந்த இராமாயணமும்   ராமருக்கு இவர் செய்த இழுக்கும் உள்ளூற இவரை ரொம்பவும் வதைக்கிறதோ!!!

இப்போது  ஒரு புதிய அபத்தத்தை பேசியிருக்கிறார்.    இராமர் ஆட்சியில்தான் சீதை கடத்தப்பட்டாள். அதற்காக, அந்த ஊர் போலீசையா யாராவது குற்றம் சொன்னார்கள்? என்று கேட்டிருக்கிறார். அவர் உதிர்த்த இந்த முத்து நேற்றைய போலீஸ் அகாடமி வளாக திறப்பு விழாவில்.

சீதை கடத்தப்பட்டது அயோத்தியில் அல்ல.. அப்போது இராமனும் அரசாளவில்லை.

இது கூட தெரியாமல், ஐயோ பாவம் நம் முதலமைச்சர்.

சந்தடி சாக்கில், தமிழர்களின் பிரதிநிதியாக இதுவரை தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த இராவணனையும் இகழ்ந்து தப்புசெய்தவன் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், இராமாயண நிகழ்ச்சிகள் நடந்தவைதான் என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஞானி ஐயா சொன்னதுபோல், நம் முதலமைச்சருக்கு வயதாகி விட்டதோ!!

MK gets Ramayana wrong
 
Chennai, March 15: Chief minister M. Karunanidhi appears to have got his Ramayana wrong again by implying that Sita was kidnapped during Rama’s reign. Inaugurating the state police academy and the north zone IG’s office near the Vandalur zoo on Saturday, the chief minister regretted that people often flung accusations at the police without justification.According to him public aversion for the uniformed force could be traced to the British having used it to suppress the people. While many felt that King Dharmar was a great ruler, the truth was that there was crime even then, the chief minister said.He went on to say that crime, such as Sita’s kidnap, took place even in the kingdom of Rama, forgetting that Lord Rama was neither the ruler of Ayodhya (his brother Bharatha was) nor were they living in any part of the Ayodhya kingdom when Sita was kidnapped. She was abducted from Panchavati, present Nasik in Maharashtra on the banks of Godavari far away from Ayodhya.

But drawing the analogy the chief minister said people did not ridicule the rulers of the time, but were quick to pounce on the present police for the smallest crime in society. Describing Ravana as the offender, Mr Karunanidhi unwittingly made the so-called Dravidian King the villain, when all along, his DMK and the parent DK had described the Ramayana as a ploy to assert Aryan supremacy over the Dravidian race.

Last year, at the height of the Ram Sethu controversy, the chief minister had called Rama a drunkard whereas the epic had only referred to the Ayodhya King consuming madhu which in Sanskrit refers to any sweet drink or fruit juice.

The Police Academy, built on sprawling 132 acres of land at the cost of approximately Rs 50 crore, is considered the largest project conceived by the Tamil Nadu police. Hostel facilities for the cadets, a forensic laboratory, parade ground, a cyber-crime training unit, conference halls, swimming pool, a shooting range are among the facilities available for the new recruits.

மார்ச் 11, 2008

கருணாநிதியின் இன்றைய ஜோக்

Filed under: Uncategorized — விருது @ 4:48 முப

“சென்னை நகரம் சுத்தமாகிவருகிறது. தற்போது வெளியூருக்குச் சென்றுவிட்டு, நான்கு ஐந்து மாதங்கள் கழித்து சென்னைக்குத் திரும்பினால், நகரமே மாறியிருக்கும்”

(ஆமாமாம். இங்கே கரண்ட் கட்டில் அவஸ்தைபடுவதைக்காட்டிலும், எங்காவது கொட்டாம்பட்டிக்குப் போய் இருந்துவிட்டு வாருங்கள் என்கிறார்)

“அடுத்த தலைமுறை சென்னை நகரைப் பார்க்கும்போது, இது ஜெர்மனி நாட்டின் நகரா, இங்கிலாந்து நகரா என்று வியக்கும் நிலை உருவாகும்” என்றார் கருணாநிதி

(குதிரைப்பந்தயத்தை நிறுத்துவோம் என்று அரசு 30 வருடம் முன்பு அறிவித்ததைக் கொண்டாட சென்னையில் ஒரு சிலை உண்டு. அதற்கு பக்கத்தில் கருணாநிதியின் சிலையை வைத்து அடுத்த தலைமுறையில் சென்னை லண்டனாகிவிடும் என்று அறிவித்ததற்காக இன்னொரு சிலை நிறுவலாம்.     குதிரைச்சிலையைப் பார்த்து நாம் சிரிப்பதைப்போல,  அடுத்த சந்ததியும் இதைப்பார்த்து மனமாற சிரிக்க வசதியாக இருக்ககும்.)

செய்தி ஆதாரம்:
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080310140232&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist”>http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080310140232&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.