விருது

ஜூலை 24, 2007

அப்துல் கலாமின் கறை கனவுகள்

Filed under: ஜனாதிபதி — விருது @ 6:30 முப

அலெக்சாண்டர் முதலிய பல பேரை தேர்வு செய்து அது செல்லாமல், கூட்டணிக்கட்சிகளுக்கு அலர்ஜி வந்ததால் கடைசியில் செலக்ட் செய்யப்பட்ட ஒரு சமாதான-வேட்பாளராக பதவிக்கு வந்தார் அப்துல்-கலாம்.

ஆனால், என்ன ஆச்சரியம்.    அந்த குண்டு வைக்கும் நிபுணரோ,  தன் கள்ளம் அறியாத கனவுகளில் கோட்டை கட்டினார்.    

அவர் நடந்துவந்த முகல் நந்தனவனத்தில் விளைந்த இந்தியாவின் எதிர்கால பிம்பம் நம்ப முடியாமல் இருந்தாலும்  நன்றாகத்தான் இருந்தது. 

அந்த கனவை கலைத்து நிஜத்தை எதிர்கொள்ள யாருக்குமே வாய் வரவில்லை!   அந்த அரசனுக்கு துணி இல்லை என்று சொல்ல அந்த சபையில் யாருக்கும் துணிவில்லை! 

சோனியா காந்தி பதவி மர்மத்தில் முதல் பரிட்சை கலாமுக்கு.   சோனியா அடித்த அந்தர்பல்டியில் கலாமின் கான்டிரிப்யூஷன் என்ன என்று தெரியவில்லை!  

ஆனால், சோனியாவை அவர் தடுத்து நிறுத்தவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். 

மாறாக, சோனியாவுக்கு அரசியல் வாழ்வுப்பிச்சை போட்டு அன்டோனியோவை மதர்-இந்தியாவாக்கும் காங்கிரஸ் ஜால்ராக்களுக்கு ஆதாரம் கொடுத்தவர் கலாம்.    

சோனியா பதிவியேற்பில் துடித்துக்கொண்டிருந்த பாரதத்தை நினைவுபடுத்திப்பாருங்கள்.    கதர்சட்டைகளின் கயமைத்தனமான அம்மையார் ஆராதனை ஒருபுறம்,   தோல்வி அதிர்ச்சியில் வாயடைத்துப்போயிருந்த பிஜேபியின் அலறல் கூப்பாடு மறுபுறம்.     

சோனியா பதவியேற்றிருந்தால் சுஷ்மா மயிர் இழந்திருப்பார் ஆனால்   சோனியா பல நூறு வழக்குகளில் மாட்டியிருப்பார்
சில வருடங்களானாலும் அந்த பதவியில் நிம்மதியின்றி தினம் தினம் அலங்கோலப்பட்டு சோனியா சோகமாகிப்போயிருப்பார்.

இந்த விவகாரம் தினம் தினம் பேசப்பட்டு சோனியாவின் அரசியல்வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும். 

மாறாக, நடந்தது என்ன! 

கலாமின் அறிவுரையில் சோனியா பதவியை மறுத்தார் என்றால் சோனியா இந்த இடைஞ்சல்களிலிருந்து தப்பினார் என்று பொருள். 

தப்பியது மட்டுமா,  தியாக பதக்கமும் பெற்று இன்று தன் தேசவிரோத அரசியலுக்கு திரை போட்டுக்கொண்டுவிட்டார்.   

பழிகளை சுமக்காமலே,  ரிமோட் கண்ட்ரோலில் பதவி ஆண்டு –  ஒரு கல்லிலே இரட்டை மாங்காய் கிடைத்தது. 

இதுவே, என் பார்வையில், கலாம் தேசத்துக்கு செய்த பெரிய துரோகம். 

ரஷ்யாவில் தூங்கிக்கொண்டிருந்த நாளில் கலாமின் மதிப்பு இன்னும் ரணமாகிப்போனது.  அர்த்த ராத்திரியில் அரண்டு எழுந்து பிஜேபி சர்க்காருக்கு சாவு மணி அடிக்க கையெழுத்து போட்டார், தூங்கினபடியே.  

சோனியாவுக்கு அவர் ஆற்றிய இரண்டாவது ஜால்ரா. 

மனசாட்சி இழந்த இந்த மன்னருக்கு தன் மதிப்பை அறிந்து கொள்ள மற்றொரு சந்தர்ப்பம் –   ஆதாயம் தரும் பதவி மசோதாவில்.    அப்பட்டமான இந்த அயோக்கிய மசோதாவை,  ராத்திரியில் இல்லாமல் பகலில் பார்த்ததால்,  கையெழுத்த போட கலங்கி மன்மோகனிடம் மன்றாடி திருப்பிக்கேட்டார்.  

ஆனால், அந்தோ பரிதாபம்!   சொல்வதைச்செய் என்று இவர் வகித்த ஆதாயம் இல்லாத பதவிக்கு ஆணை பிறந்தது. 
இப்படி விழுப்புண்களை பெற்று தன் பதவியை தக்கவைத்து ஒரு பிரயோஜனமும் இல்லாமல் அப்துல் கலாம் குழந்தைகளுக்கு கனவு கற்றுக்கொடுத்தார்.  

ஆனால், மந்திரிகளுக்கு மனசாட்சி கற்றுக்கொடுக்கவில்லை. 

குண்டு வெடித்த இந்த ஆசிரியர் கண்ட இடங்களில் எல்லாம் இந்தியாவின் எதிர்காலத்தை வார்த்தைகளில் வரைந்தார்.     

நிகழ்காலத்தை மறைக்க நாம் பெற்ற ஒரே உத்தி இது.
 

இத்தனை வளைந்தும் இறுதியில் இத்தாலியர்களுக்கு இவர் இனிக்கவில்லை.  

மேலும் கனவு காண சென்னையில் இடம் கொடுத்து,   காரியவாதியான ஒரு கொள்ளை குற்றச்சாட்டை  இப்போ கொண்டாடுகிறார்கள்.  

சோரம் போன இந்த பதவியில் இன்று இறுதி வாழ்க்கை வாழும் ஐயனை வாழ்த்துகிறோம்!   

ஐந்து வருடத்தில் நீங்கள் அந்த பதவிக்கு ஒரேஒரு புதுமை கொடுத்தீர்கள்.    

ஆம்,  ராஷ்டிரபதி உரையில் பவர் பாயிண்ட் இடம் பெற்றதே இவர் செய்த பெரிய சாதனை.

மற்றதெல்லாம் மாக்கல் கோலமாய் பிரதிபா மழையில் அழிந்து போகும். 

அதனால் என்ன,  நாளை முதல்,  நானோ டெக்னாலஜியில் கனவு தொடரும்.

அங்கு டெல்லியிலோ, முகல் கார்டனில் மராடி பஜனை -அயோக்கியர்களையும் வாழவைக்கும் அன்னை அன்டோனியோவை வாழ்த்தி!

Advertisements

ஜூலை 21, 2007

பிரதிபா பாட்டில் – வெற்றி காட்டுவது என்ன?

Filed under: அரசியல்,ஜனாதிபதி — விருது @ 6:08 பிப

ஜனாதிபதி என்ற பதவிக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும். அந்த அம்மையாரின் மீதான குற்றச்சாட்டுகளும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான உண்மையான காரணங்களையும் நாம் நன்கு விமர்சித்து இருந்திருந்தாலும், இந்த வெற்றிக்கு வாழ்த்துகள்.

பிரதிபா பாடில் அவர்கள் வெற்றிபெற கூடாது என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன். அவரின் வெற்றி இந்த பதவிக்கு உகந்தது அல்ல என்று தீர்க்கமாக நம்பியவன்.

அவரின் இந்த வெற்றியில் நம் எண்ணங்கள் என்ன?

இனி நம் கவலை எல்லாம், இந்த பதவியில் இந்த அம்மையார் எப்படி
நடந்துகொள்கிறார்கள் என்று பார்ப்பதிலேயே இருக்க வேண்டும். பழையதை நீடித்து மேலும் தரக்குறைவாக அவரை எதிர்க்க முடியாது. அதை கைவிட வேண்டும்.

எனக்கென்னவோ, பிஜேபி சந்தர்ப்பம் வாய்ந்தால்பிரதிபாபாட்டீல் அவர்களைகொண்டாடும் என்றுதான்தோன்றுகிறது. கலாம் ஜனாதிபதி ஆவதற்கு முதலில் எதிர்ப்பு காட்டிய காங்கிரஸ் பின்னால் கலாமை எப்படி பிஜேபி விரோத செயல்களில் உபயோகித்துக்கொண்டது என்று யோசித்தால் நான் சொல்வது புரியும்.

பிஜேபி சோனியாவுக்கு காட்டிய எதிர்ப்பையே கை கழுவி விட்டார்கள் என்பதை
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்… அப்படி இருக்கும்போது, இந்த அம்மையாரின் ஊழல்களை மறந்துவிட்டு கொண்டாட எத்தனை நாள் பிடிக்கும், இவர்களுக்கு? நாளையே பிஜேபி வென்று அம்மையார் இவர்களை பதவிபிரமாணத்துக்கு அழைத்தால் ரொம்பவுமே பிரதிபாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவார்கள்.
நம் இரண்டாவது கவலை. இந்த கோர்ட் கேஸ்கள் மேலும் தொடருமா என்பது.
ராஷ்ட்ரபதி என்பதால் இந்த கேஸ்கள் முடக்கப்படும். இதனால், இந்த கேஸ்களின் உண்மை நிலை – அது இது ஜோடிக்கப்பட்ட கேஸ் ஆக இருந்தாலும் சரி, அல்லது – பிரதிபா குற்றவாளியாக இருந்தாலும் சரி – உண்மை நிலை வெளியே வரவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். அது முடியாமல் போனது.
சோனியா என்னமோ பெரிய திட்டம் போட்டு இந்த அம்மையாரை கொண்டுவந்திருக்கிறார் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், இதை நான் நம்ப மாட்டேன். வழக்கம்போல, இசகு பிசகாக சோனியா மாட்டிக்கொண்டபோது எடுத்த ஒரு குருட்டாம் போக்கான முடிவுதான் இது.

சிவ்ராஜ் பாடில் மாதிரி கூஜாக்களை ரொம்பதான் சோனியா ப்ரமோட் செய்து இந்த பதவிக்கு கொண்டுவரப் பார்த்தாள். ஆனால், நடக்கவில்லை. அதனால், வழக்கமான – சோனியா பல்டி அடித்து ஒரு பெண்மணி என்று ஒரு அஸ்திரத்தை போட்டுவிட்டாள். அதனால், சோனியா பிரதமராக இது ஒரு முஸ்தீபு என்று சொல்வதையோ அல்லது ஒரு ரப்பர்ஸ்டாம்ப் வேண்டும் என்று இந்த அம்மையாரை தேர்வு செய்தார்கள் என்று சொல்வதையோ நான்ஒத்துக்கொள்ளவில்லை.
ஒரு பைசாக்கு பிரயோஜனமில்லாத ஒரு பதவியில் இந்த அம்மையார் ஒன்றையும் பெரிதாக செய்துவிட போவதில்லை. எனக்கென்னமோ, இந்த அம்மையார் பேச கூட பயப்படுகிறார்கள் – அல்லது தெரியவில்லை என்று தோன்றுகிறது. என்னமோ, காரணமில்லாமல் நம் பொம்மை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் ஞாபகம்வருகிறது. போகப்போக பார்க்கலாம்.
பிஜேபி தன் இயல்பை மீறி அல்லது மறைத்து அரசியல் பண்ணப்பார்க்கிறது. தன்
இயல்பான தொகுதியை taken for granted பண்ணிக்கொண்டு, சிறுபான்மையினருக்கு வால் பிடிக்கிறது. இதை நாம் மைனாரிடி நிறுவனங்கள் மசோதாவிலிருந்து பல தடவை பார்த்தோம். இதனால், எதிர்மறையான விளைவே ஏற்படும். அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையாகிவிடும். ஷேகாவத் முதலான தேசீய தலைவர்களை தன்னுடையவர் என்று சொல்ல வெட்கப்படும் இந்த கட்சி ஒரு கேலிக்கூத்து.

பிரதிபா ஒரு ஊழல்காரி.     உண்மைதான்.     அதனால்,  அவர் நாசகர வேலையில் ஈடுபடுவார் என்று சிலர் சொல்கிறார்கள்.

நான் எல்லா –   சரி,  ஒரு முக்காலே மூணு வீசை –  அரசியல்வாதிகளுமே ஊழல்பேர்வழிகள் என்று சொல்கிறேன்.     இப்பொழுதெல்லாம்,   முழு அரசியல்வாதிகளை கவர்னர் ஆக்குவது தான் சர்வ சாதாரணம்.     பெங்களூரில் தோற்றவுடன் நம் கிருஷ்ணாவை தூக்கி அடிக்க பம்பாயில் கவர்னர் உத்யோகம் கொடுக்கிறார்கள்.    இன்னும் கொஞ்ச நாள் போனால்,   தேர்தலில் நிற்கும் போட்டி வாக்காளர்களுக்கு டெபாஸிட் போனால்,  அவர்களை சமாதானப்படுத்த கவர்னர் வேலை கொடுப்பார்கள்.    கொஞ்ச நாளில்,  கவர்னர் வேலையும்  கூட்டணி கட்சிகளின் கொள்ளையில் பங்கு போடப்பட்டு,   ராமதாசுக்கு ரெண்டு,   கருணாநிதிக்கு ஐந்து,  லல்லுவுக்கு மூன்று என்று ஆகிவிடும்.    ராஷ்ட்ரபதி பதவிக்கும்  தன் வைப்பாட்டி பெண்ணையோ,   மருமகன் பையனையோ குந்த வைப்பார்கள்,  பகிரங்கமாக.    கூட்டணியில் ஐந்து வருஷம் ராஷ்ட்ரபதி பதவி என்பது போய் மாயாவதி-கல்யாண்சிங் போல காடாறு மாதம்-நாடாறு மாதம் என்று பிரித்துக்கொள்வார்கள்.    ராபரி மாதிரி தன் பெண்டாட்டியோ,  அல்லது எம்ஜிஆர் மாதிரி தன் கொள்கை பரப்பையோ ராஷ்ட்ரபதியாக்கி ரிமோட் வேலை செய்வார்கள்.

பயமாக இருக்கிறதா,   ஆனால், நடக்கப்போகிறது.

இப்போதே ராஷ்ட்ரபதி பதவிக்கு இட ஒதுக்கீடு எழுதப்படாமல் இருக்கிறது.    ஒரு  துலுக்கன் என்ற ஒரே தகுதியை தேடி இன்று உப ஜனாதிபதி எல்லா கட்சிகளாலேயும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதனால்தான் சொல்கிறேன்,  பிரதிபா ஒரு சாதாரண அரசியல்வாதி.   அதுகூட சரியாக ஜயிக்க தெரியாத ஒரு அரைகுறை அரசியல்வாதி.    மாட்டிக்கொண்டு பல கேஸ்களில் முழிக்கும் ஒரு அரசியல்வாதி.     அவர் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் பண்ண நம் திராவிட கட்சிகளிடம் பாடம் படிக்கவில்லை என்பதால் அவர் மட்டமாக ஆகிவிட மாட்டார்.   மற்ற ஏதாவது ஒரு அரசியல்வாதி வந்திருந்தால் தேசத்துக்கு என்ன லாபமோ, நஷ்டமோ அதுதான் இப்போதும் நடக்கப்போகிறது.

பிரதிபா போட்டுக்கொண்ட முக்காடு இன்று தேசத்தின் தலையில்!

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.