விருது

மார்ச் 11, 2008

கடலில் கரைந்த காசு

சேது சமுத்திர திட்டத்தில் தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துபோய் விட்டதால், இதுவரை செலவு செய்த பணம் அனைத்தும் வீண்  

 தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துவிட்டது: சேது திட்டம் பற்றி விஞ்ஞானிகள்

 தூத்துக்குடி, மார்ச் 10: சேது சமுத்திர திட்டத்தில் தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துபோய் விட்டதால், இதுவரை செலவு செய்த பணம் அனைத்தும் வீண் என, விஞ்ஞானிகள், சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரி ஜான் ஜேக்கப், ஒய்வு பெற்ற கடற்படை கேப்டன் எச். பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆர்.எஸ். லால்மோகன் ஆகியோர் தூத்துக்குடியில் திங்கள்கிழமை கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

சேது சமுத்திர கால்வாய் திட்டம் பொருளாதார ரீதியிலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும், சுற்றுச்சூழல் பாதிப்பிலும் பயன்படாத திட்டம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு பின்னோக்கி சொன்றுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.

சேது சமுத்திர திட்டத்தால் இவ்வளவு லாபம் என கணக்கு காட்ட அரசு தயாரா. அவ்வாறு அறிவியல் ரீதியாக கணக்கு காட்டினால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம்.

சேது சமுத்திர கால்வாய் வழியாக கப்பலை இயக்குவோம் என, இதுவரை எந்த கப்பல் நிறுவனமும் உறுதியளிக்கவில்லை. ஏனென்றால் இந்த வழியாக யாரும் கப்பலை இயக்கப்போவதில்லை. சேது கால்வாய் வழியாக கப்பலை இயக்கினால் நஷ்டம்தான் ஏற்படும்.

கடந்த 30 மாத காலம் சேது சமுத்திர கழகம் அல்லது மத்திய கப்பல் அமைச்சகம் அல்லது தூத்துக்குடி துறைமுக சபை ஆகியவற்றால், இதுவரை அகழ்வு செய்யப்பட்ட உண்மையான அளவு குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இதுவரை தோண்டியதாக கூறப்படும் கால்வாய் பகுதியும், பணிகள் நிறுத்தப்பட்ட இந்த சில மாதங்களில் முழுமையாக தூர்ந்து போய்விட்டது.

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து பணிகளை மீண்டும் தொடங்கினாலும், ஆரம்பத்தில் இருந்தே மீண்டும் பணிகளை செய்ய வேண்டும். எனவே, இதுவரை இந்த திட்டத்திற்கு செல்வு செய்யப்பட்ட பணம் முழுவதும் வீண். இது யாருடைய பணம். மக்களின் வரிப்பணம் தான்.

இதுபோல இந்த திட்டமே வீண் தான். மக்கள் பணம் ரூ. 2,400 கோடியை வீணடிக்கிறார்கள். கால்வாய் தோண்டும் பகுதி புயல், மழை மிகுந்த பகுதியாகும். இலங்கையில் ஒரு பலத்த மழை பெய்தால் கூட போதும், கால்வாய் தூர்ந்து போய்விடும்.

பாதுகாப்பு விஷயத்திலும் இந்தத் திட்டம் ஆபத்தான திட்டம்தான். அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு இந்த வழியாக போர்கப்பல்கள் செல்ல வேண்டியிருந்தால் மிகவும் மெதுவாக தான் செல்ல முடியும். அதுவே எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

மேலும், இந்த வழியாக தான் கப்பல் வரும் என எதிரிகள் குறிபார்த்து தாக்குவதற்கும் வசதியாகிவிடும். எனவே, கப்பல் படையின் எந்த கேப்டனும் சேது கால்வாய் வழியாக கப்பலை செலுத்த விரும்ப மாட்டார்.

நாங்கள் அறிவியல் பூர்வமாக பேசுகிறோம். ஆனால், அரசாங்கம் விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மதரீதியில் மட்டுமே பயப்படுகிறது.

எந்த பயனும் இல்லாத, மக்கள் பணத்தை வீணடிக்கிற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த திட்டத்தை இனிமேல் தொடரக்கூடாது. இத்துடன் அரசு கைவிட வேண்டும் என்றனர் அவர்கள்.

பேட்டியின் போது, கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு உறுப்பினர் ஜீவா, அகில இந்திய மீனவர் சங்க தலைவர் ஜி. அண்டன்கோமஸ், நிர்வாகிகள் ஜான் பி. ராயன் ஆகியோர் உடனிருந்தனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080310143534&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0

Advertisements

செப்ரெம்பர் 30, 2007

மக்களை இம்சிப்பதே இந்த அரசின் நோக்கம் – சோ பேட்டி

http://dinamani.com/NewsItems.asp?ID=DNE20070929223549&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist

சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை. ராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்திருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சேபனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கியமாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற்குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்பதில்தானே விவாதமே?

ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப்பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்களின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்சனம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூடாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்திலும் செயல்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா?

ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரியாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவையில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (அழ்ஸ்ரீட்ஹங்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் நன்ழ்ஸ்ங்ஹ் ர்ச் ஐய்க்ண்ஹ) கூறுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (எங்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் நன்ழ்ஸ்ங்ஹ் ர்ச் ஐய்க்ண்ஹ) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல்லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர்மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறையின் ஆராய்ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம். தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இல்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.

விஷயம் இப்போது திசைமாறி இறை நம்பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது. ராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்படும் கடவுள்கள் கடவுள்கள்தானா? ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை? ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங்குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன? அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன? கண்ணகியின் வரலாற்றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது? அது நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதேபோல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை?

நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே?

இதுவரை நான் ராமர், ராமர் சேது என்பதெல்லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என்றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (ஙன்ப்ற்ண் ம்ங்க்ண்ஹ ல்ழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய்)-ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலுவான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (ஐய்ற்ங்ழ்ய்ங்ற்) கிடைக்கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளிவைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.

ராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவதில் என்ன தவறு?

கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம். எல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூதிகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட்டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக்குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே? செய்து விடுவார்களா? வளர்ச்சிதானே? அதே போல, இதுவும் இடிக்கப்படக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.

மீதியை தினமணி சைட்டிலேயே படித்துக்கொள்ளுங்கள்.

Srilanka supports Ram Sethu

A view is gaining currency in Sri Lanka, particularly in Buddhist circles that the country should support the call emanating in from India for the protection and preservation of Ram Sethu – the historical rock bridge also called by Westerners as Adam’s Bridge – linking the island with India.

……………….

…………………..

As Sri Lankan journalist Ananth Palakidnar says,” There is no India without Krishna and Rama and it could be very well mentioned though the country consisted of several ethnicities with more than 20 languages spoken, the names Krishna and Rama are household names among over 90 percent people in the Indian sub-continent.” (Friday Sept 21-27, 2007 ).

It is unfortunate that some Tamil Nadu politicians do not seem to appreciate the appeal of Rama and Krishna within and beyond India. This is a good opportunity for the Buddhists of Sri Lanka to show empathy and express solidarity with India’s Hindus on a matter that which is charged with emotion and spirit that also a touches a sensitive cord in Sri Lanka .

As a participant in the popular Sinhala television discussion program Doramandalawa,asked recently, “What’s wrong if people worship the sun, moon and trees as gods?”

COMPLETE STORY TO BE FOUND HERE…

http://www.asiantribune.com/index.php?q=node/7577

செப்ரெம்பர் 20, 2007

திராவிட முக்காடு கழகம்

முக்காடு

இது இந்த வார துக்ளக்கின் கார்ட்டூன்    http://www.thuglak.com/thuglak/

 இது பற்றிய என் போனவார பதிவு  முக்காடு போட்டுக்கும் கருணாநிதி

செப்ரெம்பர் 15, 2007

முக்காடு போட்டுக்கும் கருணாநிதி

“ராமாயணம்,  ராமர் என்ற கதாபாத்திரம் என்பதெல்லாம் கற்பனை.   ஆரிய-திராவிட போராட்டத்தை மையப்படுத்தி,  கற்பனையாக எழுதப்பட்டதே ராமாயணம்” என்று பல்லாண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது.  இதைச்சொன்னவர் யாரென்று தெரியுமா?  பண்டித ஜவஹர்லால் நேருதான்.   ஆனால்,  அவர் கூறியதே தூக்கி எறிந்துவிட்டு,  அதற்கு மாறாக தற்போது செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்?

…..

சேது சமுத்திர திட்டம் தொடர்பான அணுகுமுறையில் ஒரே நாளில் மாற்றம் ஏன்?  ஆட்சிப்பொறுப்பில் இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.  ஆட்சி கிடக்கட்டும்.    சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக ராமர் பாலம் என்ற பெயரால் சர்ச்சை ஏற்படுத்துவதை நம்முடைய பகுத்தறிவுக்கொள்கை,  சுயமரியாதை அனுமதிக்காது.

……….

பாஜக, இந்துமகா சபை நடத்தப்பட வேண்டுமாம்.   இதற்காக திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏமாற வேண்டுமா?  ராமர் பாலத்தை எப்படியாவது காப்பாற்றுவதற்காக பேரம் பேசும் அணுகுமுறை இது.

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஜெயலலிதா சேது சமுத்திரத்திட்டத்தை தடுக்க கடவுளைக் காரணம் காட்டி வழக்குத்தொடர்ந்துள்ளார்.

சுயமரியாதைக்கொள்கைக்காக பாடுபடும் நாங்களெல்லாம் உயிருடன் இருக்கும்போதே இந்நிலை.  இதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்.   முக்காடு போட்டுக்கொள்கிறோம்.

—   கருணாநிதி நேற்று 14 செப் சேலத்தில் பேசியது

செப்ரெம்பர் 13, 2007

Lord Ram’s bones

This dhimmi government headed by the bald fake leader Manmohan Singh
is becoming more and more anti-national and crude.

The affidavit filed by ASI is ridiculous and outrageous.

These anti-hindu dhimmis declare that “there is no evidence that Lord Ram existed”.  Good enough!  There is no evidence that no God existed!  Destroy all temples, mosques and churches!

The scoundrals in the government have got the nerve to declare to the
court that “There is no evidence to the existance ever of Lord Ram”.

The affidavit – as reported in various papers including Hindu today
nonsensically asks this query

“The existence of human remains, whether in the form of bones, etc, or in the form of other artefacts, is primary to prove archaeologically the existence and veracity of a historical fact. No such human remains have been discovered at the site of the formation known as Adam’s Bridge.””.  

Is this a sick joke from these idiots?   Are these guys sane?

Do you think Lord Ram was killing all apostates by other “holy persons” and burying them in the Bridge?

Will this government similarly declare that the hair of muhammad in the mosque is not an evidence and demolish this mosque?   What evidence is today possible if the millenia events are re-questioned today?  

Did these fools expect some “human remains” in the sethu today?

I believe that this is the death nail for this government.  

I feel that they
touched a beehive now. If the same logic goes, we can not prove
anything except the existence of dinoceras.     

 Extending the logic, in future, we might be asked to prove the feelings like love, devotion,
fear, sadness et al.

Anyhow, this sort idiotic arguments can only be tried on Hindu religion. 
 

I know that the government has now realized the gaff and Sonia is in face-saving-mode asking the government to withdraw the affidavit.

But,  The damage has been done!

Jay

ps : also please read my post on why this project is not good for the country – with or without this bridge!

ஓகஸ்ட் 2, 2007

சேதுசமுத்திர திட்டம் – இந்தியாவின் கேடு

சேதுசமுத்திர திட்டத்தால் கப்பல்களின் பயண நேரம் மிச்சப்படும் என்று அரசாங்கம் சொல்கிறது.  36 மணி நேரம் மிச்சப்படும் என்று பாலு சொல்கிறார்.  ஆனால், உண்மை என்ன?

இந்த திட்டத்தின் விரிவான அறிக்கையை பார்த்தால் அதில் கண்டபடி,   கப்பல்களின் பயண நேரம் அதிகபட்சம் 30 மணி நேரம் மிச்சமாகலாம் – அதுவும் தூத்துகுடியிலிருந்து சென்னைக்கு வரும் கப்பல்களுக்கு மட்டும்.  

இந்த விரிவான அறிக்கையை பார்த்தால் – இந்தியாவின் கிழக்குகரையிலிருந்து மேற்கு கரைக்கு செல்லும் கப்பல்களைத்தவிர யாருக்கும் ஒருபெரிய லாபமும் இதனால் இல்லை.     

ஐரோப்பா, ஆப்பிரிக்காவிலிருந்து வரும் கப்பல்களுக்கு பயண சேமிப்பு வெறும் 8 மணி நேரம்தான்.     இந்த விவரம், இந்த திட்ட விரிவு அறிக்கையில் இல்லை (இந்த அறிக்கை திட்டம் நடத்தும் எல்&டி நிறுவனம் தயாரித்தது).  

அரசாங்கத்தின் / எல்&டியின் திட்ட அறிக்கையில்  எல்லா கப்பல்களும் தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரியிலிருந்து கிளம்புவதாக அனுமானம் செய்திருக்கிறார்கள்.  ஆனால், அது உண்மை அல்ல. 

கன்னியாகுமரி அல்லது சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல்களுக்கு பயண நேரம் – 10 முதல் 30 மணி நேரம் மிச்சமாகும்.  அதற்கு மாறாக,     மொரீஷியஸிலிருந்து கல்கத்தா செல்லும் கப்பல்கள் போல சில பயணங்களுக்கு பயண நேரம் அதிகமாக ஆகுமே தவிர குறையாது.

இந்த திட்ட அறிக்கையின் படி,  ஒரு கப்பல் 18,000 டாலர்  (7.4 லட்சம் ரூபாய்) மிச்சம் (எரிபொருள் சேமிப்பு) பிடிக்கும். 

இந்த திட்ட அறிக்கையில்,  இந்த சேமிப்பின் 50 சதவீதத்தை கட்டணமாக வைக்கப்போவதாக சொல்கிறார்கள்.  

 ஆனால், ஐரோப்பா, ஆப்பிரிக்காவிலிருந்து வரும் கப்பல்களுக்கு இந்த திட்டத்தால் வெறும் 3,000 டாலர் (1.6 லட்சம்) மட்டுமே மிச்சமாகும்.

அதனால், இந்த திட்ட அறிக்கையின்படி கட்டணம் போட்டால்,  இந்த மாதிரி ஐரோப்பா, ஆப்பிரிக்க கப்பல்களுக்கு உண்மையில் 5,000 டாலர் (2 லட்சம் ரூபாய்) ஒவ்வொரு பயணத்துக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. 

இந்த ஐரோப்பா, ஆப்பிரிக்க கப்பல்கள் இந்த திட்டத்துக்கு முக்கியமா என்றால், ஆமாம் மிகவும் முக்கியம்.   திட்ட அறிக்கையில் 65% இந்த மாதிரி கப்பல் போக்குவரத்தைத்தான் அனுமானித்திருக்கிறார்கள். 

ஆதாயம் இல்லாததால், இந்த 65% கப்பல்கள் இந்த திட்டத்தை ஒதுக்கிவிடும். 

  சரி, கட்டணத்தை குறைக்கலாம் என்று பார்த்தால், பிறகு  இந்த திட்டம் போண்டியாகி விடுகிறது.   இந்த திட்டத்தின் வருமானம் வருஷத்துக்கு 2.6%  அளவே தருகிறது.  

இந்த வருமானத்தை வைத்து சாதாரண பொதுநல திட்டங்கள் எதுவுமே எடுத்துக்கொள்ள மாட்டாது.    இந்த திட்டம் சரிவர அளக்க்ப்படாமல் அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டதால்,    இதில் இந்தியா மிகுந்த நஷ்டப்படும்.

இந்த திட்டத்தின் பல அடிப்படை அனுமானங்கள் மிகவும் தவறானவை.

இந்த திட்டத்தால் அரசுக்கு ஒரு பைசா திரும்ப கிடைக்கப்போவதில்லை.   மாறாக,  வருடா வருடம் மேலும் நஷ்டம் ஏற்படும்.   கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் வருஷம் நஷ்டம் ஏற்படும்.

இதைவிட, வருடம் இந்த 250 கோடி ரூபாயை தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களை மேம்படுத்தவும்,    இங்கு பயணிக்கும் கப்பல்களுக்கு சாதாரண கட்டணங்களை இன்னும் குறைக்கவும் வழி செய்தாலே மிகுந்த லாபம் ஏற்படும்.

– செய்திகளுக்கு ஆதாரம் எகனாமிக் டைம்ஸில் ஜாகப் ஜான் எழுதிய அறிக்கை. 

அரசியல் லாபத்திற்காக யோசிக்காமல் செய்த இந்த திட்டம் முதலும் கோணல், முழுதும் கோணல்.   கருணாநிதியின் நினைவாக அவர் அரசியல் வாழ்வில் மறைந்த போதும் அவர் பெயருக்கு அவமானமாக இந்த திட்டம் விளங்கப்போகிறது.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.