விருது

ஜூன் 4, 2008

கருநாநிதி விழாவில்

முன்பெல்லாம் திராவிட கழகங்களின் பொதுக் கூட்டத்தில் வேட்டி கிழியும்.   இல்லை,  சட்டமன்றத்திலும்,  கவுன்சில் குழுக்களிலும் வேட்டி கிழியும்.   பின்னர்,  (ப) குத்தறவின் வளர்ச்சியால் தமிழ்நாட்டு எலெக்ஷனில் கழக கண்மனிகளின் வேட்டி கிழியும்.
 
ஆனால்,  நேற்று கருநாநிதியின் 85 வயசு பிறந்தநாளில் திறண்ட கழகத்தொண்டர்களின் வேட்டி கிழிந்தது.   கோபாலபுரம் வீட்டில் வரிசையில் நின்ற தொண்டர்களின் அடிதடியில் பலருக்கு வேட்டி கிழிந்தது.
 
இப்படி வேட்டி கிழிந்தவர்களில் பரிதாபமானவர் பரமசிவம்.   இவருக்கு கரைவேட்டியுடன் கையில் வைத்திருந்த 20000 ரூபாய் ரொக்கமும் அபேஸ்.  
 
கலைஞரின் கண்மணிகள் நன்றாகவே தேறிவிட்டார்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
 
கோபாலபுரத்தின் தலைவரின் முன்னாலேயே இதை நடத்திக்காட்டி கலைஞரை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க திட்டமோ என்னவோ!
 
கிழிந்த வேட்டியுடன் பரமசிவம் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.   இது டைம்ஸ் செய்தி.
 
பரமசிவம் ஒருவிதத்தில் அதிர்ஷ்டக்காரர்.    ஏனென்றால் மற்றவர்கள் கோபாலபுரத்தில் செல்போனை பறிகொடுத்திருக்கிறார்கள்..     குறைந்தது நாலு பேரின் செல் போன் கோபாலபுரத்தில் திருடப்பட்டதாக டைம்ஸ் செய்தி வந்திருக்கிறது.     ஆனாலும்,  அவர்களை போலிஸில் புகார் கொடுக்க கூடாது என்று அங்கிருந்த மற்ற கண்மணிகள் அன்போடு மிரட்டி அனுப்பி விட்டார்கள்.
 
அவர்கள் சொல்வதும் நியாயம்தான்.  ஏகப்பட்ட புகார் என்றால் போலிஸூக்கும் சிரமம்!    அப்பறம் போலிஸ் ஏதாவது ஏடாகூடமாக கண்டுபிடிக்க அதை யாராவது ஒட்டுகேட்டு சிடி போட்டு வெளியிட பெரிய்ய விவகாரமாய் போய்விடும் என்று பயந்திருப்பார்களோ என்னவோ!
 
இப்படி செல்போனை கலைஞரின் பிறந்தநாளுக்காக அர்ப்பணித்தவர்களில் நம் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் திரு. ரமேஷ் லக்கானியும் ஒருவர்.      காலை 9.30 மணிக்கு க்யூவில் காத்திருந்தார் இவர்.  கலைஞரை “தரிசித்து விட்டு” வந்தபோது போன் காணவில்லை.   இவர் விலைமதிப்பான 16000 மொபைல் போனை யாரோ சுட்டுவிட்டார்கள்.
 
“வீட்டுக்குள் நுழையும் போது இருந்தது.   வெளியே வந்தேன் காணவில்லை” என்று அவர் சொன்னதாக டைம்ஸ் செய்தி.
 
கோபாலபுரத்துக்கு போகிறோம் என்றால் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க கூடாதா!   இவர் என்ன சாயிபாபாவா –  பயமில்லாமல் அங்கே போவதற்கு!
 
ஊருக்கெல்லாம் ஒளி கொடுத்தாலும் விளக்கின் மூலம் இருட்டாய் இருக்கும் என்பார்கள்.   ஆனால்,  நம் கலைஞரின் ஆட்சியில் அந்த குறை கிடையாது.   எல்லா இடத்திலும் நடப்பது அவர் வாசலிலும் நடக்கிறது.  
 
தமிழன் துப்பு கெட்டவன் என்றும் இவனை இப்படியே விட்டுவிட்டுப்போய் விடுவேனோ என்றும் இனிமேல் அவர் கவலைப்பட வேண்டாம்.  கண்மணிகள் நன்றாக தேறிவிட்டார்கள்.
 
இனிமேல் கழகத்தோடு நடக்கும் தேசிய பொதுக்கூட்டங்களில் மன்மோகன் சிங்கின் தலைப்பாகையை யாராவது கிழிக்காமல் இருக்க வேண்டும். 

வாழ்க தமிழன்!

Advertisements

11 பின்னூட்டங்கள் »

 1. அன்புள்ள ஜயறாமன் உங்கள் இடுகை மிக நண்கு உள்லது. தமிழில் எனது கன்னி முயர்ஷி

  பின்னூட்டம் by Sait — ஜூன் 4, 2008 @ 11:55 முப | மறுமொழி

 2. Sait அவர்களே, வருகைக்கு நன்றி

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூன் 4, 2008 @ 11:58 முப | மறுமொழி

 3. அருமையான பதிவு ஜெயராமன்… 🙂

  பின்னூட்டம் by ஸ்ரீராம் முரளி — ஜூன் 4, 2008 @ 4:51 பிப | மறுமொழி

 4. ஸ்ரீராம் முரளி அவர்களே,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  கழகம் திருடர்களின் கூடாரம் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே சாட்சி.

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூன் 4, 2008 @ 5:48 பிப | மறுமொழி

 5. அன்புள்ள ஜயராமன்
  என் ஆழமான கோபத்தை அப்படியே எழுத்திலே கொண்டுவந்து பதிவு செய்ததற்கு வந்தனமு.
  நன்றி.
  அன்புடன்.
  ஸ்ரீனிவாசன்.

  பின்னூட்டம் by Srinivasan — ஜூன் 5, 2008 @ 2:28 முப | மறுமொழி

 6. ஸ்ரீனிவாசன்,

  கருநாநிதி பிறந்தநாளுக்கு காலங்கார்த்தால எல்லா ஐ.ஏ.எஸ் ஆபீசர்களும் கையில பூச்செண்டோடு கோபாலபுரத்துல தேவுடு காக்கிறார்கள். கருநாநிதி அரசு ஏற்பட்ட பிறகும் உடனே அவர் வீட்டுக்கு போய் சல்யூட் போட்டுவிட்டு வரவேண்டுமாம். இல்லாவிட்டால் நம்மை தண்ணியில்லாத காட்டுக்கு – சென்னைக்கு அல்ல – மாத்திடுவாரு!

  படத்தை திணமனியில பார்த்து எரிச்சலாய் இருக்கிறது. என்ன ஒரு காக்காய் கூட்டம்.

  இவனுக இப்படி க்யூல எதுக்குமே நின்னுருக்க மாட்டானுக. தன் பசங்க அட்மிஷனுக்கு நின்னுருப்பாங்கலா, திருப்பதி பெருமாள் தரிசனத்துக்கு நின்னுருப்பாங்கலா, இல்லை அட்லீஸ்ட் ஒரு ரயில்வே ரிசர்வேஷனுக்கு நின்னுருப்பானுகலா.

  இங்க வந்து கருநாநிதியின் கழக திருடர்களிடம் செல்போன், வேட்டி கிழித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூன் 5, 2008 @ 2:33 முப | மறுமொழி

 7. // தன் பசங்க அட்மிஷனுக்கு நின்னுருப்பாங்கலா, திருப்பதி பெருமாள் தரிசனத்துக்கு நின்னுருப்பாங்கலா, இல்லை அட்லீஸ்ட் ஒரு ரயில்வே ரிசர்வேஷனுக்கு நின்னுருப்பானுகலா. //
  இது குறித்த என்னுடைய கருத்து, 😉
  1. தன் பசங்க அட்மிஷனுக்கு நின்னுருப்பாங்கலா, ஒரு ரயில்வே ரிசர்வேஷனுக்கு நின்னுருப்பானுகலா. — இந்த இரண்டும் அதிகாரத்தால் நிற்க வேண்டிய அவசியமின்றி கிடைத்து விடுகிறது நம் ஜ(பண)நாயகத்தில்…
  2. திருப்பதி பெருமாள் தரிசனத்துக்கு நின்னுருப்பாங்கலா — இதை நாம் குறை கூறக்கூடாது.. ஏனென்றால் இது பகுத்தறிவு(???).. மற்றபடி நோன்பு கஞ்சி குடித்தல் போன்றவை எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை… “மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி”..

  இந்த இடத்தில், “ஸ்தாபன காங்கிரஸை” சேர்ந்த மறைந்த முதல்வர் திரு. காமராஜ் ஒரு IAS அதிகாரிக்கு வழங்கிய அறிவுரைகள் தான் நினைவுக்கு வருகின்றன..

  பின்னூட்டம் by ஸ்ரீராம் முரளி — ஜூன் 5, 2008 @ 5:47 முப | மறுமொழி

 8. //கோபாலபுரத்துக்கு போகிறோம் என்றால் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க கூடாதா! இவர் என்ன சாயிபாபாவா – பயமில்லாமல் அங்கே போவதற்கு//

  சாயிபாபாவையே நக்கலடிக்கிறீங்களே 🙂

  பின்னூட்டம் by சேவியர் — ஜூன் 5, 2008 @ 6:47 முப | மறுமொழி

 9. சேவியர் ஐயா,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  /// சாயிபாபாவையே நக்கலடிக்கிறீங்களே ///

  உங்களுக்கு காமாலைக்கண்ணோ இன்று? அல்லது தமிழில் தகராறா?

  பாபா என்ன ஆலேலூயா கூட்டமா, கிண்டல் அடிப்பதற்கு!

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூன் 5, 2008 @ 6:52 முப | மறுமொழி

 10. அட்டகாசமான பதிவு ஜயராமன்.

  // ஊருக்கெல்லாம் ஒளி கொடுத்தாலும் விளக்கின் மூலம் இருட்டாய் இருக்கும் என்பார்கள். ஆனால், நம் கலைஞரின் ஆட்சியில் அந்த குறை கிடையாது. எல்லா இடத்திலும் நடப்பது அவர் வாசலிலும் நடக்கிறது. //

  இது, இது பஞ்ச்.

  பின்னூட்டம் by ஜடாயு — ஜூன் 5, 2008 @ 10:49 முப | மறுமொழி

 11. அன்புள்ள ஜயராமன்,
  வணக்கம்.
  மஹாபாரதம் மீண்டுமொரு முறை இந்த யுகத்திலே அரங்கேறிக்கொண்டு இருப்பதாக நான் பலதடவை நினைதுகொள்ளுகிறேன். துற்புத்தியின் பிறப்பிடமாக, கையாலாகத ஆசை பீடித்த முதிர் கிழவனாக வாழ்ந்து புலம்பும் திருதரஷ்டரன் பாத்திரமாக கருணாநிதியை உருவகப்படுத்திக்கொண்டோமானால், நடப்பவைகளை சுலபமாக புரிந்து கொண்டு அமைதியாக நம் பொழுதுகளை வாழ்ந்து கழிக்க முடிகிறது. வீணாக சஞ்சலப்ப்பட்டு கோபம் படுவதிலே பிரயோஜனமில்லை என்று மீண்டும் இன்று தோன்றுவதாலே, இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
  நன்றி.
  அன்புடன்
  ஸ்ரீனிவாசன்.

  பின்னூட்டம் by Srinivasan — ஜூன் 6, 2008 @ 2:57 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: