விருது

மே 27, 2008

சென்னை உட்லண்ட் ஹோட்டல் விவாகாரத்தின் பிண்ணனி

Filed under: Uncategorized — விருது @ 6:33 முப
//////  நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவனாக அறியப்பட்டவன். 38 ஏக்கர் நிலம், கடந்த 180 ஆண்டுகளாக வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது.

நகரில் தூய்மையான காற்று வீசவும், பசுமையான சுற்றுச்சூழல் நிலவவும், வேளாண் தோட்டக்கலைச் சங்கம் சார்பில் இந்த நிலத்தில் நூற்றுக்கணக்கான அரிய மரங்களும், மூலிகை தாவரங்களும் பூக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் என் மீதான வெறுப்பில் இந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முயன்று வருகிறது. இந்த இடத்தில் வேளாண் தோட்டக்கலைப் பூங்கா அமைக்கப் போவதாக அரசு கூறுகிறது.

இந்தப் போர்வையில் நிலத்தை கையகப்படுத்தி என்னைத் துன்புறுத்த முயற்சிக்கிறது. ///

 
http://thatstamil.oneindia.in/news/2008/05/27/india-sc-puts-break-in-woodlands-drive-in-hotel.html
 
கரு-நா-நிதி ஆதாயம் இல்லாமல் ஆட்டையைப் போட மாட்டார் என்பதற்கு இன்னொரு உதாரணம்!!
 
Advertisements

7 பின்னூட்டங்கள் »

 1. உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு எதிர்புறம் சர்ச் இருக்கிறது. அவர்கள் இந்த நிலத்தை முதல்வரிடம் கேட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலம் அடுத்த சீரணி அரங்கமாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

  விவேகானந்தா இல்லத்தை கையப்படுத்த நினைத்ததும், ஒரு கிறிஸ்துவ சூழ்ச்சி தான்.

  இவைகளின் பின்னே கனிமொழியும் ஜகத் காஸ்பர் ராஜும் இருக்கிறார்கள்

  பின்னூட்டம் by idono — மே 27, 2008 @ 7:30 முப | மறுமொழி

 2. இத்தனை வருடம்தான் குத்தகை என்று எழுத்துப்பூர்வமாக முடிவு செய்து கொண்ட பிறகு குத்தகைக் காலத்திற்குப் பிறகும் எங்களுடன் தான் குத்தகை தொடரவேண்டும் என்று சொல்லுவது சண்டித்தனம். விவேகானந்தார் இல்ல நிர்வாகிகள் இப்போது அதைத்தான் செய்து வருகின்றனர். குத்தகையை நீட்டித்து நீட்டித்து அந்த இடத்தை சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிற மோசடி வேலை இது. இதை இந்து சூழ்ச்சி என்று சொல்லலாமா?

  பின்னூட்டம் by vijaygopalswami — மே 27, 2008 @ 3:51 பிப | மறுமொழி

 3. விஜயகோபாலசாமி என்ற பெயரில் வந்தவரே,

  வருகைக்கு நன்றி. விவேகானந்தர் இல்லத்தின் வரலாறு தெரியாது. அதன் உண்மையான வீட்டுக்காரர் எத்தனை மதிப்பாக தியாகம் செய்து விவேகானந்தருக்காக அர்ப்பணித்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். அதை அரசு எடுத்து என்ன செய்யும். கோயில் நிலங்களை எடுத்து கொள்ளை அடித்தது போல இதையும் சாப்பிட திட்டமா? இல்லையில்லை. அது இருக்க வேண்டிய இடம் இராமகிருஷ்ணர் இல்லம்தான். இராமகிருஷ்ணர் இல்லத்தினர் அந்த இடத்தை விவேகானந்தரின் நினைவைப்போற்றும் அளவில் எவ்வளவு சிறப்பாக வைத்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். (உங்கள் ஆலேலூயா கூட்டத்துப்பிறகு. அருகிலேயே தி.கேணியில் போய் பார்க்கலாம்). இந்துவிரோத, மனிதநேய விரோத திராவிட அரசு இந்த இடத்தை அடையத்துடிப்பது ஏன்? யோசியுங்கள், நண்பரே, யோசியுங்கள்.

  பின்னூட்டம் by ஜயராமன் — மே 27, 2008 @ 4:54 பிப | மறுமொழி

 4. விஜயகோபாலஸ்வாமி,

  அந்த இல்லம் விவேகானந்தர் என்னும் பெரியார் வந்து தங்கியிருந்த இடம். ராமக்ருஷ்ண மடம் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இடமும் அதுதான்.

  பாரதியார், ராமானுஜர், பாரதிதாசன் போன்றோர் வாழ்ந்த வீடுகளை குத்தகைக்கு விட அரசு முடிவு எடுப்பது முறையாகுமா? ஆகாது.

  ஒட்டுமொத்தமாக ராமக்ருஷ்ண மடத்திற்கு தரவேண்டிய இடத்தை வெறுமே குத்தகைக்கு விட்டிருப்பதே வருந்தவேண்டிய விஷயம். ஆனால், அதற்காகவாவது கொடுத்ததால் எத்தனைபேர் விவேகானந்தர் என்னும் அந்த தியாகியின் வாழ்வை புரிந்து, அவரது கருத்துக்களால் கவரப்பட்டு சுயநலமற்ற முறையில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரியுமா?

  வரலாறு தவிர, மக்களை ஏழைகளுக்கு உதவ, ஏழ்மையை அழிக்க தூண்டுகிற இடத்தை அந்தப் பணிகளை செவ்வனே செய்துவரும் ராமக்ருஷ்ண மடத்திற்கே மீண்டும் அளிப்பது திமுக அரசின்மேல் மக்களுக்கு மரியாதை பிறக்கச் செய்யும்.

  இந்த காரியத்தை செய்கிற தலைவர்களும் அவரது குடும்பத்தாரும் உடல், மன நலன்கள் பெற்று நல்லவர்களாய் நீடூழி வாழ இந்த செயல் தூண்டும்.

  இந்த பிரச்சினையின் உண்மை நிலவரம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

  உங்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், இந்த பிரச்சினையில் (உங்களுடைய கருத்திற்கு மாறாக) இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

  பின்னூட்டம் by பனித்துளி — மே 28, 2008 @ 10:04 முப | மறுமொழி

 5. மதித்து பதிலளித்தமைக்கு நன்றி பனித்துளி அவர்களே,

  எழுதிய பதிவு நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலைப் பற்றியது. அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் விவேகானந்தர் இல்லத்தை எதற்கு இதில் இழுக்க வேண்டும். விவேகானந்தர் இல்லத்தைக் கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அறிவித்தாகிவிட்டது. அதன் பிறகும் எதற்கு இந்த விஷயத்தை அலச வேண்டும்? பதிவை எழுதியவருக்கு கருணாநிதி மேல் கோபம் என்றால் அதை கருணாநிதி மேல் மட்டும் காட்டட்டும். இதில் சம்பந்தமில்லாமல் ஏன் மாற்று சமயத்தவர்களை வம்புக்கு இழுக்க வேண்டும்.

  இதில் மாற்று சமயத்தவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தையும் கொடுத்திருக்க வேண்டுமா இல்லையா? அதுவும் இல்லை. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் பொறுப்பில்லாமல் எழுதியிருக்கிறார். இதை இந்துக் குடும்பத்தில் பிறந்த நான் கேட்டால், நீயும் அல்லேலுயா கூட்டத்தை சேர்ந்தவன் என்கிறார்.

  பின்னூட்டம் by vijaygopalswami — மே 28, 2008 @ 11:03 முப | மறுமொழி

 6. விஜயகோபாலசாமி அவர்களே,

  வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதுவது யார்?

  விவேகானந்தர் இல்லத்தைக் குறித்து கருத்து சொன்னது பின்னூட்டத்தில் ஒரு அனானி. நீங்கள் அதை நான் பதிவில் போட்டதாக சொல்கிறீர்கள்.

  இரண்டாவதாக, நீங்கள் குத்தகையை முடிந்ததும் ஏன் திருப்ப குடுக்காமல் சண்டித்தனம் செய்கிறார்கள் என்று கேட்டீர்கள். அதற்கான பதில் கொடுத்ததும், அதையே கண்டுக்காமல் விவேகானந்தர் இல்லத்தை ஏன் இழுக்க வேண்டும் என்று ஜகா வாங்குகிறீர்கள். மழுப்புவது நானா இல்லை நீங்களா?

  மற்ற மதத்தை பற்றி பேச என்ன ஆதாரம் என்று கேட்டால் ஆதாரம் இருந்து பத்திரிக்கைகளில் வந்து பேசப்பட்ட கருத்துதான் இது. நீங்கள் குத்தகையை திருப்பிக்கொடுக்காமல் சண்டித்தனம் செய்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? இணையத்தில் பல செய்திகள் விவாதிக்கப்படுகின்றன. பதில் தெரியாவிட்டால் ஆதாரம் எங்கே என்று கேட்பதும் பதில் சொன்னால் வேறு டாபிக்கு தாவுவதும் வேண்டாமே? படிப்பவர்கள் முட்டாள்கள் இல்லை.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — மே 28, 2008 @ 11:32 முப | மறுமொழி

 7. Sri Jayaraman,
  This VijayaGopalswami is a crap. He came without being called, babbled irrelevant questions and once answered correctly, he shamelessly claims your answers are irrelevant. Acutally shamelessness, cheating are habits of communist people.

  பின்னூட்டம் by kargil Jay — மே 30, 2008 @ 3:31 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: