விருது

மே 27, 2008

பீடுநடை போடும் தமிழ்இந்து.காம் இணையதளம்

Filed under: Uncategorized — விருது @ 6:11 முப

சமீபத்தில்  தமிழ்இந்து.காம் என்ற ஒரு இணையதளத்தின் அறிமுகம் கிடைத்தது.

பொதுவாக இந்து இணைய தளங்கள் என்றால் அவை ஒன்று பஜனைமடங்களாகவோ இல்லை வெறும் அரசியல் சார்பாகவோ இருக்கின்றன.    இவை இரண்டு வகைகளும் தவறு என்று நான் சொல்லவில்லை.  நானே வைதிகஸ்ரீ பஜனை தளம்தானே நடத்துகிறேன்.

ஆனால்,  இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு பெரிய வெற்றிடம் இருக்கிறது.

இன்றைய இந்து சமுதாயத்திற்கு இந்து உணர்வு என்பது ஒன்று ஆன்மீகம் சார்ந்தோ இல்லை அரசியல் சார்ந்தோ இருக்கிறது.    இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு ஒரு கலாசார, தேசீய இழையோடும் ஒரு உணர்வை முதன்மைப்படுத்தும் சிறந்த தளங்கள் பொதுவாக இல்லை என்றே சொல்லலாம்.   அதுவும் தமிழில்.

இன்றைய நவீன கலாசார மற்றும் நவீன சமுதாய சூழலில் வளர்ந்துவரும் இளைய இந்து சமுதாயத்திற்கும் மற்றும் மாறிவரும் முதிர் இந்து சமுதாயத்திற்கும் தங்கள் வாழ்வியலை ஒட்டிய கலாசார உணர்வுகளை பேசவும், பகிர்ந்துகொள்ளவும் இந்த தளம் ஒரு சரியான வழிகாட்டியாக தெரிகிறது.

அதுவும்,  ஒவ்வாத மற்றும் காழ்ப்பு தீராவிட கொள்கைகளால் பலவீனப்பட்டும்,  தாக்குதலுக்கு உள்ளாகியும் உள்ள தேசீய கலாசார இந்து உணர்வுகள் தமிழர்களிடையே மீண்டும் தழைக்கச்செய்ய இந்த தளம் முயலுமானால் அது ஒரு சிறந்த எழுச்சியாக இருக்கும்.   அதுவே இன்றைய தேவை!

தமிழனையும், இந்துவையும் இல்லாத இருவேறு இனங்களாக காட்ட முயலும் சில தேசவிரோத சக்திகளை முறியடித்து தமிழனின் தாய் மதத்தை பிரதிபலிக்கும் உண்மையான பண்டைய கலாசாரத்தில் பெருமைகளை  இன்றைய தமிழர்களை உணரச்செய்து அந்த கலாசாரத்தில் நம்மை பெருமைப் பட செய்ய இந்த தளம் முயலவேண்டும் என்பது என் ஆசை.

இந்த தளத்தை நடத்தும், பயன்படுத்தும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.  நன்றிகள்.

இந்த தளத்தை விடாமல் கவனித்து வரும் நான் அதில் மயங்கி அந்த தளத்துக்கு ஒரு இணைப்பை என் பதிவில் கொடுத்துவிட்டேன்.

 

வாழ்த்துக்கள்.

நன்றி

ஜயராமன்

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. இந்தத் தளத்தைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. அருமையான கட்டுரைகள் இருக்கின்றன.

  பின்னூட்டம் by கயல்விழி — மே 27, 2008 @ 1:24 பிப | மறுமொழி

 2. அருமையான பதிவு ஜெயராமன். நன்றி

  பின்னூட்டம் by அரவிந்தன் நீலகண்டன் — மே 27, 2008 @ 3:31 பிப | மறுமொழி

 3. Thanks a Lot Jeyaraman.
  Very kind of you to have shared this website.
  It is very insightful.
  Keep sharing regularly the good that you come across.
  God Bless.
  Srinivasan.

  பின்னூட்டம் by Srinivasan — மே 29, 2008 @ 4:23 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: