விருது

ஏப்ரல் 17, 2008

பிராமணர்கள் தமிழர்களா – பதில்

Filed under: Uncategorized — விருது @ 4:40 முப

 

திரு.  லட்சுமிநாராயணன் அவர்களின் பதிவு “பிராமணர்கள் தமிழர்களா” என்பது.   அங்கு நடந்துவரும் விவாதத்திற்கு நான் போட்ட பின்னூட்டம் இது.  சற்று நீண்டுவிட்டதால் தனிப்பதிவாக.

ஐயா,

ஆரியம்-திராவிடம் என்பது ஒரு கற்பனை.  இது இன்று மேலைநாட்டு அறிஞர்களாலேயே முழுதுமாக நிராகரிக்கப்பட்டு விட்டது.  அது குறித்து புரிந்துகொள்ளும் விவரமும்,  நேர்மையும் இல்லாத சில வெத்துவேட்டு ஈனப்பிறவிகள் தங்கள் காழ்ப்பு உணர்வுகளை பின்னூட்டங்களில் காட்டி தங்கள் தரத்தை வெளிக்காட்டுகிறார்கள்.  இவர்களை ஒதுக்கிவிட்டு மேலே செல்லுங்கள்.  இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

ஆரியர் படையெடுப்பு குறித்த எந்த ஒரு கதையும் எந்த ஒரு இலக்கியத்திலும் இல்லையே!   அப்படியென்றால், திராவிடர்களை அடிமைப்படுத்தியவர்களோ,  அடிமைப்பட்டவர்களோ இதை ஏன் மறந்து போனார்கள்.

இப்படி ஆரியர் படையெடுப்பு நடந்தது பஞ்சாப் முதலிய வட மாநிலங்களிலாம்.  அப்படி என்றால் திராவிட நாகரீக சுவடுகள் அங்கு இல்லையே,  ஏன்?  அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டனவா?

ஆரியர்கள்தாம் குதிரையை அறிமுகப்படுத்தினார்கள் என்று சொன்னது தப்பு என்று கர்நாடகா மற்றும் மகாராட்டத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சிகள் காட்டி விட்டன.   இதையெல்லாம் இந்த மூடர்கள் அறிவார் இல்லை.

ஆரியர்கள் 5000 ஆண்டுக்கு முன் வந்து அடிமைப்படுத்திவிட்டார்களாம்.  5000 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த கூறு கெட்ட ஒரு இனமா திராவிட இனம்?  இவர்கள் இப்படிச்சொல்லி தங்கள் மூதாதையர்களை அவமானப்படுத்துகிறார்கள்!

சாதி சாதி என்று வெறி பிடித்து அலைவது இந்த ஆதிக்க சாதி திராவிடர்கள்தாம்.  கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றை பார்த்தால் எப்போதுமே கல்வியிலும்,  வியாபாரத்திலும் இந்த சாதிகளே ஆக்கிரமித்து வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்துக்கு முற்பட்ட கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை இந்த ஆதிக்க சாதி திராவிட இனத்தவர்கள்தாம் என்று வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன.   கோயிலில் மணி அடித்துக்கொண்டிருந்த அந்தணர் குலம் ஆங்கிலேயர்கள் வரவால் அவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தயவு பெற்று பல பதவிகள் பெற்றார்கள்.   அப்போதெல்லாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடாத்த இந்த வெட்கங்கெட்ட பகுத்தறிவாளர்கள், மாறாக ஆங்கிலேய ஆட்சிக்கு அடிவருடி அடிமை சாசனம் தொடர வேண்டும் என்று நினைத்தார்கள்.  இவர்களா சுயமரியாதைக்காரர்கள்!

தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை.   தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது.  அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே.

ஏனென்றால்,  தீண்டாமைக்கு முன்னோடிகள் கிருத்துவ மிஷனரிகளே.   கடந்த 50 வருடங்கள் முன் வரை கருப்பு அடிமைகளை வைத்திருந்து அந்த அடிமைத்தளை போக்கூடாது என்று போராடிய கிருத்துவ கூட்டம் இந்து மதத்தை குறை சொல்வதா? வெட்க்க்கேடு! 

எந்த ஒரு இந்து கடவுளும், வேதமும் தீண்டாமை சொன்னதில்லை.  மனு தர்மம் என்ற ஒரு புனைப்பு சாத்திரம் 800 ஆண்டுகளுக்கும் மேலாக புனைத்து எழுதப்பட்டதாக வரலாறு.  அந்த சாத்திரம் எப்போதும் இந்து கலாசாரத்தில் பின்பற்றப்படவில்லை.  மனு தரும வழியாக ஆட்சி புரியப்பட்டதாக எந்த ஒரு சரித்திரமும் இல்லை.  அப்படி இந்து மதம் புறக்கணித்த ஒரு ஒவ்வாத சாத்திரத்தை ஆங்கிலேயர்கள் இந்துமத அழிப்புக்கு பயன்படுத்தினார்கள்.  அந்த மனுதருமம் சொல்லும் பல நல்ல விஷயங்களை இவர்கள் என்றுமே பின்பற்றுவதில்லை. 

 கிருத்துவம் எப்போதும் வர்க்க சாதி அடக்குமுறையை ஆதரித்தே வந்துள்ளது.  ஏழு அடுக்கு சாதி அமைப்பு கொண்டதாக அவர்கள் மிஷனரிகள் கடந்த 50 ஆண்டுவரை போராடித்திரிந்தார்கள்.   சரித்திரம் தெரியாமல் இந்த தமிழர்கள் திராவிடம், பார்ப்பான், இந்துமதம் என்று சொல்லித்திரிகிறார்கள்.

இந்து மதம் தன் நாட்டார் வழிபாட்டுகளை எப்போதும் காத்தே வந்துள்ளது.  ஆனால், பிற மதங்கள் – இஸ்லாம், கிருத்துவம் – எப்போதும் தங்களின் ஆதிகால இறை வழிபாடுகளை அடையாளம் இல்லாமல் அழித்துவிடுகிறது.  பார்ப்பனீயம் என்று கத்தும் இந்த வெத்துவேட்டுகள் இப்படி கலாசார கொலை எழுப்பும் மற்ற ஆப்ரகாமிய மதங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

 இதே கரு.நா.நிதி பால் தினகரன் மறைவுக்கு மலர் வளையம் வைக்கிறார்.  அவர் மகன் ஸ்டாலின் ஆலேலூயா கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.  முடவன் நடக்கிறான், குருடன் பார்க்கிறான் என்று மூடநம்பிக்கையை வளர்க்கும் இந்த கிருத்துவ கூப்பாடுகளில் பகுத்தறிவு இருக்கிறதா, இல்லை கடமையைச்செய், பலன் தானே வரும் என்ற இந்து மதத்தில் பகுத்தறிவு இருக்கிறதா!  இவர் மகள் கனிமொழி அவர்களோ, பொட்டை அழித்துவிட்டு முஸ்லிமாக்களின் கூட்டத்தில் கஞ்சி சாப்பிடுகிறார்.

ஆனால், இவர்கள் 5000 ஆண்டுக்கு முன்னால் கைபர் இடுக்கில் வந்தான் பிராமணன் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.   என்ன ஒரு அபத்தம்!

நன்றி

ஜயராமன்

Advertisements

30 பின்னூட்டங்கள் »

 1. மிக்க நன்றி திரு ஜெயராமன் அவர்களே. நல்லதொரு பதிவு. இதே ஆதாரங்களுடன் நான் கூறிய எதனையும் என்னுடன் வாதமிட்ட யாரும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. கருணாநிதி இதனை ஏற்றுக் கொண்டால், காலங்காலமாக மக்களை ஏய்த்து வரும் விஷயம் அம்பலமாகி விடும் அல்லவா. அது திராவிட (?) கழகங்களின் ஆணி வேரையே அசைத்து விடும் அல்லவா. அதனால்தான் இந்த ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இன்னமும் அனைத்து அரசுப் பள்ளிகளின் பாடங்களில் கைபர் போலன் கணவாய் வழியே ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தனர் என்றே சொல்லப்படுகிறது.திருத்த ஆளில்லை.

  ஆங்கிலேயர்கள் சென்று காலம் பல ஆன பின்னும், அதே பிரித்தாளும் கொள்கைகளைப் பயன்படுத்தி சுயலாபம் பார்த்து வரும் கயவர்களைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் இவர்கள் நம்பப் போவதில்லை. தங்களை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டு இந்த திராவிட கழகங்களும், கம்யுநிச்ட்களும் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. மத்தியில் மதசார்பின்மை என்பது முஸ்லீம் மற்றும் கிருத்துவர்களை திருப்திப் படுத்துவது. தமிழகத்தில் மதசார்பின்மை என்பது இந்து மதத்தை இழிவு படுத்துவது. இதுதான் 80% இந்துக்கள் வாழும் இந்தியாவின் இன்றைய நிலை.

  சாதியை ஒழிக்கிறேன், ஒழிக்கிறேன் என்று சொல்லி மேலும் மேலும் இட ஒதுக்கீடுகளை கொடுத்து சாதீயத்தை ஆழப் படுத்துகின்றனர். இது எங்கு பொய் முடியப் போகிறதோ?

  மீண்டும் நன்றி, நல்லதொரு பின்னூட்டப் பதிவிற்காக. தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து வாருங்கள். தங்களைப் போன்றோரின் ஆதரவு எனக்கு அவசியம் தேவை.

  பின்னூட்டம் by Lakshminarayanan — ஏப்ரல் 17, 2008 @ 8:27 முப | மறுமொழி

 2. \\மூடநம்பிக்கையை வளர்க்கும் இந்த கிருத்துவ கூப்பாடுகளில் பகுத்தறிவு இருக்கிறதா, இல்லை கடமையைச்செய், பலன் தானே வரும் என்ற இந்து மதத்தில் பகுத்தறிவு இருக்கிறதா!\\புட்டபர்தி சாய்பாபா வாயில் இருந்து லிங்கத்தை எடுக்கிறார். வட நாட்டில் கும்பமேளாவில் சாமியார்கள்
  கஞ்சவையும், அபிணையும் அடித்துவிட்டு அம்மனகட்டையாக வருகிறார்கள். இதில் கையில் பயங்கர ஆய்தம் வெரு.
  \\எந்த ஒரு இந்து கடவுளும், வேதமும் தீண்டாமை சொன்னதில்லை\\சுத்த போய். சிதம்பரம் கோயிலில் சிவனடியார் தமிழில் பாடினாள் தீட்டு ஏற்படும் என்று கோர்ட்டு படியேறியாது எந்த கூட்டம்
  \\ஆரியர் படையெடுப்பு குறித்த எந்த ஒரு கதையும் எந்த ஒரு இலக்கியத்திலும் இல்லையே\\
  மே க் ஸ் முல்லர் எழுதிய வரலாற்று நூலில் ஆரீயிய படைய்டுப்பு பற்றி விரிவாக விளக்குகிறார்.
  நேரு எழுதிய நான்கண்ட இந்தியா என்னும் புத்தகத்தில் ஆரீயிய படையெடுப்பு பற்றி ஆதாரத்துடன் எழுதி உள்ளார்.
  \\அந்த மனுதருமம் சொல்லும் பல நல்ல விஷயங்களை இவர்கள் என்றுமே பின்பற்றுவதில்லை.\\
  நான்கு வருணங்களாக மக்களை பிரிக்கிறது. அவன் அவன் பரம்பரை தொழிலை செய்ய சொல்லி கட்டாயபடுத்துகிறது. உங்கள் வருண தொழில் மணி அடிப்பது. உங்கள் வீட்டு குல பெண்களின் தொழில் என்ன தெரியுமா?

  பின்னூட்டம் by lightink — ஏப்ரல் 17, 2008 @ 12:28 பிப | மறுமொழி

 3. லைட்லிங்க் அவர்களே,

  மீண்டும் மீண்டும் உங்களுக்கு நல்வரவு.

  /// புட்டபர்தி சாய்பாபா வாயில் இருந்து லிங்கத்தை எடுக்கிறார். வட நாட்டில் கும்பமேளாவில் சாமியார்கள் கஞ்சவையும், அபிணையும் அடித்துவிட்டு அம்மனகட்டையாக வருகிறார்கள். இதில் கையில் பயங்கர ஆய்தம் வெரு. ///

  வாயிலிருந்து லிங்கம் வருவது மூடநம்பிக்கைதான். பகுத்தறிவு வெங்காயத்திற்கு மாலை போடுவது போலத்தான் இதுவும். மஞ்சள் துண்டு போட்டவர்களும் சிறப்பாக இந்த லிங்கம்,மோதிரத்தை துண்டேந்தி வாங்கிக்கொள்கிறார்கள் என்றால் இந்த நம்பிக்கைகள் பகுத்தறிவாளர்களும் நம்புபவையாக இன்று இருக்கின்றன.

  ஆனால், இவற்றால் ஏழைமக்கள் தாக்கப்படுவதில்லை. ஆலேலூயாவின் “சுவிசேஷம்” என்ற ஏமாற்றுவித்தையால், பல பாமர மக்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்வதை விடுத்து பணத்தை கொண்டுவந்து இந்த புரட்டு பாதிரிகளிடம் கொட்டுகிறார்கள். பாதிரிகள் கோடீஸ்வரர்களாகிவிடுகிறார்கள். போன மாதம், கேரளாவில், ஒரு கிருத்துவன் பிரார்த்தனையின் மூலம் குணமாகும் என்று நம்பி தன் குழந்தையை மருத்துவம் பார்க்காமல் அறையில் வைத்து சாகடித்தான் என்று படித்தேன். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

  நிர்வாணமாக துறவிகள் இருப்பது திகம்பரம் எனப்படும் பற்றற்ற நிலை. இது சைனமதத்திலும் உண்டு. தங்களைப்போன்ற லைட்டுகளுக்கு புரிவது கடினம். ஆனால், இவை மூடநம்பிக்கைகள் அல்ல. நீங்களும் வேண்டுமானால் நிர்வாணமாக கும்பமேளாவுக்கு போய் கலந்து கொள்ளுங்கள்.

  //// சுத்த போய். சிதம்பரம் கோயிலில் சிவனடியார் தமிழில் பாடினாள் தீட்டு ஏற்படும் என்று கோர்ட்டு படியேறியாது எந்த கூட்டம் ///

  தீண்டாமைக்கும் தமிழில் வழிபாட்டுக்கும் தொடர்பு படுத்தி நீங்கள் கேட்பது உங்கள் அறியாமை. சிதம்பரத்தில் தமிழில் கனகசபையில் தினசரி வழி பாடுகள் பல வருடங்களாக நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எல்லா சாதி கட்டளைக்காரர்களுக்கும் அங்கே தரிசனம் செய்ய வாய்ப்புண்டு. அங்கிருந்த பிரச்சனை, அங்கு வழிபாடு செய்ய சிதம்பரம் அந்தணர்கள் மட்டுமே உரிமை உள்ளது என்பதுதான். வேறு அந்தணன் கூட அங்கே பாட முடியாது என்று அவர்கள் சொல்கிறார்கள். அது தீண்டாமையா! தங்களுக்கு புரியாத விவரம் என்றால் அறிந்து பின்னர் பேசவும்.

  /// மே க் ஸ் முல்லர் எழுதிய வரலாற்று நூலில் ஆரீயிய படைய்டுப்பு பற்றி விரிவாக விளக்குகிறார். நேரு எழுதிய நான்கண்ட இந்தியா என்னும் புத்தகத்தில் ஆரீயிய படையெடுப்பு பற்றி ஆதாரத்துடன் எழுதி உள்ளார். //

  மேக்ஸ்முல்லர் ஆங்கிலேய கைக்கூலி. நேரு ஒரு “பிறப்பால் இந்து, வாழ்க்கையில் முஸ்லிம்” என்று சொல்லிக்கொண்டவர். அவர்கள் கூட ஆரிய-திராவிட பாகுபாடு ஒரு மொழியியல் வேறுபாடு என்றுதான் சொன்னார்களே தவிர, இனப்பாகுபாடுஎன்று சொல்லவில்லை. அவர்களின் கோட்பாடு படி கூட இந்த இரு சமுதாயங்கள் இரண்டர கலந்துவிட்டதாகவே சொல்கிறார்கள். அதை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை போலும். அல்லது வழக்கமான தீராவிட காழ்ப்பு அரைவேக்காட்டு பிரச்சாரங்களை மட்டும் அறிந்திருப்பீர்கள் போலும்.

  நீங்கள் மேக்ஸ்முல்லர் மற்றும் நேரு என்ற 100 வருடபழைய இந்த அபத்த ஆராய்ச்சிகளிலிருந்து பின்னர் வெளியே வரவில்லை போலும். சமீபத்திய நடுநிலைமை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆரிய கொள்கைக்கு பாடை கட்டி ரொம்ப காலம் ஆகிறது. கொஞ்சம் உங்களைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ்!

  /// நான்கு வருணங்களாக மக்களை பிரிக்கிறது. அவன் அவன் பரம்பரை தொழிலை செய்ய சொல்லி கட்டாயபடுத்துகிறது. உங்கள் வருண தொழில் மணி அடிப்பது. உங்கள் வீட்டு குல பெண்களின் தொழில் என்ன தெரியுமா? ///

  மனுதருமத்தை நீங்கள் படித்ததில்லை என்று தெரிகிறது. திரு.லட்சுமிநாராயணன் எழுதிய பதிவை இது குறித்து படித்து பின்னர் எனக்கு பின்னூட்டம் இடவும்.

  மனுதருமம் என்பது இந்து சாத்திரத்தில் முக்கியம் இல்லை. இது போல நூற்றுக்கணக்கான சாத்திரங்கள் உண்டு. இவைகள் ஸ்மிருதிகள் என்று பெயர். இந்தியாவில் எந்த ஒரு காலகட்டத்திலும் மனு தருமம் கடைபிடிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மனுதருமம் என்பதே ஒரு 800 வருடங்களாக புனையப்பட்ட ஒரு நூல் என்று ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த மனுதரும பூச்சாண்டி கிருத்துவ மெஷினரிகளால் உங்களைப்போன்ற தீராவிட வெறுப்பு வியாபாரிகள் தங்கள் ஆதிக்க வெறிக்காக பிரசாரப்படுத்தப்பட்டது. இந்து புராணங்களில் எந்த ஒரு கதையிலும் குழந்தை திருமணம், தீண்டாமை, விதவை உடன்கட்டை போன்ற கொடிய பழக்கங்கள் இல்லை. இவை எல்லாம் முஸ்லிம்கள் கொண்டுவந்தவை. கொஞ்சம் திறந்த மனத்துடன் உங்கள் வரலாற்றை அறிந்துகொள்ளுங்கள்.

  யாரோ ஒரு மிஷினரிகளின் கதையை நம்பி நீங்கள் உங்கள் மூதாதையர்களை அடிமை என்றும், அருவருப்பான கொள்கையாளர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் சொல்லிக்கொள்கிறீர்களே வெட்கமில்லாமல் – என்று எனக்கு வியப்பாய் இருக்கிறது. கொஞ்சம் யோசியுங்கள். இது தேவையா?

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 18, 2008 @ 4:14 முப | மறுமொழி

 4. உங்கள் பதிலுக்கு நன்றி, \\அங்கே தரிசனம் செய்ய வாய்ப்புண்டு. அங்கிருந்த பிரச்சனை, அங்கு வழிபாடு செய்ய சிதம்பரம் அந்தணர்கள் மட்டுமே உரிமை உள்ளது என்பதுதான். வேறு அந்தணன் கூட அங்கே பாட முடியாது \\
  இந்த உரிமையை யார் கொடுத்தது. அதை விளக்கினாள் நன்றாக இருக்கும்
  \\இந்து புராணங்களில் எந்த ஒரு கதையிலும் குழந்தை திருமணம், தீண்டாமை, விதவை உடன்கட்டை போன்ற கொடிய பழக்கங்கள் இல்லை\\
  பிறகு ராமன் ஏன் சீதையை தீயில் இறங்க சொன்னான். பிறகு ஏன் ஆங்கிலேயர் உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கு தடை போட்டார்கள்.

  பின்னூட்டம் by shakthi — ஏப்ரல் 18, 2008 @ 4:36 முப | மறுமொழி

 5. சக்தி ஐயா,

  தங்களின் பதில் தங்களின் அறியாமையை தொடர்ந்து காட்டுகிறது.

  தங்களின் பின்னூட்டங்கள் இங்கு பேசப்படும் ஆரிய-தீராவிட கற்பனை கருத்து என்ற பொருளை தவிர்த்து ஏதேதோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள். இதை தொடர நான் விரும்பவில்லை. என் இந்த பதிலோடு நான் நிறுத்திக்கொள்கிறேன். நீங்கள் இனிமேல் தயை செய்து என்ன பொருளைக் குறித்து பேசப்படுகிறது என்று அறிந்து அதற்கான விவரங்களை அறிந்துகொண்டு எழுதுங்கள்.

  /// இந்த உரிமையை யார் கொடுத்தது. அதை விளக்கினாள் நன்றாக இருக்கும் //

  “விளக்கினால்” என்று இருக்கவேண்டும். நீங்கள் சொன்னது போல தீண்டாமைக்கும் சிதம்பரம் பிரச்சனைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை நான் விளக்கினேன். கொஞ்சம் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது மற்ற ஒரு அறியாத கேள்வியை கேட்கிறீர்கள். இந்த உரிமை அவர்களுக்கு சோழ அரசனால் பட்டயமாக கொடுக்கப்பட்டது. இது எல்லோருக்கும் தெரியும். இது குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். இது சரியா, தவறா என்பது வேறு விசயம். காவிரிக்கு பங்கு இத்தனை என்று வெள்ளைக்காரன் தமிழ்நாட்டுக்கு எழுதிக்கொடுத்தது போலத்தான் இதுவும். அந்த காவிரியின் பங்கை வைத்து தமிழ்நாடு கேட்பது போல் அவர்களும் கேட்கிறார்கள். இது வரலாற்று அநீதி என்று கர்நாடகா சொல்கிறது.

  //// பிறகு ராமன் ஏன் சீதையை தீயில் இறங்க சொன்னான். பிறகு ஏன் ஆங்கிலேயர் உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கு தடை போட்டார்கள். ///

  ராமன் சீதையை தீயில் இறங்கச்சொல்லவில்லை. தங்களுக்கு இராமாயணமும் தெரியாது என்று புரிகிறது. சீதையை இராமன் கோவிக்க, சீதையே இலக்குவனிடம் தீயை மூட்டு நான் அதில் இறங்கி விடுகிறேன் என்கிறாள். அப்போது மற்ற எல்லோருமே – தேவர்கள் கூட இறங்கி வந்து – இராமனை கண்டிக்கிறார்கள். தீயில் சீதை இறங்கியதும் அக்னி தேவன் வந்து இராமனிடம் பேசுகிறான்.

  இதில் எங்கே உடன்கட்டை வருகிறது. தங்களின் அறியாமையை நினைத்தால் பரிதாபமாய் இருக்கிறது. வழக்கமான கிருத்துவ மிஷினரிகளின் வாந்தியை படித்தும், அரைகுறையாக கேட்டும் நீங்கள் இப்படி ஜல்லி அடிப்பது உங்களைப்போன்றவர்களின் மனதை காட்டுகிறது.

  ஒரு பக்கம் இராமரே கிடையாது என்று சொல்லவேண்டியது. ஆனால், இன்னொரு பக்கம் – பார்த்தாயா இராமர் சீதையை நெருப்பில் இறக்கினார் – என்று கத்தவேண்டியது. திராவிட- ஆரிய சண்டையே இராமாயணம் என்று சொல்ல வேண்டியது. அதே சமயம்,இராமாயணம் நடக்கவே இல்லை என்று சொல்ல வேண்டியது. கேப்பவன் (தங்களைப்போல) கேனயாக இருந்தால் என்ன வாந்தி எடுத்தாலும் அதை பிடித்து கேட்டுக்கொள்ள தயாராக இருப்பவன்தான் தமிழன். இந்த நிலையில்தான் இந்த பகுத்தறிவுவா(ந்)திகள் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

  மேலும், சம்பந்தமில்லாமல் எழுதவேண்டாம். ஆரிய-திராவிட கொள்கை ஒரு கற்பனை என்பதை பற்றி உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால் எழுதுங்கள். உடன்கட்டை என்பது விதவைகள் ஏறுவது. இராமன் தன் மனைவியை உடன்கட்டை ஏறச்சொன்னான் என்று சொல்கிறீர்களே, இதற்கு அழுவதா, சிரிப்பதா!

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 18, 2008 @ 5:15 முப | மறுமொழி

 6. ///தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை. தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது. அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே.///

  Wrong. The famous story of Athisankar being tested by Lord Shiva in the form of a pulayar couple with four dogs. Adhi Sankar asked them to ‘move’ out of his way. Similar stories and incidents about SC alwargal like Thirupaan alwar and Thirumazisai Alwars. The way Ramanujar’s guru was treated because he was a SC. Untouchability and castesim exisited for nearly 2000 years.
  It is an inherent phenomona and not influnced by any alien invasions or influsnces…

  பின்னூட்டம் by K.R.Athiyaman — ஏப்ரல் 18, 2008 @ 4:20 பிப | மறுமொழி

 7. திரு அதியமான் அவர்களே,

  வருகைக்கு நன்றி

  /// The famous story of Athisankar being tested by Lord Shiva in the form of a pulayar couple with four dogs. Adhi Sankar asked them to ‘move’ out of his way. Similar stories and incidents about SC alwargal like Thirupaan alwar and Thirumazisai Alwars. ///

  அதெப்படி சார், இத்தனை சொன்னபிறகும் இப்படி அழிச்சாட்டியமாக கிருத்துவ மிஷனரிகளின் 400 ஆண்டுகால வாந்தியை மறுபடியும் மறுபடியும் கையேந்துகிறீர்கள்.

  சங்கரரின் எதிரே ஒருவன் குறுக்கே வந்தால் அவனை ஓரம்போ என்று சொன்னால் அது தீண்டாமையா. அதே சங்கரர் அந்த புலையனிடம் தத்துவம் கற்று அவனை வணங்கியதுதானே இந்த கதை. எல்லா உருவிலும் இறைவனைக்காண வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை காண சொல்லப்படும் இந்த கதையில் எப்படி சார் உங்களுக்கு (இல்லாத) அசிங்கம் மட்டுமே தெரிகிறது!

  கண்ணகியை கற்புக்கரசியாக பார்க்கும் நம் சிலப்பதிகார கதையில் உங்களுக்கு பெண்ணடிமை கண்ணகியும், அவள் முலை எறிந்த தும்தானே தெரியும். வள்ளுவரும், வாசுகியும் நடத்திய அருமையான இல்லறத்தில் கூட தங்களுக்கு வாசுகி ஒரு பெண்ணடிமையாக தெரியுமே! (வாசுகி அம்மையார் வள்ளுவர் அழைத்ததும் வேலையை விட்டுவிட்டு ஓடி வந்தார் அல்லவா). தங்களைப்போன்றவர்கள் காமாலைக்கண்ணால் சந்தனத்தை கூட மலமாக பார்ப்பீர்கள்.

  சங்கரர் தீண்டாமை கொண்டாடியதாக சொல்கிறீர்களே அந்த சிவனே ஒரு மயானத்தில் உழலும் ஒரு புலையன்தானே! அவனை சங்கரர் எப்படி தொழலாம்? எந்த இறைவனுமே (ராமன், கிருஷ்ணன், சிவன், முருகன் என்று) யாருமே பிராமணர்கள் இல்லையே. ராமாயணம் எழுதியதும், வேதம் வகுத்ததும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவன் தானே. இதெல்லாம் பார்த்துமா நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்.

  அதெப்படி சார், உங்கள் மூதாதையர்களை இத்தனை இழிவுபடுத்தி நீங்கள் அதில் பெருமை கொள்கிறீர்கள். எந்த ஆதாரமுமே இல்லாமல் தன் முன்னோர்களை அடிமைகளாகவும், முட்டாள்களாகவும் எப்படி ஐயா இழிவுபடுத்துகிறீர்கள்.

  பெண்களில் தெய்வம் முதல், முனிவர்கள் வரை, அரசிகள் வரை வைத்திருந்த கலாசாரம் நம் பாரத இந்து கலாசாரம். விஞ்ஞானத்திலும், கலாசாரத்திலும் உலகத்திற்கு வழிகாட்டியாக இருந்த நாம் எப்படி இப்படி தீண்டாமை எல்லாம் கொண்டிருப்போம் என்று நினைக்கிறீர்கள். இந்த முன்னேற்றம் எல்லாம் ஒரு சாதி சம்பந்தப்பட்டதா, மற்ற இனங்களுக்கு எந்த ஒரு பங்கும் கிடையாதா? அவர்கள் சமுதாயத்தில் எந்த ஒரு அங்கமும் இல்லையா.

  கிருத்துவமும், இஸ்லாமும் கொத்தடிமைகளை கூட்டம் கூட்டமாக விற்றுக்கொண்டிருந்தபோது இந்து கலாசாரம் சமுத்துவமாய் இருந்ததற்கு ஆயிரமாயிரம் கதைகள் உள்ளனவே.

  அப்படி தீண்டாமை இருந்திருந்தால் ஏன் அது ஒரு புராணத்திலும் இந்து கடவுள்களிலும் எள்ளளவும் இல்லை, ஒரு இலக்கியத்திலும் இல்லை.

  உடன்கட்டை ஏறுவது ஏன் தென்னிந்தியாவில் இல்லை. அதே இந்து சமுதாயம்தானே இங்கும் நாட்டாமை செய்துகொண்டிருந்தது. வடக்கே மட்டும் இது பின்னால் வர முஸ்லிம் படையெடுப்பும் அவர்கள் பெண்களை காம அடிமைகளாக நடத்தியதும்தான் காரணம் என்பது கூட புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 18, 2008 @ 4:47 பிப | மறுமொழி

 8. அருமையான விளக்கங்கள் திரு.ஜயராமன் அவர்களே. ஆனால், மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்கள் யாரும் அதனைப் புரிந்து கொள்ளப் போவதில்லை.

  இந்து மதத்தின் கோட்பாடுகளில் எங்கும் தீண்டாமையோ, உடன்கட்டை ஏறுதலோ கிடையாது. இவை பிற்பாடு மக்களால் காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்டவை. மனு தர்மம் பற்றியும், தீண்டாமை பற்றியும் என் பதிவுகளில் விளக்கமாக எழுதி வருகிறேன். ‘சதி’ எனப்படும் உடன் கட்டை இருதலைப் பற்றியும் ஆதாரத்துடன் விளக்குகிறேன், அதற்கு முன் ஒரு சில வார்த்தைகள் இங்கே.

  @lightlink, சக்தி,
  நீங்கள் சரித்திரத்தை சரியாக படித்திராவிடில், இப்போது படித்துத் தெளிவடையுங்கள். ஆதி காலம் முதலே இந்தியாவில் படையெடுத்து அதன் இயற்கை வளங்களையும், பொன்னையும் பொருளையும் கொள்ளையிட்டுச் சென்றவர்கள் மொகலாய மன்னர்கள். இவர்கள் ஒவ்வொரு போரிலும் வென்றவுடன் செய்யும் முதல் காரியம் கூட்டம் கூட்டமாகச் சென்று இளம் பெண்களைக் கற்பழிப்பது. இதில் பெரும்பாலும் பலிகடாவானது போரில் உயிரிழந்த வீரர்களின் இளம் விதவைகளே. ஏனெனில், அவர்களை என்ன செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை. உயிரை விடவும் மானமே முக்கியம் எனக்கருதி அவர்கள் தங்கள் கணவரின் உடலுடன் சேர்த்து தங்களையும் எரித்துக் கொண்டனர். நாளடைவில் இது ஒரு பழக்கமாகவே நிலைபெற்றது. இதனை இந்து மதம் போதிக்கவில்லை.

  பெண்ணுரிமையில் அனைத்து மதங்களையும் விட இந்து மதமே முற்போக்கான கருத்துக்களை கொண்டுள்ளது. சக்தியில்லாமல் சிவனில்லை என்கின்றன புராணங்கள். திருமால் சன்னதிக்கு செல்கையில் தாயாரைப் பார்த்து விட்டே பெருமாளைப் பார்க்க வேண்டும் என்பது ஐதீகம். தன் உடலில் சரி பாதி கொடுத்தார் அர்த்தநாரீஸ்வரர். மண், பொன், புவி, நதி, பாரதம் என அனைத்தையும் பெண்களாகவே பாவித்து வணங்கி வருகிறது இந்து மதம். மற்ற மதங்களில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமை பற்றியும், மரியாதை பற்றியும் நான் உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன? கடந்த மாதம் தகாத உறவு கொண்ட ஒரு முஸ்லீம் சகோதரியை கல்லாலேயே அடித்துக் கொன்றுள்ளனர் (ஏனெனில் தண்டனை அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது).

  மனுதர்மம், மனுதர்மம் என்று இன்று நடைமுறையில் இல்லாத ஒன்றை சொல்லிக் கொண்டு திரியும் தோழர்களே, இவ்வாறான காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகள் நடக்கும்போது எங்கே போயிருந்தீர்கள்?

  பின்னூட்டம் by Lakshminarayanan — ஏப்ரல் 19, 2008 @ 7:44 முப | மறுமொழி

 9. I was referring to your assertation that there was no untocuhabilty before the British rule in India.

  /////தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை. தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது. அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே.///

  Pls read what Thirumalaisai alwar’s paasurum about his birth. and Thirupaan aalwar was stoned by a pattar on Coauvery river bank and there are many such guru parmambara stories like that. And i referred to Adhi Sankarar incident to show that he too was under the spell of his times and was cured of his illusion by the reply of the pulayar “Whom do you want to move away ? ; the body or the soul that is inside ?” ;

  there are many incidents about caste and untouchablity in Ramanaujar’s life and the reason why he seprated from his orthodox wife. Pls re-read his history.

  And how do you say that the Missionaries were responsible for the creation of untouchability ?

  And in Mahabaratha Karna was constantly abused verbally as ‘therotti mahan’ by the pandavas. Birth determined the status there.

  and the story of Ekalaiva, etc…

  I am not saying all was bad in old times. neither was all gold. there was gross inequality, rigid caste strucutre, male chauvinism, intolerance in those times.

  Chrisitan missionaries’s motive is to convert. so what ? it is the personal right of any indiviudal to convert if he deems fit. Pls read what the legendary G.Subramanya Iyer (founder of The Hindu and Swathesimithran) wrote about the exceplery service rendered by Chrisitan missionaries and the conditions of SCs in the 19th cent. he thundered against hindu orthodoxy and the wreteched conditons of SCs…

  பின்னூட்டம் by K.R.Athiyaman — ஏப்ரல் 20, 2008 @ 5:05 முப | மறுமொழி

 10. அதியமான் அவர்களே,

  தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

  தங்கள் பதிலில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்கள் பதிலிலேயே விடை இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் கிருத்துவ மிஷனரிகள் கொடுத்த கருப்புக்கண்ணாடிகளை கழட்டி விட்டு நடுநிலையோடு பார்த்தால் அது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

  திருப்பாணாழ்வார் அங்குள்ள சில அந்தணர்களால் வெறுக்கப்பட்டதும் பின்னர் இறைவன் அவர்களுக்கு புத்தி தெளிவித்து இறைவனாகவே இன்று அவர் வணங்கப்படுவதும் செவிவழிக்கதை. இது காட்டுவதன்ன. தீண்டாமை இருந்தது என்பதையா! இல்லை. அப்படி சிலர் தங்கள் படிப்பு அந்தஸ்து என்பதனால் செறுக்கு கொண்டவர்களை இது இந்துமதம் அல்ல என்று திருத்துவது. இம்மாதிரி செருக்குள்ள மனிதர்கள் எப்போதும் எந்த மனித சமுதாயத்தில் இருந்துகொண்டே இருந்திருக்கிறார்கள், மற்றும் இன்னும் இருப்பார்கள் (இன்று தீராவிடத்தலைவர்கள் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் சில ஆதிக்க சக்திகள் தலித்துகளின் மீதான கொடுமைகளைக் குறித்து வாயை திறக்காமல் இருப்பதை கவனிக்க). அம்மாதிரி செறுக்கு மற்றும் சாதிவெறியர்களை இது இந்துமதம் அல்ல என்று திருத்த சொல்லப்பட்ட பல வழிகள்.

  நான் மறுபடியும் சொல்கிறேன். சரியாக படியுங்கள். இந்து மதத்தில் எங்குமே தீண்டாமை சொல்லப்படவில்லை.

  எல்லாக்கதைகளிலுமே இப்படி தாழ்த்தப்பட்டவர்களை இறைவன் தனக்கு பிரியமானவனாக கொண்டும் மற்ற செருக்கான உயர்சாதியர்களை (சிலர் அப்படி தவறாக இருந்திருக்கலாம். ஆனால், அது தீண்டாமை அல்ல.. ) திருத்தவும்.

  தீண்டாமை பழைய சமுதாயத்தில் இருந்தது என்பதற்கு ஆதாரம் அதற்கான பழக்கவழக்கங்களை வழிமொழியும் ஒரு சில இந்து கதைகள் அல்லது காப்பியங்கள்தாம். அப்படி ஒன்றைக்கூட நீங்கள் சொல்ல முடியாது. எல்லா காப்பியங்களும் ஒரு சில மக்களை திருத்தி திருத்தி வழிகாட்ட சொல்லும் காப்பியங்கள்தாம். ஏன் என்றால், இந்து மதம் திரும்ப திரும்ப தீண்டாமை செய்யாதே என்பதை வலியுறுத்தவே இம்மாதிரி கதைகளை கோயிலோடு பிணைத்து வைத்துள்ளது.

  தேரோட்டி மகன் என்றால் தீண்டத்தகாதவனா! உங்களுக்கு தீண்டாமை என்றால் என்ன என்றே தெரியவில்லையே. கர்ணனே தேரோட்டியாக கடைசியில் இருக்கிறானே. இறைவன் கிருஷ்ணனே குதிரைகளை மேய்த்தும் அர்சுனனுக்கு தேரோட்டியும் இருக்கிறானே.

  இங்கு அரச குடும்பம் என்பது ஜனநாயகம் அன்று. அது அரச பரம்பரைக்கு மட்டுமே உரியது என்பதால் இப்படி இகழப்பட்டான். அதை நீங்கள் தீண்டாமை என்று எப்படிச்சொல்லலாம். அதை விட (இன்றைய அளவில்) தாழ்த்தப்பட்ட சாதியாக இருக்கும் இடைய சாதிக்காரன்தானே இறைவன் கிருஷ்ணன். அவன் துவாரகா என்ற பகுதிக்கு அரசனாக இருந்தானே. நீங்கள் வரலாற்றை குழப்பமாக கிருத்துவ மிஷனரிகளின் புத்தகம் மூலம் அறிந்துகொண்டிருக்கிறீர்கள்.

  ஏகலைவன் கதை. இதைக்கூட நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஏகலைவன் தீண்டத்தகாதவன் அல்ல. துரோணர் மீது பக்தியும், துரோணர் அர்சுனன் மீது பற்றும் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டும் ஒரு கதை. அந்த ஏகலைவனின் முழு கதை மகாபாரதத்தில் நீங்கள் படித்திருக்கவில்லை. மாறாக, மிஷனரிகள் எடுத்த காழ்ப்பு வாந்தியை மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். மகாபாரதத்தில் அந்த ஏகலைவன் கதை தொடர்கிறது. அவன் ஒரு தேசத்துக்கு மன்னனாகிறான். பின்னர், தருமர் நடத்தும் ராஜசூய யாகத்திற்கும் வருகிறான். அவனுக்கு அரச மரியாதை தரப்படுகிறது. இதுபோல பல நிகழ்ச்சிகள் மகாபாரதத்தில் ஏகலைவனின் ஏற்றத்தை காட்டுகின்றன.

  நீங்கள் மகாபாரதம் முதலானவற்றை நடுநிலையோடு படித்து பின்னர் தெரிந்துகொள்ளவும். பின்னர், உங்களுக்கே கிருத்துவ மிஷனரிகளின் விஷமம் புரியும்.

  கிருத்துவ மிஷனரிகள் ஏதோ உலகத்துக்கு பெருத்த நலன் ஏற்படுத்தியதாக சொல்கிறீர்கள். கருப்பு அடிமை முதல் ஹிட்லர் வரை கிருத்துவ மதக்காரர்களின் கொடுமை வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. இதை நான் எழுதும் இன்றைய தினத்தில் போப்பாண்டவரின் ஒரு செய்தி வந்துள்ளது. கிருத்துவ மிஷனரிகள் குழந்தைகளை பாலியல் பலாத்காரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டதால் கிருத்துவ மதத்திற்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக வருத்தப்பட்டுள்ளார். அய்யோ பாவம், போப். இந்த புரையோடிப்போன பாதிரி சமுதாயத்தை நினைத்து இப்போது கவலைப்பட்டு என்ன பிரயோசனம்?

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 20, 2008 @ 6:03 முப | மறுமொழி

 11. அருமையான பதிவு…. பதிவுக்கு மிக்க நன்றி ஜெயராமன் ஐயா 🙂

  பின்னூட்டம் by ஸ்ரீராம் முரளி — ஏப்ரல் 20, 2008 @ 7:24 முப | மறுமொழி

 12. சவுக்கடி பதில்கள் திரு.ஜெயராமன் அவர்களே. தொடருங்கள் உங்கள் சீரிய நற்பணியை.

  பின்னூட்டம் by Lakshminarayanan — ஏப்ரல் 20, 2008 @ 8:07 முப | மறுமொழி

 13. திரு ஜயராமன் சார் ! உண்மையில் சமீப வரலாற்றில் தலித்துகளுக்கு எதிரிடையாக செயல்படுவது உயர் சாதி இந்துக்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.அங்கேயும் பார்ப்பான்கள் என்பார்கள்.காமாலைக் கண்ணுடன் அறிபவர்கள் நிச்சயம் எதனையும் சரியாக புரிந்து கொள்ள மறுப்பார்கள்.அவர்களால் முடியாது.இவர்கள் கட்சி நடத்த இப்படிப்பட்ட வாதங்கள் தேவையாயிருக்கிறது.இந்து மதத்தின் சிறப்பை ஏற்க மாட்டார்கள்.இந்து என்றால் திருடன் என்பார்கள். உங்கள் எழுத்து இவ்ர்களை கடுகளவு சிந்திக்க வைத்தால் அதுவே
  பெரிய சாதனை.உங்கள் பணி தொடர,வெற்றியடைய வாழ்த்துகள்.

  பின்னூட்டம் by nkpunarvasu — ஏப்ரல் 20, 2008 @ 2:24 பிப | மறுமொழி

 14. அருமையான பதிவு, ஜயராமன் ஐயா.

  இந்து தர்மத்தின் ஆதார கோட்பாடுகளில் சாதிய, தீண்டாமை இல்லை என்பதை அருமையான ஆதாரங்கள் தந்து மறூமொழிகளில் விளக்கியிருக்கிறீர்கள்.. சக்தி, அதியமான, லைட்டு போன்றவர்களின் அரைவேக்காட்டு கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

  ஆனால் நடைமுறையில் இந்து சமுதாயத்தில், இந்த சாதிக் கொடுமைகள் புகுந்து விட்டன. மக்களைச் சீரழித்தன. ஆனால் அப்போதும், அதற்கு ஆதரவாக அல்ல, அந்தக் கொடுமைகளை எதிர்த்தும், சாதியத்தை வேரறுக்கவுமே இந்து சான்றோர்களும், சீர்திருத்தவாதிகளும் பாடுபட்டனர். சங்கரர், ராமானுஜர் முதல் பாரதி,நாராயணகுரு வரை இதற்கு உதாரணங்கள் உள்ளன.

  இந்துத்தவத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம் என்ற இந்த அருமையான பதிவைப் பார்க்கவும் –
  http://arvindneela.blogspot.com/2007/07/blog-post.html

  பின்னூட்டம் by ஜடாயு — ஏப்ரல் 22, 2008 @ 5:39 முப | மறுமொழி

 15. ///அதியமான, லைட்டு போன்றவர்களின் அரைவேக்காட்டு கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். ////

  No, you haven’t Jayaraman. I was not debating about the theoritical aspects from Vedanta and purananas. But about your assertation :

  /////தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை. தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது. அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே.///

  Do you honestly belvie that before British rule there was no trace of untouchabiltiy ? And you haven’t answered my queires about various incidents regarding untocuhabilty during SriRamanujar’s times. Untouchabilty flourished in those times without any alien rule causes or infulences. That is a basic fact which you try to deny. there are ample evidence for this.

  and for some issues about Gita, Samboogan, etc, pls see :

  http://subave.blogspot.com/2008/03/8.html

  I am not sure of the backgroud behind Samboogan’s killing or the morals
  behind it. only we all must have an open mind to discuss anything objectively.

  பின்னூட்டம் by K.R.Athiyaman — ஏப்ரல் 24, 2008 @ 4:58 முப | மறுமொழி

 16. வீரவேல் ! வெற்றிவேல் !

  ஜயராமன் ஐயா,

  பாரதத்தின் எதிரிகள் மூவர்:

  இனவெறியாளர்கள் – குத்தறிவு கும்பல்கள், எவாஞ்சலிக்கர்கள்

  மதவெறியாளர்கள் – இஸ்லாமியர்கள், எவாஞ்சலிக்கர்கள்,

  கொள்கைவெறியாளர்கள் – கம்யூனிஸ்ட்டுகள், சுரணையற்ற இந்துக்கள்

  தமிழகம் திராவிட நிலப்பகுதியைச் சார்ந்தது. இங்கே பகுத்தறிவுவாதிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள் இந்து சமயப் பெரியோர்களே. எனவே, ஆரிய-திராவிட பேதம் பேசும் தமிழ்நாட்டிலுள்ள குத்தறிவுவாதிகளை “தமிழக இனவெறியாளர்கள்” என்று அழைக்கலாமா?

  வந்தேமாதரம் !

  பின்னூட்டம் by cuziyam — மே 11, 2008 @ 8:59 முப | மறுமொழி

 17. // and for some issues about Gita, Samboogan, etc, pls

  Stop this nonsense.

  Hinduism has the courage to reason and do what one should do.

  We know what to be followed and what not to be followed. We, the Hindus, think that untouchability and castims should go away.

  Because, some of our rishis and gods did something, wee need not have to follow it.

  What do you think of us, followers of Mr. Muhammad or the made-believe Jesus followers?

  பின்னூட்டம் by A Hindu — மே 11, 2008 @ 9:04 முப | மறுமொழி

 18. Really wonderful post. Someone like you defintely needed to express truth to everyone.

  பின்னூட்டம் by Someone — மே 14, 2008 @ 10:44 முப | மறுமொழி

 19. திரு ஜெயராமன் அவர்களே
  உங்களை மிரட்டிய சாக்கடை லக்கிலுக் என்ற கிருஸ்ண குமாரை பழிவாங்க சரியான சந்தர்ப்பம்.
  பார்பண நிறுவனஙகளில் வேலை பார்த்து கொண்டே அங்கு கிடைக்கும் கண்ணி இணைப்பை பயன்படித்தி அவதூறு செய்யும் அவனை பழி வாங்குள்

  அவன் வேலை பார்பது
  பிராமிட் சாய்மீரா லிமிடெட்ல்

  அங்கு இருக்கும் பிராமிட் நடராஜனின் ஒரு வார்த்தை சொன்னால் போது அவன் அவ்வள்வு தான்
  யோசிக்க வேண்டாம் பழிக்கு பழி வாங்கவும்

  உங்கள் நிறுவனத்துக்கு புகார் கொடுப்பார்கள் என்று தயங்க வேண்டாம்.. உங்கள் நிறுவனத்தில் உங்களை போன்ற அறிவு ஜீவிகளை கேட்க்க யாராவது உண்டா

  Tamil Nadu
  Chennai
  Corporate Office:

  “Pyramid Saimira Towers”,
  # 27, G.N.Chetty Road, T.Nagar,
  Chennai-17, India.

  Tel : +91-44-4212 3456
  Fax : +91-44-4554 4615

  Regional Office: Tamil Nadu

  “Temple Tower”, C-1, 9th Floor,
  # 672, Anna Salai, Nandanam,
  Chennai-35, India.

  Tel : +91-44-4315 0603 /04
  Fax : +91-44-4315 0601
  E-mail: pstl@pstl.in

  பின்னூட்டம் by நல்லவன் — மே 16, 2008 @ 2:19 பிப | மறுமொழி

 20. அதியமான் தீண்டாமை என்பது இந்து தரும சாஸ்திரங்கள் கூறியதல்ல. நான்கு வேதங்களிலோ உபநிடதங்களிலோ அல்லது கீதையிலோ சொல்லப்படவில்லை. எனவே ஜெயராமன் தீண்டாமைக்கு இந்து தருமத்தில் இடமில்லை என சொல்வது சரிதான். ஆனால் வெள்ளையர்கள் வருவதற்கு முன்னால் இந்திய சமுதாயத்தில் தீண்டாமை இருந்தது. அதனை இறுக்கமாக மாற்றியதில் வெள்ளையர் பங்கும் இருந்தது. அது சமுதாயத்தின் குற்றம் இந்து தருமத்தின் குற்றமல்ல. மாறாக வேறெந்த மதத்தை விடவும் சமுதாய ஏற்றதாழ்வினை எதிர்த்த வரலாறும் இறையியலும் இந்து தருமத்துக்கே உண்டு.

  பின்னூட்டம் by அரவிந்தன் நீலகண்டன் — மே 27, 2008 @ 3:39 பிப | மறுமொழி

 21. /////தீண்டாமை என்பது இந்து மத புராணங்களிலும், கதைகளிலும் எங்குமே இல்லை. தீண்டாமை என்பது புழங்கப்பட்டதாக ஆங்கிலேய காலத்திற்கு முன்னால் சொல்ல முடியாது. அந்த கொடுமை ஆரம்பித்தது ஆங்கிலேயர் வரவுக்கு பின்னே./// புதிய தகவல்களை கூறி இருக்கிறீர்கள். உங்கள் கூற்றுப்படி இந்திய சமூத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னால் தீண்டாமை மற்றும் வர்ண பேதங்கள் எதுவும் இல்லை. கிறிஸ்தவ மிஷினரிகள் வந்து வாந்தி எடுத்தபின்தான் இவையெல்லாம் வந்தன. ஆங்கிலேயர் வருகை இந்தியாவில் 16-ம் நூற்றாண்டுககு பிறகுதான் நிகழ்ந்தது. அவர்கள் ஆதி காலத்திலிருந்தே இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. அப்படியென்றால் 16-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்தியாவில் மக்களிடையே எந்த பேதங்களும் இல்லாமல் சமத்துவமாகத்தான் வாழ்ந்தார்களா? பிறகு கிறிஸ்தவ மிஷினரிகள் வந்து வாந்தி எடுத்ததால் தான் இங்குள்ளவர்கள் வாந்தி எடுத்தார்களா?வர்ண தர்மத்தை பற்றி கூறப்படுகின்ற அனைத்தும் கிறிஸ்தவ மிஷினரிகள் உருவாக்கியவையா? //கிருத்துவமும், இஸ்லாமும் கொத்தடிமைகளை கூட்டம் கூட்டமாக விற்றுக்கொண்டிருந்தபோது இந்து கலாசாரம் சமுத்துவமாய் இருந்ததற்கு ஆயிரமாயிரம் கதைகள் உள்ளனவே.//
  நீங்கள் ஆயிரம் கதை கூற வேண்டாம். அதில் ஒரு கதை (உண்மை கதை) கூற முடியுமா?
  //ஆலேலூயாவின் “சுவிசேஷம்” என்ற ஏமாற்றுவித்தையால், பல பாமர மக்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்வதை விடுத்து பணத்தை கொண்டுவந்து இந்த புரட்டு பாதிரிகளிடம் கொட்டுகிறார்கள். பாதிரிகள் கோடீஸ்வரர்களாகிவிடுகிறார்கள்// இந்தியாவில் பல ஹை-டெக் சாமியார்கள் உலாவந்து கொண்டிருக்கிறார்களே இவர்களெல்லாம் தங்கள் வயிற்று பிழைப்புக்கு பிச்சையா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முற்றும் துறந்த முனி வருவது எ.சி வசதி செய்யப்பட்ட இறக்குமதி காரில,; நடப்பது சிவப்பு கம்பளத்தில், உறங்குவது மலர் மஞ்சத்தில் பட்டு மெத்தையில், இவர்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள். இவர்கள் சாதாரண மக்களுக்கு அடிக்கடி காட்சி தரமாட்டார்கள். காரணம் ஏழைகளால் இவர்களுக்கு கொடுக்க முடிந்தது தங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய அளவு காசினைதான். ஆனால் அரசியல்வாதிகளாலும், பெரும் கோடீஸ்வரர்களாலும் இவர்களுக்கு பணமாக கொட்டி கொடுக்க முடியும். ஆதனால் அப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் அடிக்கடி தரிசனம் தருவார்கள். இந்த பணத்தை வாங்கி இவர்கள் கோடீஸ்வரர்களாவதில்லையா? உங்களிடம் வந்து பிச்சையா கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  பின்னூட்டம் by John — ஜூலை 26, 2008 @ 3:04 பிப | மறுமொழி

 22. சபாஷ்!!! சரியான கேள்வி ஜான். எத்தனையோ பித்தலாட்ட சாமியார்களைப் பற்றி செய்திகளில் படிக்கிறோம். அவர்களின் பித்தலாட்டங்களைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்து மதத்தவர்கள் வாய் திறக்காமல் தானே இருக்கிறார்கள்? அந்த சாமியார்களைச் சாடவும் செய்கிறார்களே!! ஆனால் இவர்களில் ஒருவரும், திரு ஜெயராமன் எழுதியிருப்பதைப் போன்று, நொண்டிக்கு-கால் தருகிறோம் என்றோ, குருடனுக்கு-கண் தருகிறோமென்றோ சொல்லவில்லயே!! இருப்பினும், அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதால், அவர்களைக் கைது செய்யும்போது, எந்த வித ஆர்ப்பாட்டங்களையும், இந்துக்கள் செய்வது இல்லயே!! மாறாக கயவர்கள் என்று ஏற்றுக்கொள்கிறார்களே!! இந்த நியாயம் கொண்டு பார்க்கும்போது, ஏமாற்று வேலைகளிலேயே ஈடுபட்டுக் கொண்டு பிழைப்ப் நடத்திக்கொண்டிருக்கும், Evangelistகளையல்லவா, முதலில் கைது செய்ய வேண்டும்?

  அடுத்தவன் சொத்தை அபகரித்து வாழ்ந்து கொண்டிருக்கும் சில “மானங்கெட்ட தலைவர்கள்” கூட இதைக் கண்டு வாய் பொத்தியன்றோ இருக்கிறார்கள்? ஓருவருக்கும் இந்த ஏய்த்து பிழைக்கும் கூட்டத்தினைக் கேள்வி கேட்கத் துணிவில்லையே!!

  இந்து மதத்தை உபயோகித்து ஏய்த்துப் பிழைக்கும் சாமியார்களுக்கும், உங்கள் மதத்தின் missionariesக்கும் இருக்கும் இரு பெறும் வித்தியாசங்கள் என்னவென்றால்

  1. இந்து மதப் போலிச் சாமியார்கள், (பகுத்தறிவு அகராதிப்படி) உண்மையான கயவர்கள். ஆனால் உங்கள் மதக் கயவர்கள் (அதே பகுத்தறிவு அகராதிப்படி)பகுத்தறிவு வாதிகள் …….. கொடுமைடா சாமி

  2. இந்து மதப் போலிச் சாமியார்கள், மக்களை ஏமாற்றி, பணத்தை நேரிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு மதத்தின் அரவணைப்புக் கிடையாது. ஆனால், உங்கள் மதத்தின் ஆதரவு மற்றும் அரவணைப்போடே மக்களை ஏமாற்றி, அதற்கு மதத்தினடமிருந்தே பணம் பெறுகிறார்கள்.

  இதிலிருந்தே, எந்த மதத்தில், மதமே தவறு செய்கிறது என்பதும், எந்த மதத்தில், மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

  ஆக இந்து மதத்தைக் குறை கூறும் முன், தங்கள் தங்கள், முதுகுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

  திரு ஜெயராமன் மற்றும் திரு லக்ஷ்மிநாராயணன் அவர்களே,

  மிக ஆழ்ந்த பதிவு மற்றும் பின்னூட்டங்கள், வணங்குகிறேன்.

  பின்னூட்டம் by வெங்கடேஷ் — ஜூலை 28, 2008 @ 6:07 முப | மறுமொழி

 23. மிகவும் அழகிய பதிவு. இல்லாத சாதிகளை உண்டாக்கி குளிர் காயும் பகுத்தறிவு (அற்ற) வாதிகள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய பதிவு. பார்ப்பனீயம் என்பதே இந்த பகுத்தரிவுப் பன்னாடைகள் உருவாக்கியது தான். என் கருத்துக்களுக்கு ஒத்த கருத்துடையவர்கள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  பின்னூட்டம் by ரகு ஐயர் — செப்ரெம்பர் 17, 2008 @ 10:52 முப | மறுமொழி

 24. வெங்கடேஷ் அவர்களே சரியான பதில் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை வெகு நாட்களாக உங்கள் பதிலை பார்க்கவில்லை . அப்படியா! இந்து சாமியார்களின் பித்தலாட்டங்கள் வெளிப்பட்டு அவர்கள் பிடிபட்டால் யாருமே எதிர்ப்பு தெரிவிப்பது இல்லையா! இந்தியாவில் தானே இருக்கிறீர்கள். எதாவது ஒரு சாமியார் பிடிபட்டால் பேப்பரை பாருங்கள் பி.ஜெ.பி (BJP) என்ற கட்சி “ஐயோ சாமியை அநியாயமா கைது செய்து விட்டார்களே” என்று மூலைக்கு மூலை முதல் ஆளாக கொடி பிடித்து கொண்டு நிற்பார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது சகோதர இயக்கங்கள் தங்கள் பங்குக்கு அவர்கள் வழியில் போராட்டங்களை நடத்துவார்கள். ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் நாங்கள் எதிர்ப்பே தெரிவிப்பதில்லை என்று. கிறிஸ்தவர்கள் யாராவது பித்தலாட்டம் செய்து பிடிபட்டால் அவர்களுக்காக எந்த தேசிய அரசியல் கட்சியும் கொடி பிடித்து கொண்டு நிற்பதில்லை சார். அடுத்த விஷயம் “நொண்டிக்கு-கால் தருகிறோம் என்றோ, குருடனுக்கு-கண் தருகிறோம்” என்று சொல்லிக்கொண்டு கன்வென்ஷன் கூட்டங்கள் நடத்துகிறார்கள். உண்மைதான் ஆனால் அவர்கள் அதை கடவுளின் பெயரை சொல்லியோ அல்லது இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லியோதான், கடவுள் கால் தருவார், இயேசு கண் தருவார் என்று கூறித்தான் செய்கிறார்கள். ஆனால் இந்து சாமியார்கள் சொல்வது என்ன தெரியுமா! “நாந்தான் கடவுளின் அவதாரம். எனக்கு பூஜை செய்தால் உனக்கு எல்லாம் நடக்கும்” பல கோவில்களில் சாமிக்கு சரியாக பூஜை நடக்கிறதோ இல்லையோ, சாமியாருக்கு அனைத்து வித அபிஷேகங்களுடன் பிரம்மாண்ட பூஜைகள் நடக்கும். காரணம் அவர் கடவுளின் அவதாரம். அவர் சொல்லுவார் “நள்ளிரவு எனக்கு பூஜை செய் உனக்கு குழந்தை வரம் தருகிறேன், எனக்கு தங்கத்தில் நகைகள் தா, உன் வீடு முழுவதும் தங்கத்தில் ஜொலிக்க வைக்கிறேன். நீ சாமிக்கு பூஜை செய்ய வேண்டாம் எனக்கு செய்தல் போதும், காரணம் நாந்தான் கடவுளின் அவதாரம்.” இப்படி ஊருக்கு ஊர் பல கடவுள் அவதாரங்கள் சுகபோகங்களுடன் அனைத்து பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டு இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்குமே. இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் இவர்கள் மீது சுண்டு விரலை அசைக்கும் துணிவு எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கோ இருக்கிறதா? உங்கள் பாணியிலேயே சொல்கிறேன். missionariesக்கும், சாமியார்களுக்கும்இருக்கும் இரு பெறும் வித்தியாசங்கள் என்னவென்றால்

  1. கிறிஸ்தவ missionariesகள் கடவுள் பெயரை சொல்லி கயமைத்தனம் செய்கிறார்கள். ஆனால் இந்து சாமியார்கள் நாந்தான் கடவுள், கடவுளின் நேரடி ஏஜென்ட் என்று கூறி கயமைத்தனம் செய்கிறார்கள்.

  2. கிறிஸ்தவ பித்தலாட்டக்கரர்கள் பிடிபட்டால் அவர்கள் அப்பாவிகள், அநியாயமாக கைது செய்து விட்டார்கள் என்று கூறி எந்த இயக்கமும், எந்த தேசிய அரசியல் கட்சியும் கொடி பிடித்து ஊர்வலம் நடத்துவது இல்லை. கட்சிகளின் அணைப்பில் ஒளிந்து கொள்வது இல்லை.ஆனால் இந்து சாமியார்கள் கைது செய்யப்பட்டால் இது அனைத்தும் நடக்கிறது.

  இதிலிருந்தே, எந்த மதத்தில் மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும், எந்த மதத்தில் கடவுளே நாந்தான் என்று கூறி தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் புரியும் என்று நினைக்கிறேன்

  பின்னூட்டம் by John — ஜனவரி 10, 2009 @ 1:46 பிப | மறுமொழி

 25. வாருங்கள் ஜான் அவர்களே. நானும் எதேச்சையாக இன்று தான் உங்கள் மறுமொழியைப் பார்த்தேன். நீங்கள் முதலில் எந்த கிரகத்திலிருந்து வருகிறீர்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும். இந்து சாமியாரை உங்கள் missionaries, orissaவில் கொன்றதற்கு, BJP, RSS தவிர வேறு எந்த அமைப்பு எதிர் குரல் கொடுத்தது? ஆனால், கோவத்தில் இந்துக்கள் உங்கள் missionariesஐ தாக்கிய போது, ஒட்டு மொத்த அரசாங்கமும், mediaவும், அனைவரும் தங்கள் போலி மதச்சார்ப்பின்மையை வெளிப்படுத்தியதை நாங்களும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  நீங்கள் குறிப்பிட்ட மாதிரி நடந்து கொண்ட ஒரு ப்ரேமானந்தா சாமியாரையோ, அல்லது அவர் போன்றோரையோ, கைது செய்த போது, எந்த இந்து அமைப்பும் அதற்கு குரல் கொடுக்கவில்லை என்ப்தை நீங்களும் அறிவீர்கள்.

  மேலும், நீங்கள் குறிப்பிட்ட படி நடக்கும் சாமியார்களை நாங்களே போலி என்று தானே கூறுகிறோம்?? அவர்களிடம் ஏமாறுபவர்கள், உங்கள் போலி bishop மற்றும் missionaries இடம் ஏமாறுபவர்களைப் போன்றுதான்.

  நீங்கள் சொல்கிற படி இயேசு தான் கை கொடுக்கிறார், பார்வைக் கொடுக்கிறார், கால் கொடுக்கிறார் என்று கூட்டம் போட்டு கூவுவது, இயேசுவுக்கு நீங்களே அவப்பெயர் ஏற்படுத்துவதுதான். இயேசு கொடுக்கிறார் என்றால், ஏன் இன்னும் முடவர்களும், குருடர்களும், நொண்டிகளும், இருக்கிறார்கள்?

  Atleast, போலி இந்து சாமியார்கள் கூட கடவுளுக்கு அவப்பெயர் ஏற்ப்படுத்துவதில்லை. நான் கடவுள் என்று அவர்கள் கூறுகின்ற போது, சில ஏமாளிகளைத் தவிர பிறர், அந்த மாதிரி கூறும் சாமியார்களின் போலித்தன்மயை உண்ர்ந்து விடுகிறார்கள்.

  இதுல இந்த தினகரன் குடும்பமே கூத்தடிக்கறத பார்க்கறப்ப, I just laugh from the Bottom of My Belly. அவங்களா ஒரு பத்து பேர நொண்டி, குருடு இப்படி, நடிக்க சொல்லிட்டு, அத இயேசு, குணப்படுத்துவாரம். இதுல காமெடி என்னன்னா, குருடா வர்றவன், கண்ணு நல்லாத்தான் இருக்கும், சும்மா அப்படியே முழிய மேல தூக்கி, ராஜபார்வை கமல் மாதிரி வருவான். நம்ம தினகரன் மாதிரி ஆளுங்க சொன்னவுடனே இயேசு சொய்ய்ய்ய்ங்னு ஒரு ஒளிய அனுப்புவாறு. உடனே இவன் முழி, கிழ வந்து சரியாயிடும்!! இயேசு குணப்படுத்திட்டார்ம்பான். ஆனா, நான் கேட்ட உண்மையான கண் இல்லாத ஒரு christian, கண் இல்லாமயே ஒரு helper வச்சு exam எழுதி, பாஸ் ஆவார். அவருக்கு ஏன், ஒங்க இயேசு கண் தர மாட்டேங்கறார்?? அதே மாதிரி, நொண்டியா நடிக்கறவன் காலு நல்லாத்தான் இருக்கும். சும்மா சாய்ச்சு சாய்ச்சு நடப்பான். அப்புறம் குணமாயிடுவான். ஆனா உண்மையான நொண்டி என்னிக்குமே நொண்டியாத்தான் இருப்பான்.

  அதனால தான் கேக்கறேன்,
  இதிலிருந்தே, எந்த மதத்தில், மதமே தவறு செய்கிறது என்பதும், எந்த மதத்தில், மதத்தின் பெயரால் தனி நபர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறதா???

  பின்னூட்டம் by வெங்கடேஷ் — ஜனவரி 23, 2009 @ 5:03 முப | மறுமொழி

 26. நல்ல பதில் வெங்கடேஷ் அவர்களே. நான் தமிழ் நாட்டில்தான் இருக்கிறேன். ஒரிசாவில் missionaries இந்து சாமியாரை கொன்றார்களா?.
  ஒரிசாவில் நடைபெறுவது BJP கூட்டணி ஆட்சி தானே. எந்த missionary கொலை செய்தார் என்று்,செய்தவரை பற்றிய விபரங்களை அரசாங்கம் வெளியிட்டதா?

  கிறிஸ்தவர்கள் மீது பழி வேண்டுமென்றே சுமத்தப்பட்டது. காரணம் அவர்கள் எதிர் பார்த்திருந்த வாய்ப்பு அது. நீங்கள் கோபப்பட்டு தாக்கினார்கள் என்கிறீர்கள். இயலாமையின் காரணமாக வருவது தான் கோபம். உங்களது எந்த இயலாமை கோபமாக வெளிப்பட்டது. missionariesஐ மட்டுமா தாக்கினீர்கள். கீழே உள்ள தளத்தை பார்வையிடுங்கள். உங்கள் சொந்தக்காரர் உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பட்டியல் தந்திருக்கிறார்.

  http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7837&Itemid=52

  உங்களுக்கெல்லாம் கோபம் வந்தால் கொலையும், கற்பளிப்பும்தான் செய்வீர்களோ?
  இதே ஒரிசாவில் இரண்டு மகன்களுடன் தூங்கிகொண்டிருந்த missionary ஒருவர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டாரே, அவர் கொல்லப்பட்டபோது கிறிஸ்தவர்கள் இப்படியா இழிவாக நடந்து கொண்டார்கள்.
  குஜராத்தில் இதே போலத்தான் கொலை வெறி ஆட்டம் ஆடினீர்களே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? ‘சும்மா விளயாட்டுக்கு செய்தார்கள் என்றா?
  ராமரின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் கட்சியின் தலைமையின் ஆசியோடுதானே இது நடந்தது. அது போலத்தான் ஒரிசாவில் மாநில கட்சியுடன் கூட்டு வைத்திருந்த அதே அரசியல் சகுனிகளின் பிழைப்பு இது. மலிவான உணர்ச்சிகளை தூண்டி விடும் ஷகீலா படம் தயாரிப்பவர்களுக்கும். இது போன்று மத உணர்ச்சிகளை தூண்டி கட்சி நடத்துபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று கூறியே ஆட்சியை பிடித்து ஆறு ஆண்டுகள் ஆட்சியும் செய்தார்கள். ஆனால் பாவம் ராமர். இவர்கள் கோவில் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து நொந்து போய்விட்டார். ஆறு ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட கோவில் கட்ட அசைக்கவில்லை. இப்போது அடுத்த தேர்தல். திரும்பவும் ராமர் வந்துவிட்டார்.
  இன்னும் எத்தனை ஆண்டுக்கு இதை கூறி ராமரை வெயிலிலும், மழையிலும் அல்லல் பட வைக்க போகிறார்களோ. அடுத்தது ராமர் பாலம். பல ஆண்டு காலமாக அரசும் அரசியல்வாதிகளும் பேசிக்கொண்டிருந்த விசயம் சேது சமுத்திரம். எல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து திட்டம் நிறைவேற்றப்படும் சமயம் வந்தது ஒரு கூச்சல் ‘ஐயோ ஐயோ ராமர் பலத்தை இடிக்க போகிறார்கள். இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை, ஆபத்து’ என்று. கும்பகர்ண வரம் வாங்கியவர்கள் இவர்கள். அதுவரை தூங்கி கொண்டிருந்தார்கள். கடலில் அரசு பணத்தை கொட்டி வேலை ஆரம்பிக்கும்போது முழித்து விட்டார்கள். அது வரை எட்டி பார்க்க ஆள் இல்லாமல் இருந்த ராமர் பாலம் திடீர் வழிபாட்டு தளம் ஆகி விட்டது. பாவம், முற்றி போன கலி ராமரை இந்த பாடு படுத்துகிறது

  “இந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து ‘இந்து’க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள். இந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைகாரனாக நின்று கொண்டிருக்கிறது.”

  இதை நான் சொல்லவில்லை ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் அவர்கள் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி.

  ஒட்டு மொத்த அரசாங்கமும், mediaவும், அனைவரும் இதனை தான் ஒரிசா சம்பவத்தில் கண்டித்தார்கள்.
  கிறிஸ்தவர்கள் மீது ஆத்திரபடுவதற்கு முன் உங்கள் பக்கம் தவறு எங்குள்ளது என்று யோசித்து அதை சரி செய்ய முயற்சி செய்வதுதான் இந்து மதம் வளர்வதற்கு வழியே தவிர. இப்படி உணர்ச்சிகளை தூண்டி விடுவது இல்லை. இன்னும் காட்டு மிராண்டிகள் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. தவறுகள் எல்லாம் மதத்திலும் நடக்கின்றன. எனது மதம் நூறு சதவீதம் பரிசுத்தமானது என்று சொல்லும் யோக்கியதை யாருக்கும் இல்லை.

  பின்னூட்டம் by John — ஏப்ரல் 15, 2009 @ 2:53 பிப | மறுமொழி

 27. நாங்கள் என்ன இயசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு பாத பூஜையா நடத்தி கொண்டிருக்கிறோம். நான் முதலிலேயே சொன்ன மாதிரி அவர்கள் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நான்தான் கடவுள் என்றோ இயேசுவின் அவதாரம் என்றோ மக்களை காக்க பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்று கூறவில்லையே. அவருக்கு கட்டணம் செலுத்தி யாரும் பாத பூஜை நடத்தவில்லையே. கண்டிப்பாக இயேசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுவது. அவருக்கு அவப்பெயர் உண்டாக்குவதுதான். இன்னும் குருடர்களும், முடவர்களும் இருக்கிறார்கள் ஆனால் இந்த கலியுகத்தில் அன்னை ஆதி பராசக்தியும், கல்கி பகவானும், சக்தி அம்மாவும் நம் கண் முன்னே இருக்கும்போது இந்த நாட்டில் ஏன் இத்தனை குழப்பங்கள். இவர்கள் ஒரு விரல் அசைத்தால் இந்த குழப்பங்கள் எல்லாம் ஓடி விடாதா. மேல்மருவத்தூரில் பங்காரு அம்மாவின் காலுக்கு பூஜை செய்ய 10,000 பணம் செலுத்த வேண்டுமாம். உலகத்தின் அன்னை ஆதி பராசக்திக்கு பாத பூஜை செய்ய பணம் கொடுக்க வேண்டும் என்றால்…. அதை என்னவென்று சொல்வது. இந்த அம்மா முன்பு மின்சார வாரிய ஊழியராக இருந்தவராம். ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்கிற்கு கரண்ட் ஷாக் அடித்ததால் அடுத்தவர் மனதில் நினைப்பதெல்லாம் கேட்கும். அதுபோல் இவருக்கும் ஷாக் ஏதும் அடித்து அதன் மூலம் சக்தி எதாவது கிடைத்திருக்குமோ என்று தெரியவில்லை.
  இந்த அம்மாவிற்கு வயதாகிவிட்டதால் தன் மகனுக்கு அடுத்து அம்மா பட்டம் சூட்ட போகிறாராம். அந்த அளவுக்கா இந்த நாட்டில் பெண்களுக்கு பஞ்சம் வந்து விட்டது. ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை அன்னை ஆதி பராசக்திக்கு அவதாரம் எடுக்க.
  நாட்டில் ஒருவேளை உணவு இல்லாமல் லட்சகணக்கில் ஏழைகள் திண்டாடுகின்றனர். ஆனால் அன்னை பங்காரு அதிபராசக்திக்கு கோடி கணக்கில் சொத்துக்கள். அன்னை ஒரு விரல் அசைத்தால் இந்த ஏழைகள் பணக்காரர்கள் ஆக மாட்டார்களா? தினகரனிடம் கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் ஏழைகளுக்கு கொஞ்சம் பிட்சை தான் போடுவார். அவர் சாதரண மனிதன் தானே. ஆனால் கடவுள் அப்படி இருக்கலாமா. நாட்டில் இவ்வளவு அநியாயம் அக்கிரமம் நடக்கும்போது தன்னுடைய சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கலாமா.

  அடுத்து ‘அம்மா பகவானும் அப்பா பகவானும்’ கலி யுகத்தில் மக்களை காக்க வந்த விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம். இவர்கள் அடிக்கும் கூத்து ஆங்கில fantasy படங்களையும் மிஞ்சிவிடும். புராண இதிகாச காலங்களில் கூட சித்தர்களும் முனிவர்களும் கடும் தவம் செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த கலியுக கடவுள்களை காண தவம் எதுவும் செய்ய தேவை இல்லை பணம் மட்டும் இருந்தால் போதும்.அவர்களை பார்த்து விடலாம். அவர்களுடைய ஆசி கிட்டும். ஆனால் அந்த ஆசியை கொண்டு மருந்துக்கு கூட பலன் இல்லை. ஆனால் இவர்கள் கடவுள் அவதாரங்கள். என்ன கொடுமை சார் இது. பக்தர்கள் இவர்களது செருப்புகளுக்கு தான் பூஜை செய்ய வேண்டும். அத பாக்கிறப்ப நானும் உங்கள மாதிரியே just laugh from the Bottom of My Belly.
  இதில் பெரிய வேடிக்கை இந்த கடவுள்கள் மேல் கோர்ட்டில் வழக்குகளும் இருகின்றன.

  அடுத்து சாய்பாபா, இவர் பொது இடங்களிலேயே லிங்கம் வரவைப்பார், கையில் விபூதி கொட்டும், தங்கம் வரும் இன்னும் நிறைய.. இப்படி சக்தி உள்ள இந்த கடவுள் அவதாரம் ஒரு மிக பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறாராம். அங்கே வசதியற்றவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார்களாம். சந்தோசம். நான் கேட்பது, இவ்வளவு சக்தி உள்ள இவர் எதற்காக மருத்துவமனை கட்ட வேண்டும். பேசாமல் ஒரு இடத்தில உட்கார்ந்து கொண்டு நோய் என்று வருபவர்களுக்கு தன்னுடைய கைகளால் தொட்டு அப்படியே பிணியை குணமாக்கி அனுப்பி விடலாமே. கையை நீட்டினால் தங்கமும், வாயை திறந்தால் லிங்கமும் கொண்டு வருபவருக்கு இது ஒரு பெரிய விசயமா என்ன?

  இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ஆனால்
  யாராவது ஒருவர் கிறிஸ்தவர்களிடம் வந்து ‘நாந்தான் இயேசு வந்திருக்கிறேன், மறு அவதாரம் எடுத்து வந்து விட்டேன்’ என்றால் உடனே அவர் காலடியில் விழுந்து யாரும் வணங்குவது கிடையாது. அப்படி சொல்ல யாருக்கும் தைரியமும் கிடையாது. எந்த கடவுள் அவதாரமும் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு தானே கோவில் கட்டிகொள்வதில்லை. இவர்களே தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும் செலவில் கோவில் அல்லது ஆசிரமம் கட்டிக்கொள்கிறார்கள். பிறகு நாந்தான் அந்த கடவுள் என்று அங்கே உட்கார்ந்து விடுகிறார்கள். அவர் அதன் பிறகு தரையில் நடக்க மாட்டார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவரது பக்தர்களில் யாருக்காவது ஒரு நன்மை நடந்து விட்டால் போதும். அதன் பிறகு அவர் நிரந்தர கடவுள் தான். இறைவனுக்கு நடக்கின்ற அனைத்து அபிஷேகங்களும் ஆராதனைகளும் அவர்க்கு நடக்கும். அவரை காண மக்கள் காத்து கிடப்பார்கள். அவரை கண்டவுடன் கண்ணீர் விட்டு அழுவார்கள். அவர் இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டி கொண்டே போவார். ஆசிர்வதமாம் அதற்கு பெயர். பின்னர் அவரது பெயரில் கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கும். ஆனால் அவரது பழைய கதையை கிளறி பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கும்.இன்னும் அவதாரங்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்

  நீங்கள் போலி இந்து சாமியார்கள் கடவுளுக்கு அவபெயர் ஏற்ப்படுத்துவதில்லை என்கிறீர்கள்
  இப்படி செய்வதெல்லாம் கடவுளை கேவலப்படுத்தும் செயல் இல்லையா. இதில் யாரவது இந்த மாதிரி கடவுள்களை பற்றி எதாவது பேசிவிட்டாலோ எழுதி விட்டாலோ போதும் அவர் உடனே இந்துக்களின் விரோதியாகி விடுவார். இந்த நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒருபக்கம் அலற ஆரம்பித்து விடுவார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் இது போல இரண்டு கடவுள் அவதாரங்கள் தொலைகாட்சியில் சண்டை போட்டு உலகம் முழுக்க தங்கள் புகழை பரப்பினார்களே. அது திரைப்படதிலும் வந்து இன்னும் புகழ் பெற்றது. அது கடவுளை கேவலபடுத்துவது இல்லையா?

  ஆரம்பத்தில் இருந்தே மதம் தவறு செய்கிறது என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதுமே மதம் தவறு செய்வதில்லை மதத்தின் பெயரை சொல்லி மனிதர்கள் தான் தவறு செய்வார்கள். செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எப்போதுமே போலி கடவுள்களை உருவாக்கியதும் இல்லை அவர்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்ததும் இல்லை. ஆனால் தற்காலத்திலும் இதெல்லாம் எங்கு நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
  பிரேமானந்தா போன்றவர்கள் லோக்கல் பிக் பாக்கெட், குவாட்டர் கோவிந்தன் போன்றவர்கள். அதனால் அந்த மாதிரிபட்டவர்கள் கைது செய்யப்படும்போது நீங்கள் பெரிய அளவில் எதிர்ப்பு கட்டுவதில்லை. ஆனால் இந்தமாதிரி சர்வதேச சாமியார்கள் (உங்க பாஷையில் அவதாரங்கள்) மற்றும் கடவுள்களின் சுத்த தன்மையை சோதிக்க உங்கள் தலைவர்கள் யாருக்காவது தைரியம் இருக்கிறதா.

  நீங்கள் எனக்கு முதலில்அளித்த பதிலில் ஒற்றை சுட்டி காட்டுகிறேன்

  கிறிஸ்தவர்கள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன் என்றால் அவர்கள் கடவுளைதான் நம்புகிறார்கள். நான்தான் கடவுள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை அல்ல.

  நீங்களும் அடுத்த மதத்தை குறை கூறுமுன் சற்று உங்கள் முதுகையும் பார்த்து கொள்ளுங்கள். எல்லாருடைய முதுகிலும் அழுக்கு மூட்டை இருக்கத்தான் செய்கிறது. யாருடைய முதுகும் சுத்தமில்லை.

  பின்னூட்டம் by John — ஏப்ரல் 26, 2009 @ 12:08 பிப | மறுமொழி

 28. நாங்கள் என்ன இயசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு பாத பூஜையா நடத்தி கொண்டிருக்கிறோம். நான் முதலிலேயே சொன்ன மாதிரி அவர்கள் இயேசுவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நான்தான் கடவுள் என்றோ இயேசுவின் அவதாரம் என்றோ மக்களை காக்க பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்று கூறவில்லையே. அவருக்கு கட்டணம் செலுத்தி யாரும் பாத பூஜை நடத்தவில்லையே. கண்டிப்பாக இயேசுவின் பெயரை சொல்லி ஏமாற்றுவது. அவருக்கு அவப்பெயர் உண்டாக்குவதுதான். இன்னும் குருடர்களும், முடவர்களும் இருக்கிறார்கள் ஆனால் இந்த கலியுகத்தில் அன்னை ஆதி பராசக்தியும், கல்கி பகவானும், சக்தி அம்மாவும் நம் கண் முன்னே இருக்கும்போது இந்த நாட்டில் ஏன் இத்தனை குழப்பங்கள். இவர்கள் ஒரு விரல் அசைத்தால் இந்த குழப்பங்கள் எல்லாம் ஓடி விடாதா. மேல்மருவத்தூரில் பங்காரு அம்மாவின் காலுக்கு பூஜை செய்ய 10,000 பணம் செலுத்த வேண்டுமாம். உலகத்தின் அன்னை ஆதி பராசக்திக்கு பாத பூஜை செய்ய பணம் கொடுக்க வேண்டும் என்றால்…. அதை என்னவென்று சொல்வது. இந்த அம்மா முன்பு மின்சார வாரிய ஊழியராக இருந்தவராம். ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்கிற்கு கரண்ட் ஷாக் அடித்ததால் அடுத்தவர் மனதில் நினைப்பதெல்லாம் கேட்கும். அதுபோல் இவருக்கும் ஷாக் ஏதும் அடித்து அதன் மூலம் சக்தி எதாவது கிடைத்திருக்குமோ என்று தெரியவில்லை.
  இந்த அம்மாவிற்கு வயதாகிவிட்டதால் தன் மகனுக்கு அடுத்து அம்மா பட்டம் சூட்ட போகிறாராம். அந்த அளவுக்கா இந்த நாட்டில் பெண்களுக்கு பஞ்சம் வந்து விட்டது. ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை அன்னை ஆதி பராசக்திக்கு அவதாரம் எடுக்க.
  நாட்டில் ஒருவேளை உணவு இல்லாமல் லட்சகணக்கில் ஏழைகள் திண்டாடுகின்றனர். ஆனால் அன்னை பங்காரு அதிபராசக்திக்கு கோடி கணக்கில் சொத்துக்கள். அன்னை ஒரு விரல் அசைத்தால் இந்த ஏழைகள் பணக்காரர்கள் ஆக மாட்டார்களா? தினகரனிடம் கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் ஏழைகளுக்கு கொஞ்சம் பிட்சை தான் போடுவார். அவர் சாதரண மனிதன் தானே. ஆனால் கடவுள் அப்படி இருக்கலாமா. நாட்டில் இவ்வளவு அநியாயம் அக்கிரமம் நடக்கும்போது தன்னுடைய சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கலாமா.

  அடுத்து ‘அம்மா பகவானும் அப்பா பகவானும்’ கலி யுகத்தில் மக்களை காக்க வந்த விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம். இவர்கள் அடிக்கும் கூத்து ஆங்கில fantasy படங்களையும் மிஞ்சிவிடும். புராண இதிகாச காலங்களில் கூட சித்தர்களும் முனிவர்களும் கடும் தவம் செய்தால் தான் இறைவன் அவர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த கலியுக கடவுள்களை காண தவம் எதுவும் செய்ய தேவை இல்லை பணம் மட்டும் இருந்தால் போதும்.அவர்களை பார்த்து விடலாம். அவர்களுடைய ஆசி கிட்டும். ஆனால் அந்த ஆசியை கொண்டு மருந்துக்கு கூட பலன் இல்லை. ஆனால் இவர்கள் கடவுள் அவதாரங்கள். என்ன கொடுமை சார் இது. பக்தர்கள் இவர்களது செருப்புகளுக்கு தான் பூஜை செய்ய வேண்டும். அத பாக்கிறப்ப நானும் உங்கள மாதிரியே just laugh from the Bottom of My Belly.
  இதில் பெரிய வேடிக்கை இந்த கடவுள்கள் மேல் கோர்ட்டில் வழக்குகளும் இருகின்றன.

  அடுத்து சாய்பாபா, இவர் பொது இடங்களிலேயே லிங்கம் வரவைப்பார், கையில் விபூதி கொட்டும், தங்கம் வரும் இன்னும் நிறைய.. இப்படி சக்தி உள்ள இந்த கடவுள் அவதாரம் ஒரு மிக பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறாராம். அங்கே வசதியற்றவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்கிறார்களாம். சந்தோசம். நான் கேட்பது, இவ்வளவு சக்தி உள்ள இவர் எதற்காக மருத்துவமனை கட்ட வேண்டும். பேசாமல் ஒரு இடத்தில உட்கார்ந்து கொண்டு நோய் என்று வருபவர்களுக்கு தன்னுடைய கைகளால் தொட்டு அப்படியே பிணியை குணமாக்கி அனுப்பி விடலாமே. கையை நீட்டினால் தங்கமும், வாயை திறந்தால் லிங்கமும் கொண்டு வருபவருக்கு இது ஒரு பெரிய விசயமா என்ன?

  இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ஆனால்
  யாராவது ஒருவர் கிறிஸ்தவர்களிடம் வந்து ‘நாந்தான் இயேசு வந்திருக்கிறேன், மறு அவதாரம் எடுத்து வந்து விட்டேன்’ என்றால் உடனே அவர் காலடியில் விழுந்து யாரும் வணங்குவது கிடையாது. அப்படி சொல்ல யாருக்கும் தைரியமும் கிடையாது. எந்த கடவுள் அவதாரமும் தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு தானே கோவில் கட்டிகொள்வதில்லை. இவர்களே தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பெரும் செலவில் கோவில் அல்லது ஆசிரமம் கட்டிக்கொள்கிறார்கள். பிறகு நாந்தான் அந்த கடவுள் என்று அங்கே உட்கார்ந்து விடுகிறார்கள். அவர் அதன் பிறகு தரையில் நடக்க மாட்டார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவரது பக்தர்களில் யாருக்காவது ஒரு நன்மை நடந்து விட்டால் போதும். அதன் பிறகு அவர் நிரந்தர கடவுள் தான். இறைவனுக்கு நடக்கின்ற அனைத்து அபிஷேகங்களும் ஆராதனைகளும் அவர்க்கு நடக்கும். அவரை காண மக்கள் காத்து கிடப்பார்கள். அவரை கண்டவுடன் கண்ணீர் விட்டு அழுவார்கள். அவர் இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டி கொண்டே போவார். ஆசிர்வதமாம் அதற்கு பெயர். பின்னர் அவரது பெயரில் கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கும். ஆனால் அவரது பழைய கதையை கிளறி பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கும். இன்னும் அவதாரங்களை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்

  நீங்கள் போலி இந்து சாமியார்கள் கடவுளுக்கு அவபெயர் ஏற்ப்படுத்துவதில்லை என்கிறீர்கள்
  இப்படி செய்வதெல்லாம் கடவுளை கேவலப்படுத்தும் செயல் இல்லையா. இதில் யாரவது இந்த மாதிரி கடவுள்களை பற்றி எதாவது பேசிவிட்டாலோ எழுதி விட்டாலோ போதும் அவர் உடனே இந்துக்களின் விரோதியாகி விடுவார். இந்த நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒருபக்கம் அலற ஆரம்பித்து விடுவார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் இது போல இரண்டு கடவுள் அவதாரங்கள் தொலைகாட்சியில் சண்டை போட்டு உலகம் முழுக்க தங்கள் புகழை பரப்பினார்களே. அது திரைப்படதிலும் வந்து இன்னும் புகழ் பெற்றது. அது கடவுளை கேவலபடுத்துவது இல்லையா?

  ஆரம்பத்தில் இருந்தே மதம் தவறு செய்கிறது என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். எப்போதுமே மதம் தவறு செய்வதில்லை மதத்தின் பெயரை சொல்லி மனிதர்கள் தான் தவறு செய்வார்கள். செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எப்போதுமே போலி கடவுள்களை உருவாக்கியதும் இல்லை அவர்களுக்கு அபிஷேகம் ஆராதனை செய்ததும் இல்லை. ஆனால் தற்காலத்திலும் இதெல்லாம் எங்கு நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
  பிரேமானந்தா போன்றவர்கள் லோக்கல் பிக் பாக்கெட், குவாட்டர் கோவிந்தன் போன்றவர்கள். அதனால் அந்த மாதிரிபட்டவர்கள் கைது செய்யப்படும்போது நீங்கள் பெரிய அளவில் எதிர்ப்பு கட்டுவதில்லை. ஆனால் இந்தமாதிரி சர்வதேச சாமியார்கள் (உங்க பாஷையில் அவதாரங்கள்) மற்றும் கடவுள்களின் சுத்த தன்மையை சோதிக்க உங்கள் தலைவர்கள் யாருக்காவது தைரியம் இருக்கிறதா.

  நீங்கள் எனக்கு முதலில்அளித்த பதிலில் ஒற்றை சுட்டி காட்டுகிறேன்

  கிறிஸ்தவர்கள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன் என்றால் அவர்கள் கடவுளைதான் நம்புகிறார்கள். நான்தான் கடவுள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை அல்ல.

  நீங்களும் அடுத்த மதத்தை குறை கூறுமுன் சற்று உங்கள் முதுகையும் பார்த்து கொள்ளுங்கள். எல்லாருடைய முதுகிலும் அழுக்கு மூட்டை இருக்கத்தான் செய்கிறது. யாருடைய முதுகும் சுத்தமில்லை.

  பின்னூட்டம் by John — ஏப்ரல் 26, 2009 @ 3:05 பிப | மறுமொழி

 29. super …………..!!!!!

  பின்னூட்டம் by tamilhidu — ஜனவரி 11, 2010 @ 7:54 முப | மறுமொழி

 30. தமிழகத்தில் இந்து மதம் மீது அவ மதிப்பு வந்தமைக்கு பிராமணர்கள் மட்டுமே காரணம். அவர்களை விரட்டி விட்டால் ஒழிய தமிழகம் தலை நிமிர வாய்ப்பில்லை. ஜெயேந்திரர் முதல் செக்ஸ் சாமியார் வரை எல்லோருக்கும் என்னிடம் இருப்பது எதிர்ப்பு மட்டுமே.

  – சகோதரன்

  http://sagotharan.wordpress.com/

  பின்னூட்டம் by ஜெகதீஸ்வரன் — பிப்ரவரி 21, 2010 @ 5:16 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: