விருது

ஏப்ரல் 15, 2008

பகுத்தறிவல்ல, பாசிசம்!

தினமணி 15 ஏப்ரல் 2008 இதழின் தலையங்கம்.
 
பகுத்தறிவல்ல, பாசிசம்!

தைத் திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு அறிவித்துவிட்டது என்பதால், சர்வதாரி ஆண்டு தை மாதம் தான் பிறக்க வேண்டும் என்று கூறும் வேடிக்கை அரங்கேறுகிறது. அண்டை மாநிலம் கேரளத்திலும், வடக்கே பஞ்சாபிலும், கிழக்கே அசாமிலும், அது ஏன், இந்தோனேஷியா மற்றும் கொரியா வரை புத்தாண்டு கொண்டாடும்போது, அது தவறு, நான் மட்டும் தை மாதம் தான் புத்தாண்டு கொண்டாடுவேன் என்று சொன்னால், அது அவரவர் விருப்பம். அதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை.

அதேநேரம், அரசு அறிவித்தது என்பதற்காக சமயச் சடங்குகளை மாற்ற வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்வதும், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அரசு ஆணைப்படிதான் ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், ஆட்சியாளர்களின் பாசிச மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது என்பது மட்டுமன்றி மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள ஆலயங்களில், வருடப்பிறப்பை ஒட்டி எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும், புது வருடப் பஞ்சாங்கம் படிப்பது போன்ற சடங்குகளை நடத்தக்கூடாது என்றும் வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் பிறக்கும் என்று உத்தரவிடத்தான் ஆட்சியாளர்களுக்கு அதிகாரமே தவிர, சர்வதாரி ஆண்டு வழக்கம்போலச் சித்திரையில் தொடங்கக்கூடாது என்று உத்தரவு போடும் அதிகாரம் இருக்கிறதா என்ன?

மக்கள் சர்வதாரி ஆண்டு சித்திரையில் பிறக்கிறது என்று நம்பினால், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப ஆலயங்களில் பூஜைகள் செய்ய விரும்பினால் அதைத் தடுக்கும் உரிமையோ, மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் உரிமையோ எந்த அரசுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கவில்லை. நமது அரசியல் அமைப்புச் சட்டம் இறைமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வழிபாடு மற்றும் மத நம்பிக்கைகளில் ஆட்சியாளர்கள் தலையிடுவதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இறைமறுப்புக் கொள்கையைப் பகுத்தறிவு என்று கொள்வதேகூடத் தவறு. உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளும், உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 99 விழுக்காடு மக்களும், தலைமுறை தலைமுறையாக நமது மூதாதையரும் நம்புகிற விஷயத்தை மறுப்பது என்பது வள்ளுவர் வழியில் கூறுவதாக இருந்தால், பலகற்றும் கல்லாத அறிவிலாதவர்கள் செயல். அதைவிடப் பெரிய அறியாமை, மக்களின் நம்பிக்கைகளைச் சட்டம் போட்டுத் தகர்த்துவிடலாம் என்கிற அதிகார மமதை.

அரசின் சட்டமும், வாய்வழி உத்தரவும் எந்த அளவுக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை தமிழகத்திலுள்ள ஆலயங்களில் நேற்று கூடிய மக்கள் வெள்ளம் தெளிவுபடுத்தியது. பஞ்சாங்கம் படிக்கப்படவில்லை என்றாலும் பஞ்சாங்க விற்பனை சற்றும் குறையவில்லை. சிறப்பு வழிபாடுகள் செய்யப்படவில்லை என்றாலும், அத்தனை ஆலயங்களிலும் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் அலங்காரங்களுமாக சர்வதாரி வருடப்பிறப்பு அமர்க்களப்பட்டது.

தங்கள் குடும்பத்தினரையே இறைமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியாதவர்களும், தங்களது சுற்றமும் உறவும் சமயச் சடங்குகள் செய்வதைத் தடுக்க முடியாதவர்களும், தாங்களேகூட தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள சில மூடநம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்களும் ஊருக்கு உபதேசம் செய்வதும், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மதச் சடங்குகளில் தலையிடுவதும் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை நடைமுறைப்படுத்திவிட முடியாது என்பதுகூட இவர்களுக்கு ஏன் புரியவில்லை?

கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

“”நதிபோகும் திசையை மாற்றி

நடக்கட்டும் வடக்கே என்பான்;

மதியம் தன் வானை எட்டு

மண்ணிலே விழட்டும் என்பான்;

இதுமுதல் கடல்நீ ரெல்லாம்

இனிக்கட்டும் தேன்போல் என்பான்;

அதிகாரி போடும் ஆணைக்(கு)

அடங்காமல் வேறென் செய்ய?”

முகம்மது பின் துக்ளக், ஒளரங்கசீப் வரிசையில் சரித்திரத்தில் இடம்பிடித்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்தால், அதைத் தடுக்கவா முடியும்? ஆனால், “சர்வதாரி’ ஆண்டு சித்திரையில்தான் பிறக்குமே தவிர தை மாதம் பிறக்காது!

Advertisements

11 பின்னூட்டங்கள் »

 1. நீங்களும் பாபர் மசூதி இடித்ததன் மூலம் சரித்திரத்தில் இடம் பிடித்து உள்ளீற்கள். //மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் உரிமையோ எந்த அரசுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கவில்லை.// இதை போய் முதலில் பி.ஜே.பி-க்கு சொல்லுங்கள். அவர்கள் ஆளும் மாநிலங்களில்
  கட்டாய மத மாற்றம் தடை
  சட்டம் கொண்டு வந்து மக்களின் உரிமைகளில் தலை இருக்கிறார்கள். சொல்வீர்களா?

  பின்னூட்டம் by lightink — ஏப்ரல் 15, 2008 @ 11:16 முப | மறுமொழி

 2. தினமணியின் இந்த தலையங்கதிற்கு ஆதாரங்களுடன் கூடிய பதிலை விரிவாக, விளக்கமாக “விடுதலை” 15-4-2008 இதழில் தி.க. தலைவர், மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ளார். படியுங்கள்.உண்மையை உணருங்கள்.

  பின்னூட்டம் by தமிழ் ஒவியா — ஏப்ரல் 15, 2008 @ 12:32 பிப | மறுமொழி

 3. தமிழ் ஒவியா அவர்களே,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  விடுதலை இதழில் வீரமணி கருத்துக்களை ஒரு அறிவுபூர்வமான கருத்தாக ஏற்பதில்லை. அவரின் தரமும், காழ்ப்பு பார்வையும், இந்து விரோத சார்பும் அவரின் கருத்துக்களை கேலிக்கூத்தாக்குகின்றன. எப்போதும் ஆளும் கட்சிக்கு வால் பிடித்து தன் கொள்கையை சோரம் போகச்செய்த அந்த வீரமணி அவர்கள் என்ன சொல்வார்கள் என்பது அவரின் நேற்றைய கட்டுரையிலேயே தெரிந்து அதைப்படித்து சிரித்தேன். திருவள்ளுவர் பிறந்ததால் அதுதான் தமிழர்களுக்கு புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பது என்ன பகுத்தறிவு? அபத்தம். மேலும், அவர் நேற்றைய கட்டுரையில் உலகெங்கும் புத்தாண்டான ஜனவரி 1 க்கு அருகில் இருப்பது தை மாசம்தான். அதனால் அதுதான் சரி என்று சொல்கிறார். இவரின் அபத்த கருத்துக்களை பார்த்து நீங்கள் வேணுமானால் கை தட்டுங்கள். ஆனால், பகுத்தறிவாளர்கள் இவரை எள்ளி நகையாடுகிறார்கள்.

  இன்று என் இன்னொரு பதிவில் ஸ்ரீஹரிகோட்டா விஞ்ஞானி திரு.நெல்லை முத்து அவர்கள் என்ன சொல்கிறார் என்பதையும் படித்துப்பாருங்கள். உண்மையான பகுத்தறிவு என்றால் என்ன என்று புரியும்? இவர்களுக்கு இருப்பதோ அரசியல் பார்வையும், இந்து விரோத பார்வையும்தான்.

  வருகைக்கு நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 15, 2008 @ 12:47 பிப | மறுமொழி

 4. திரு lightlink அவர்களே,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  …. //மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் உரிமையோ எந்த அரசுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கவில்லை.// இதை போய் முதலில் பி.ஜே.பி-க்கு சொல்லுங்கள். அவர்கள் ஆளும் மாநிலங்களில் கட்டாய மத மாற்றம் தடை சட்டம் கொண்டு வந்து மக்களின் உரிமைகளில் தலை இருக்கிறார்கள். சொல்வீர்களா? ….

  கட்டாய மத மாற்ற சட்டம் என்பது மக்களின் உரிமையா? மத மாற்றவே மற்ற மதக்காரர்கள் உரிமை தருவதில்லை. முஸ்லிம்கள் அவர்கள் மதத்தைவிட்டால் வெட்டுகிறார்கள். ஆனால், இந்திய சட்டத்தில் மதம் மாறலாம், அது தனி உரிமை. அதுபோல, மதப்பிரசாரமும் செய்யலாம். அதுவும் உரிமை.

  ஆனால், கட்டாயமாக மதமாற்றுவது என்பது ஏமாற்றுவது! மிரட்டுவது! ப்ளாக் மெயில் செய்வது! இது கிரிமினல் குற்றம். இதுதான் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்படவேண்டும்.

  இதைப்போய் புரியாமல் நீங்கள் “மனித உரிமை” என்றெல்லாம் சொல்கிறீர்களே, காமெடிதான்.

  இரண்டாவதாக, முதன் முதலில் மத மாற்று தடை சட்டம் கொண்டு வந்தது எந்த அரசு தெரியுமா? பிஜேபி அரசு அல்ல, காங்கிரஸ் அரசு, எப்போது தெரியுமா, பல வருடங்கள் முன்பு. நீங்கள் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள்.

  காந்தியடிகள் முதல் பலர் இந்த மதமாற்றத்தை(கட்டாயம் மட்டுமல்லாமல் சாதாரண மதம் மாறுவதைக் கூட) எதிர்த்திருக்கிறார்கள். நீங்கள் என்னடா என்றால், கட்டாய மத மாற்றம் ஏதோ தனி மனித உரிமை என்று பூச்சி காட்டுகிறீர்கள்.

  குஜராத்தில் முஸ்லிம்கள் தமிழகத்தை விட அதிக விகிதாசாரம். அவர்களின் வாழ்க்கைத்தரம் தமிழகத்தை விட நன்றாக இருக்கிறது. உண்மையை புரிந்துகொள்ளுங்கள். இங்குதான் சிறுபான்மையினருக்கு ஏமாற்றி வஞ்சிக்கப்படுகிறார்கள்.

  உங்களுக்கு புரியும்படி ஒரு உதாரணம். தங்கள் சகோதரி விரும்பி என்னுடன் படுத்துக்கொண்டால் அது குற்றமில்லை (அது மதமாற்றம்). அதே சமயம் நான் கட்டாயப்படுத்தி படுக்க வைத்தால் அது கிரிமினல் குற்றம். (கட்டாய மதமாற்றம்). நீங்கள் சொல்வது உண்மையானால், உங்கள் சகோதரியை நான் பாலியல் பலாத்காரம் செய்வது என் அடிப்படை மனித உரிமையாகிறது. ஹிஹி! யோசியுங்கள்.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 15, 2008 @ 12:56 பிப | மறுமொழி

 5. ஹலோ ஜெயராமன்!,
  “தங்கள் சகோதரி விரும்பி என்னுடன் படுத்துக்கொண்டால் அது குற்றமில்லை (அது மதமாற்றம்). அதே சமயம் நான் கட்டாயப்படுத்தி படுக்க வைத்தால் அது கிரிமினல் குற்றம். (கட்டாய மதமாற்றம்). நீங்கள் சொல்வது உண்மையானால், உங்கள் சகோதரியை நான் பாலியல் பலாத்காரம் செய்வது என் அடிப்படை மனித உரிமையாகிறது. ஹிஹி! யோசியுங்கள்.”

  யோசித்து பார்த்தேன், தங்கள் சிந்தனை-யின் தரம் எனக்கு புரிகிறது… எதுவும் சொல்வதற்கில்லை…!

  பின்னூட்டம் by Hari — ஏப்ரல் 15, 2008 @ 1:51 பிப | மறுமொழி

 6. ஹரி ஐயா,

  என் தரத்தை தெரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

  என் நியாயத்தையும் புரிந்துகொண்டுதான் நீங்கள் ஜகா ஆகிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது. தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 15, 2008 @ 1:55 பிப | மறுமொழி

 7. Dears, thamizhargalin puthandu thai thirunaale . chaitra and sarvathari is aryan words ie.sanskrit, it is not Tamil
  “Thaie muthatringal thai muthale aandu muthal
  pathannru nooranru panoo randru
  pallayi rathandaai thamizhar vazhvil
  Puthaandu thai muthal naal Pongal nanaal
  Nithirail irukkum Thamizha :
  Chithrai alla unakku thamizh pusthaandu
  Andi pizhaikka vantha AArya koottam Kaattiathe
  Arivukku vovaatha Adrupahu Aandugal
  Tharani Aanda Thamizharkku
  Thai muthal naale Thamizh Puthaandu.”
  Puratchi Kavinger Paavendhar.
  Sanscritise Sarvathari is not Thamizhar Thiru naal.60 years birth story is also valgarity in Abithana chinthamani. so thai is World Tamils Newyear.
  Ilanchet chenni

  பின்னூட்டம் by Ilanchet chenni — ஏப்ரல் 15, 2008 @ 3:30 பிப | மறுமொழி

 8. \\முஸ்லிம்கள் அவர்கள் மதத்தைவிட்டால் வெட்டுகிறார்கள்\\அப்படி என்றால் பஜரங்தல்,RSS போன்ற கும்பல்கள் குஜராத்தில் நிகழ்த்தியது சமூக சேவையா?
  \\முதன் முதலில் மத மாற்று தடை சட்டம் கொண்டு வந்தது எந்த அரசு தெரியுமா? பிஜேபி அரசு அல்ல, காங்கிரஸ் அரசு, எப்போது தெரியுமா, பல வருடங்கள் முன்பு. நீங்கள் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள்.\\சரி, காங்கிரஸ் மலத்தை தின்றால் நிகழும் மலத்தை தின்பீர்களா?
  \\குஜராத்தில் முஸ்லிம்கள் தமிழகத்தை விட அதிக விகிதாசாரம். \\அதனால் தான் தொகாடியா சூலத்தை கொடுத்து இதில் உள்ள மூன்று முனைகளில் ஒரு முனை முசுலீம்யையும்
  இன்னொரு முனை கிறிஸ்துவனையும், மறுமுனையால் கம்னிஸ்டுகலையும் கொலை செய் என்கிறார்.
  \\தங்கள் சகோதரி விரும்பி என்னுடன் படுத்துக்கொண்டால் அது குற்றமில்லை\\என் சகோதரி விரும்பி வந்து உங்களிடம் படுத்தாள் அதன் பிறகு தான் தெரிந்தது உங்களுக்கு
  ஆண்மை இல்லை என்று இப்போது நான் என்ன செய்ய ஜயராமன்

  பின்னூட்டம் by shakthi — ஏப்ரல் 15, 2008 @ 5:58 பிப | மறுமொழி

 9. Rightly said.
  When Karunanidhi says “Tamil New Year cannot be celebrated on Chitthirai 1” he should also dare to say that all muslims and christians in TamilNadu should stop celebrating their respective New Year on Muharram and Jan 1 respectively because there are also muslims and christians in Tamilians.

  பின்னூட்டம் by nila1947 — ஏப்ரல் 16, 2008 @ 12:04 முப | மறுமொழி

 10. we are all christians. we are all Muslims. we are all Hindus. But totally we are all Tamilian. Tamil Race. Not Aryan Race. Thai muthalnaal is Harvest day of Tamil Land. Tamil Puthandu comes in Ilavenil Kaalam. Not Hot season(Agni)
  all world Races celebrate their new year at Ilavenil kaalam only. but Aryans only celebrate Very very Hot season like chithirai. Thai Piranthaal Vazhi Pirakkum. so tamil new year only in Thai Muthal naale.

  பின்னூட்டம் by E. muthezhilan — ஜனவரி 6, 2009 @ 5:32 பிப | மறுமொழி

 11. முத்தமிழன் (என்ன ஒரு அழகான பெயர். உண்மையான பெயரா!) அவர்களே, வருகைக்கு நன்றி.

  தங்களின் கருத்து தங்களின் அறியாமையைக் காட்டுகிறது. அதை விளக்க வாய்ப்பளித்தற்கு மிக்க நன்றி.

  /// we are all christians. we are all Muslims. we are all Hindus. But totally we are all Tamilian. Tamil Race. Not Aryan Race. ///

  இதைப் போய் “பொங்கல் கொண்டாடக் கூடாது” என்று ஃபட்வா போட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் சொல்லுங்கள். எந்த முஸ்லிம் பொங்கல் கொண்டாடுகிறான் என்று போட்டோ ஆதாரத்துடன் சொல்லுங்கள்.

  எல்லோரும் தமிழர்கள் என்றால் ஆங்கில புத்தாண்டுக்கு லீவ் ஏன்? ஜனவரி 1 ஆம் தேதி என்ன ஆண்டு?

  ஆயிரம் வருஷங்களாக சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியவர்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லையா?

  /// Thai muthalnaal is Harvest day of Tamil Land. Tamil Puthandu comes in Ilavenil Kaalam. Not Hot season(Agni) ///

  அப்படியா. வெள்ளாமையில் வருடத்தில் எத்தனை தடவை அருப்பு என்றாவது தெரியுமா? அத்தனை புத்தாண்டு கொண்டாடலாமா? அருப்புக்கு புத்தாண்டு என்றால் தை மாசம் ஏன்?

  /// all world Races celebrate their new year at Ilavenil kaalam only. but Aryans only celebrate Very very Hot season like chithirai. ///

  அப்படியா. உலகம் முழுதும் ஜனவரி 1 ஆம் தேதி கிருத்துவர்களின் புத்தாண்டு என்ன இளவேனிர் காலமா? அது எப்படியாப்பட்ட குளிர் காலம் அங்கெல்லாம் என்றாவது தெரியுமா?

  /// Thai Piranthaal Vazhi Pirakkum. so tamil new year only in Thai Muthal naale. ///

  ஆடிப்பட்டம் தேடி விதை. ஐப்பசி, கார்த்திகை அடை மழை. இதெல்லாமும் பழமொழிகள். இதற்கும் புத்தாண்டுக்கும் என்ன் சம்பந்தம்? ஆடியில் புத்தாண்டு கொண்டாடக்கூடாதா? விதைக்கும் காலம்தானே வருடத்தின் ஆரம்பமாக இருக்கவேண்டும்? அருப்பு காலம் வருடத்தின் முடிவாகத்தானே இருக்கவேண்டும்?

  என்ன சார், பதில் சொல்வீர்களா?

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜனவரி 7, 2009 @ 4:06 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: