விருது

ஏப்ரல் 14, 2008

பஞ்சாங்கம், கலைஞர் டிவி, டைம்ஸ் கோலம்

நேசகுமார் ஐயா ஸ்டைலில் தலைப்பும், கட்டுரையும்.

 

எல்லோருக்கும்  மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.   இன்னொரு வருஷம் பிறந்துவிட்டது.  ஆதியும் அந்தமும் இல்லா காலத்தை நாம் நம் குட்டைப்பார்வையில் ஒரு அளவு வைத்து ஒரு வருடம் என்றெல்லாம் சொல்கிறோம்.  நாம் எல்லோரும் வந்து வந்து போவோம், ஆனால் காலம் எப்போதும் மாறாமல் நம்மையெல்லாம் ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது.

 

எல்லாவற்றையும் விட்டு நம்மால் தள்ளி நிற்க முடிகிறது.  கோயிலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லலாம்.   சாமிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லலாம்.   ஆனால், காலத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று யாரொருவரானும் சொல்ல முடியாது.  காலம் தொடாத பொருளும் இல்லை,  ஜீவனும் இல்லை.

 

வருஷம் என்றால் பொழிவது என்று பொருள்.  வருடம் எப்படி என்று சித்திரை முதல் நாள் கோயில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதன் குறிக்கோள் இந்த வருடம் பொழிவது எப்படி என்று சொல்லத்தான்.  அது மழை, விளைச்சல் என்று மட்டும் “பொழியாமல்”,  கருணை என்றும் அறம் என்றும் நம் ஆளும் மந்திரிகளுக்கு பொழிந்தால் சரிதான்.

 

காலம் என்பதற்கு வேதம் சொல்லும் இலக்கணம் அருமையானது.  நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் சூரியன் கதிரால் எந்தவொரு பொருளுக்கும் ஏற்படும் பரிணாம மாறுதலே காலம் என்று சொல்கிறது.   என்ன ஒரு அற்புதமான சிந்தனை.  பின்-நவீனத்துவ எழுத்தெல்லாம் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.

 

இந்த வருஷத்துக்கு ஸர்வதாரி என்று பெயர்.  அதாவது எல்லாவற்றையும் தாங்குபவள் என்று பெயர்.  இப்போது நடந்து கொண்டிருக்கும் அரசாங்க அக்கிரமங்களைப் பார்க்கும் போது இந்துக்கள் “எதையும் தாங்கும் இதயத்தோடு” ஸர்வதாரி யாக இருக்கிறார்களே, அதனால் இந்த வருஷப்பிறப்பு பொருத்தம்தான்.

 

பேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி.  ஆனால், சாத்திரங்களைக் குலைக்கும் பேய்களாகிய அரசுகள் இருக்குமா என்று ஒன்றும் சொல்லவில்லை.  அரசாங்கம் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க கூடாது என்று “வாய் மொழியாக” உத்தரவு போட்டது.  எழுத்து மூலமாக போட இந்த அரசுக்கு அதிகாரமில்லை.  ஆகம வழிமுறைகளில் அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.   ஆனால், “விஞ்ஞான பூர்வமாக ஊழல்” செய்வதில் தமிழக முன்னோடிகள் இவர்கள்.   அதுபோல,  “விஞ்ஞான பூர்வமாக”  இந்து மதத்தை குலைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சட்டத்தை மீறாமல் இந்த ஒரு வாய்மொழி.  கோயில் E.o.  புது வருஷ விசேஷ பூசைக்கு பூவுக்கும், பாலுக்கும் பைசா கொடுக்க மாட்டேன் என்று சொன்னால், குருக்கள் என்ன செய்வார்?  அண்ணாமலைக்கு அரோகராதான்!  கல்லாப்பெட்டியை வைத்திருப்பவன்தான் ஆகமத்தையும் நிர்ணயிக்கிறான் என்பது நிதர்சனமான உண்மை.

 

இந்த தடைக்கு தமிழ்நாடு முழுக்க அருவருப்பும், எதிர்ப்பும் கிளம்பியது.  பின்னர் வழக்கம்போல, இந்த அரசு செய்வன ஒன்று, சொல்வன ஒன்று என்று லூஸில் விட்டு விட்டது.  திருவண்ணாமலையிலிருந்து ஆரம்பித்து தமிழகத்தின் எல்லா கோயில்களில் வழக்கம்போல பஞ்சாங்கம் படிக்க பட்டது.

 

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற காலத்தின் ஐந்து அங்கங்களை சொல்வதால் பஞ்சாங்கம் என்று பெயர்.  பஞ்சாங்கம் படிப்பது என்பது ஒரு சாத்திர பூர்வ நிகழ்ச்சி.  அந்த பஞ்சாங்கத்தைப் படிக்கச்சொல்லி சித்திரை முதல் நாள் கேட்க வேண்டும்.  இதற்கு தனியாக புண்ணிய பலன் சொல்லப்பட்டுள்ளது.  ராமாயணம், பாரதம் முதலானவைகள் கேட்பதற்கு பலன் என்பது போல.

 

ராமாயணத்தை இலட்சம் செய்யுள்களில் எழுதுவதற்கு முன்னோடியாக ஸம்க்ஷேப ராமாயணம் என்று முன்னர் ஒரு சாப்டர் எழுதி வைத்தார் வால்மீகி.  அது எதற்காக, பின்னால் தான் முழு ராமாயணம் சொல்லப்போகிறாரே என்றால் இது ஒரு ப்ரோட்டோடைப்.  இது ஒரு Executive summary. இந்த சம்க்ஷேப ராமாயணம் படிப்பதால் சில விசேஷ பலன்கள் ஏற்படுகின்றன.  அதுபோல,  வருஷம் முழுவதும் பின்னால் வந்தாலும்,  இன்று சித்திரை முதல் நாள் இந்த பஞ்சாங்கம் படிப்பதால் சில விசேஷ பலன்கள் ஏற்படுகின்றன. 

 

இந்த வருஷம் எப்படி, மழை எவ்வளவு, எந்த நட்சத்திரங்கள் என்ன பலனை கொடுக்கும்,  எந்த எந்த பண்டிகைகள் எப்படி வருகின்றன என்று ஒரு முன்னோட்டம் விடும் நிகழ்ச்சி இந்த பஞ்சாங்கம் படித்தல்.  கிராமங்களில் பஞ்சாங்கம் கணிக்கவும், படிக்கவும் மானியம் கொடுத்து வைத்திருந்தார்கள்.  அவர்கள் இந்த நாளில் தாங்கள் கணித்த பஞ்சாங்கத்தை வழங்குவார்கள்.  கேட்க போகும் எங்களுக்கு வேணும் வரை பானகம், நீர் மோர் மற்றும் ஒரு விசிறி இலவசமாய் கிடைக்கும்!

 

தினசரி திதியை அறிவதால் செல்வம் பெருகும்.  நட்சத்திரத்தை அறிவதால் பாபங்கள் தொலையும்.  யோகத்தால் ஞானமும்,  கரணத்தால் காரிய சித்தியும் ஏற்படும்.  இது இந்து மத சாத்திரம்.  அதனால், விடாமல், தினசரி பஞ்சாங்கம் / காலெண்டர் பாருங்கள்.

 

இந்துக்களின் சாத்திர, ஆகம, வரலாற்று மற்றும் இலக்கிய அடிப்படைகளைக் கொண்ட தமிழ்ப்புத்தாண்டை சிதைத்து தன் வக்கிர திட்டத்திற்கு வசதியாக தையில்தான் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்ற இந்த சர்க்காரின் கிறுக்கு ஆசை நேற்று டோட்டல் ப்ளாப் ஆனது.  கலைஞர் டிவியில் முழுக்க முழுக்க சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் என்று காசு பார்த்தார்கள்.  அது என்ன சித்திரைத்திருநாள், அதற்கு என்ன விசேஷம், அப்புறம் வைகாசித்திருநாள் எல்லாம் சொல்வார்களா?  சித்திரைத்திருநாள் தானே புத்தாண்டு!  அதனால்தானே இதற்கு கொண்டாட்டம்! அப்புறம் என்ன இன்று புத்தாண்டு இல்லை என்று ஒரு பம்மாத்து!  முழுதும் நனைந்த பின் முக்காடு எதற்கு!

 

கலைஞர் டிவியில் பருத்திவீரன் படம் வழங்கிய முக்கிய விளம்பரதாரர் ப்ரூக்பாண்ட்.  அவர்கள் தங்கள் விளம்பரத்தில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றே போட்டார்கள்.  ஒரு ஐம்பது தடவையாவது சொல்லியிருப்பார்கள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று.  அதுபோல, ப்ரீதி மற்றும் இன்னும் ஒரு சில கம்பனிகாரர்களும் விளம்பரங்களில் புத்தாண்டு சிறப்பு விற்பனை என்று முழங்கினார்கள். ஒருவேளை டிவியில் இதெல்லாம் புத்தாண்டு காட்டியதும், கொண்டாடியதும் வெறும் காசுக்காக!  ஆனால், கொள்கைக்காக நாங்கள் இது புத்தாண்டு இல்லை என்று சொல்வோம்.  காசுக்காக எதையும் செய்துவிட்டு பின்னர் கழுவிக்கொண்டால் கொள்கை சேதாரம் ஆகாது என்பதே பகுத்தறவி போலும்.

 

இந்து என்றெல்லாம் பேசும்போது இந்து பத்திரிக்கையைப் பற்றியும் சொல்ல வேண்டும்.  இந்து பத்திரிக்கையை பொறுத்த வரை சித்திரை முதல் நாளும் ஒன்றுதான், ஆடி மாச மூல நட்சத்திரமும் ஒன்றுதான்.  வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.  நேற்று தமிழ்நாடே அல்லோக பட்டுக்கொண்டிருக்கிறது.  கோயில்களில் இந்து முண்ணனி போராட்டம்,  தடையை மீறி பஞ்சாங்கம் படிப்பு, யார் யார் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்றெல்லாம் எல்லா பத்திரிக்கைகளும் முதல் பக்கத்தில் பெரிதாக எழுதின,  சன் டிவி கூட இந்த கலாட்டாவை செய்திகளில் நன்றாக காட்டியது.  ஆனால், இந்து பத்திரிக்கைக்கு மட்டும் சித்திரை மாதம் என்பதே இல்லை.  இது குறித்து செய்தியோ, கோயில் செய்திகளோ ஒன்றுமே இல்லை.  ஆனால், நேபாளிகள் நேற்று புது வருஷம் கொண்டாடினார்களாம்.  இது பெரிதாக அரை பக்கத்திற்கு படத்தோடு செய்தி போட்டிருக்கிறார்கள்.  இந்து பத்திரிக்கை இவ்வளவு விவஸ்தை கெட்டு சோரம் போகும் என்று நான் நினைக்கவில்லை.  ஐயோ பாவமாக இருக்கிறது! சிந்துபைரவி சிவக்குமார் குடித்துவிட்டு வேட்டி நழுவ ரோட்டில் ஆடுவது போல இருக்கிறது, இவர்கள் நிலை இன்று.  பாவம்!

 

ஏன் ஐயோ பாவமாக இருக்கிறது என்றால் டயம்ஸ் வந்து இந்த இந்து பத்திரிக்கைக்கு ஒரு பெரிய ஓலைப்படுக்கையாக கட்டப்போகிறது.  போன மாதம் நான் டைம்ஸ் சகாய சந்தா வேண்டும் என்று போன் செய்தேன்.  “மன்னிக்கவேண்டும்.  எதிர்பார்த்ததற்கு மேல், ஒரு லட்சத்திற்கும் மேல் சேர்ந்துவிட்டார்கள்.  அதனால், இந்த ஸ்கீம் நாங்கள் இனிமேல் வழங்கவில்லை” என்று சொல்லிவிட்டார்கள்.  இது ஒரு மாதத்திற்கு முன்னால் நிலை. சென்னைவாசிகள் இந்து பத்திரிக்கையிலிருந்து தப்பிக்க எவ்வளவு ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று இதனால் தெரிகிறது.

 

இன்று காலை மயிலாப்பூர் எங்கள் தெருவில் (பக்தவச்சலம் சாலை, ரங்காச்சாரி சாலை) எல்லார் வீட்டு வாசலிலும் டைம்ஸ் ஆப் இந்தியா காரர்கள் அழகாக கோலம் போட்டிருந்தார்கள்.   அழகான ஆரம் டிசைனில் முழுதும் சுற்றியிருக்க டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய ஸ்டென்சில் கட்டர் வைத்து அரிசி மாவால் கோலம் போட்டிருந்தார்கள்.  க்யூட் விளம்பரம் ஐடியா!  படம் எடுக்க என்னிடம் காமரா இல்லை!  இட்லி வடையார் போடுவாரோ தெரியாது!

 

ஆனால், இந்த டைம்ஸ் சென்னைப் பதிப்பை கருணாநிதியை வைத்து ஆரம்பிக்க வைத்திருக்கிறார்கள்.   கருணாநிதி போய் விளக்கேற்றி வாழ்த்தி விட்டு வந்திருக்கிறார்.   இதைப்பார்த்து எனக்கு சந்தேகம்!  டைம்ஸ் ஒருவேளை முரசொலியின் ஆங்கில பதிப்பாக மாறிவிடுமோ என்று!  இந்த செய்தியை இந்து பத்திரிக்கை கண்டு கொள்ளவே இல்லை!  பாவம் இந்து!  எனக்கு இன்னொரு சந்தேகம்.  கருணாநிதி ஆரம்பித்த எந்த ஒரு திட்டமும் உருப்படவில்லை.  அது சேதுதிட்டமாக இருக்கட்டும், சென்னை விமான நிலையம், ஒகேனக்கல் குடிநீர், டாட்டா டைட்டானிய ஆலை என்று.  அந்தாள் போய் ஆரம்பித்த வைத்திருக்கிறார்.  டைம்ஸ் நன்றாக நடக்க ஏதாவது பரிகாரம் செய்து கொண்டால் நல்லது.

 

சரத்குமார் ஆறு மாத வெயிட்டிங் லிஸ்டில் காத்திருந்து மூகாம்பிகை கோவிலுக்கு போய் சண்டி ஹோமம் நடத்தி இருக்கிறார்.  அவர் கட்சியில் இல்லை, எனக்கு கலைஞர் தான் அப்பா என்று சொல்லும் அவரது மனைவி ராதிகாவும் கூட இருந்து குடும்பத்தோடு சாமி கும்பிட்டிருக்கிறார்கள்.  சரத்குமார் கொஞ்சம் நல்ல தனம் இருக்கிறது என்று தோன்றுகிறது.  அதனால்தான், திமுகவில் அவரால் குப்பை கொட்ட முடியவில்லை என்று நினைக்கிறேன்.

 

இத்தோடு இங்கே நிறுத்திக்கொள்கிறேன்.  பருத்திவீரன், அன்னியன் என்று இரண்டு படங்களை நேற்று டிவியில் முதல் முதலாய் பார்த்தேன்.  அது குறித்து என் அபிப்ராயங்கள் சில, இன்னொரு பதிவில்.

 

நன்றி.  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Advertisements

6 பின்னூட்டங்கள் »

 1. ஜயராமன், அருமையாக எழுதியுள்ளீர்கள். ஊடகங்கள் ஒளிந்து கொண்டாலும் மக்கள் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி கருநாவின் அறிக்கைகளைக் கடாசியிருக்கிறார்கள்.

  இது பற்றி நொந்து போய் பதிவு எழுதிய எனக்கு உங்கள் பதிவு ஆறுதலையும், குதூகலத்தையும் தருகிறது.

  மவுண்ட்ரோட் மாவோவை எட்டித் தள்ளி அந்த இடத்தை சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  பின்னூட்டம் by ஜடாயு — ஏப்ரல் 14, 2008 @ 7:18 முப | மறுமொழி

 2. ஜயராமன், அருமையாக எழுதியுள்ளீர்கள். ஊடகங்கள் ஒளிந்து கொண்டாலும் மக்கள் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி கருநாவின் அறிக்கைகளைக் கடாசியிருக்கிறார்கள்.

  இது பற்றி நொந்து போய் பதிவு எழுதிய எனக்கு உங்கள் பதிவு ஆறுதலையும், குதூகலத்தையும் தருகிறது.

  மவுண்ட்ரோட் மாவோவை எட்டித் தள்ளி அந்த இடத்தை சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  பின்னூட்டம் by ஜடாயு — ஏப்ரல் 14, 2008 @ 7:20 முப | மறுமொழி

 3. http://thatstamil.oneindia.in/news/2008/04/14/tn-vhp-to-file-case-in-sc-against-hr-ce-directive.html

  தமிழ்ப் புத்தாண்டு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர விஎச்பி முடிவு
  திங்கள்கிழமை, ஏப்ரல் 14, 2008

  ஸ்ரீரங்கம்: சித்திரை மாதத்தின் முதல் நாளன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்குத் தடை விதித்த தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச துணைத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.

  இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளன்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்வதற்கு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

  இது மத நம்பிக்கைக்கும், மக்களின் உரிமைகளுக்கும் எதிரான செயலாகும். மத வழிபாடுகள், பாரம்பரியங்களுக்கு எதிராக உத்தரவிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

  மாநில அரசின் இச்செயல் அரசியல் லாபம் கருதி மேற்கொள்ளப்பட்டதாகும்.

  எனவே அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வி.எச்.பி. சார்பில் வழக்கு தொடரப்படும் என்றார் வேதாந்தம்.

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 14, 2008 @ 9:03 முப | மறுமொழி

 4. Sarvathari is aryan’s Sanscrit language. it only occupaied all the aryan’s temples. aryan wants to dominate the Tamilians. so they always dominaing the
  tamils and Tamil language(Neesa Bhasha). But now a days tamils and tamil language arise with new era. From the british period itseld aryan dominate government jobs,education,equality and temples.from somany stuggle by justice party,Self Respect movement,D.K. and D.M.K. achieved the social Justice little bit. Aryan puranas itikasa manthrams tells somany stories and also the name religion also baptised by Arabs and British people. THE NEW YEAR sARVATHARI AND OTHER 59 YEARS NAMES ARE ALL ARYANS LANGUAGE SO aRYAN PEOPLE SUPPORTED THIS. and also 60 years names also naradhar and vishnus
  exchanging their sexual plesure.they gave 60 years b y birth so tamils neglet the aryan years and domination so tamilnadu govt. took the bill in
  Assembly unopposed. If you want to court story of vulgarity openly know to
  all the people. Illanchet chenni

  பின்னூட்டம் by Ilanchet chenni — ஏப்ரல் 15, 2008 @ 4:28 பிப | மறுமொழி

 5. Ilanchet Chennai யிலிருந்து வரும் அனானி அவர்களே,

  தங்கள் காமெடி பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

  தங்களைப்போன்ற மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் இந்த தமிழ் சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆக அமையட்டும்.

  நீங்கள் நீச பாஷை என்று தமிழை நினைக்கிறீர்கள் போலும். அதனால்தான், தெரிந்தும் தெரியாத அரைகுறை ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்கள். தமிழ் பிடிக்காதா, இல்லை தெரியாதா!

  தமிழ் வார்த்தை மற்றும் ஆரிய வார்த்தை எது என்று உங்களுக்கே தெரியவில்லை. எந்த தமிழ் இலக்கியத்தில் வடமொழி வார்த்தை இல்லை அய்யா? திருக்குறளில் இல்லையா? அகர முதல… அகரம் எந்த மொழி, ஆதி பகவன் … ஆதிபகவன் எந்த மொழி.. தங்களைப்போன்ற மஞ்சள்துண்டு போட்டவர்களின் அல்லக்கைகளுக்கு எல்லாம் மஞ்சள்காமாலையாகத்தான் தெரியும்.

  தமிழும், வடமொழியும் தமிழ்சமுதாயத்தில் கடந்த 5000 வருடங்களாக பிணைந்திருக்கிறது. இதில் யார் யாரை அடக்குவது? தொல்காப்பியர் முதல் வள்ளலார் வரை வளர்த்ததுதான் தமிழ். நீங்கள் சொல்லும் ஆரிய வெறி அல்ல. ஆரியம் அது இது என்று பொய் சொல்லி தாங்கள் ஆதிக்கம் செய்ய முயலும் குருமதியாளர்கள் சொல்வதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். முடிந்தால் நீங்கள் மற்ற மதங்களில் தமிழில் பேர் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிப்பாருங்களேன். உங்களுக்கும் சுன்னத் செய்து விடுவார்கள். உங்கள் தீரா-விட ஆண்மையைத்தான் கர்நாடகா கலவரத்தில் பார்த்தோமே! திராவிடமாம், ஆரியமாம் – கரடி விடுகிறார்கள். இந்த ஆரியம் என்பதே புரட்டு என்று உலக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியும் இவர்களுக்கு இன்னும் பித்தம் தெளியவில்லை. பாவம், உள்ளிப்பூண்டு மணந்ததாக சரித்திரம் உண்டா?

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஏப்ரல் 15, 2008 @ 4:48 பிப | மறுமொழி

 6. // மன்னன் சொல்லுக்கு அஞ்சி, என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது. //

  இந்த வரிகளை கொலைஞர் தசாவதாரம் பாடல் வெளியீட்டின் பொது கேட்டாரா ??? 😛

  பின்னூட்டம் by ஸ்ரீராம் முரளி — ஏப்ரல் 26, 2008 @ 4:18 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: