விருது

மார்ச் 16, 2008

கருநா நிதியின் மற்றும் ஒரு இராமாயண அறியாமை

Filed under: Uncategorized — விருது @ 4:28 முப

பழைய ஒரு ஜோக் உண்டு. ஒரு பள்ளிக்கு வந்த இன்ஸ்பெக்டர் பசங்களைப்பார்த்து “சிவதனுசை முறித்தது யார்?” என்று கேட்டாராம்.. பசங்கள் விடை தெரியாமல் முழித்தார்களாம்.. அதைப்பார்த்த ஆசிரியர் “சார், இவிங்க எல்லாம் நல்ல பசங்க, அந்த வில்லை முறிச்சிருக்க மாட்டாங்க என்றாராம்’

இந்தியாவில் இராமாயணக்கதை எல்லோருக்கும் தெரியும். எந்த மதக்காரர்களுக்கும், எந்த சமுதாயத்திருக்கும் இந்த கதை தெரியும்.

ஒரே ஒருவரைத்தவிர. அவர்தான் மாண்புமிகு முதலமைச்சர் கருநா-நிதி..

ஒரு டிவி பேட்டியில் “எனக்கு எல்லா இராமாயணமும் தெரியும். உதாரணமாக, இந்தி இராமாயணத்தில் இராமன் சீதையின் சகோதரன்” என்று சொன்னார். அதை கனிமொழி அவர்கள் மொழி பெயர்த்தார். அந்த பேட்டியைப்பார்த்து இந்தியாவே சிரித்தது.

இராமாயணத்தில்  ராமன் ஒரு  குடிகாரன் என்று   சொன்னார்.     வடமொழியில் மது என்பதை  சாராயம் (அதாவது தமிழில் மது…) என்று “விளங்கி”க்கொண்ட   கலைஞரின்   குழப்பம் இது.      இப்படி   பொறுப்பில்லாமல் திருப்பித்திருப்பி   இராமாயணத்தை   சம்பந்தம் இல்லாத இடத்தில் எல்லாம் இழுக்கிறாரே,   ஒருவேளை   அந்த இராமாயணமும்   ராமருக்கு இவர் செய்த இழுக்கும் உள்ளூற இவரை ரொம்பவும் வதைக்கிறதோ!!!

இப்போது  ஒரு புதிய அபத்தத்தை பேசியிருக்கிறார்.    இராமர் ஆட்சியில்தான் சீதை கடத்தப்பட்டாள். அதற்காக, அந்த ஊர் போலீசையா யாராவது குற்றம் சொன்னார்கள்? என்று கேட்டிருக்கிறார். அவர் உதிர்த்த இந்த முத்து நேற்றைய போலீஸ் அகாடமி வளாக திறப்பு விழாவில்.

சீதை கடத்தப்பட்டது அயோத்தியில் அல்ல.. அப்போது இராமனும் அரசாளவில்லை.

இது கூட தெரியாமல், ஐயோ பாவம் நம் முதலமைச்சர்.

சந்தடி சாக்கில், தமிழர்களின் பிரதிநிதியாக இதுவரை தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த இராவணனையும் இகழ்ந்து தப்புசெய்தவன் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், இராமாயண நிகழ்ச்சிகள் நடந்தவைதான் என்றும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஞானி ஐயா சொன்னதுபோல், நம் முதலமைச்சருக்கு வயதாகி விட்டதோ!!

MK gets Ramayana wrong
 
Chennai, March 15: Chief minister M. Karunanidhi appears to have got his Ramayana wrong again by implying that Sita was kidnapped during Rama’s reign. Inaugurating the state police academy and the north zone IG’s office near the Vandalur zoo on Saturday, the chief minister regretted that people often flung accusations at the police without justification.According to him public aversion for the uniformed force could be traced to the British having used it to suppress the people. While many felt that King Dharmar was a great ruler, the truth was that there was crime even then, the chief minister said.He went on to say that crime, such as Sita’s kidnap, took place even in the kingdom of Rama, forgetting that Lord Rama was neither the ruler of Ayodhya (his brother Bharatha was) nor were they living in any part of the Ayodhya kingdom when Sita was kidnapped. She was abducted from Panchavati, present Nasik in Maharashtra on the banks of Godavari far away from Ayodhya.

But drawing the analogy the chief minister said people did not ridicule the rulers of the time, but were quick to pounce on the present police for the smallest crime in society. Describing Ravana as the offender, Mr Karunanidhi unwittingly made the so-called Dravidian King the villain, when all along, his DMK and the parent DK had described the Ramayana as a ploy to assert Aryan supremacy over the Dravidian race.

Last year, at the height of the Ram Sethu controversy, the chief minister had called Rama a drunkard whereas the epic had only referred to the Ayodhya King consuming madhu which in Sanskrit refers to any sweet drink or fruit juice.

The Police Academy, built on sprawling 132 acres of land at the cost of approximately Rs 50 crore, is considered the largest project conceived by the Tamil Nadu police. Hostel facilities for the cadets, a forensic laboratory, parade ground, a cyber-crime training unit, conference halls, swimming pool, a shooting range are among the facilities available for the new recruits.

Advertisements

4 பின்னூட்டங்கள் »

 1. vayasanathal illai!eppavume ippatiththaan pinaththuvar avar.avalai ninaiththu uralai itippar. kutumpaththil yaral enna pirassanaiyo?

  பின்னூட்டம் by kalyanakamala — மார்ச் 16, 2008 @ 9:20 முப | மறுமொழி

 2. ஹா ஹா ஹா. இவர் நேற்றல்ல, இன்றல்ல எப்போதும் இப்படிதான் உளறி வருகிறார். வயதாகி விட்டதால் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. நானும் இது பற்றி என் பதிவில் எழுதியுள்ளேன் (மன்னிக்கவும். உங்கள் பதிவை பின்புதான் பார்க்க நேர்ந்தது).

  பின்னூட்டம் by Lakshminarayanan — மார்ச் 16, 2008 @ 7:11 பிப | மறுமொழி

 3. அய்யா பெரியவங்களே.

  ஒங்க ராமாயணத்துக்கு ஒங்கள மாதிரி கடவுள் நம்பிக்கை உள்ளவங்களே பல விதமா கதை வசனம் எழுதிருக்காங்க. அப்படி ஒரு ராமாயனத்த ஆதாரமா வச்சி நடிகர் ராஜேஷ் நடிப்பில ஒரு படம் எடுத்தாங்க, மன்னிக்கணும் எனக்கு படத்து பேரு ஞாபகம் இல்ல. அதில ராவனன சீதைக்கு அப்பனா காட்டிருப்பங்க. நீங்க என்னன்னா ராவணன் சீதைய ஆசைப்பட்டு கடத்திக்கிட்டு போயிட்டான்னு சொல்லறீங்க. மொதல்ல எது உண்மையான ராமாயனம்னு உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம் அவருக்கு ராமாயனத்தில வீக்னெஸ் இருக்கா இல்ல வயசானதனால வீக்னெஸ் வந்திருச்சான்னு ஆராய்ச்சி பண்ணலாம்.

  பின்னூட்டம் by Vijaygopalswami — மார்ச் 16, 2008 @ 7:49 பிப | மறுமொழி

 4. வக்கிரம் பிடித்த , பெயரை கூட கேவலப்படுத்தி திருத்தி எழுதும் ஜயராமா, சரியான லுச்சா பையன்டா நீ. ஆதிக்க வெறி உனக்கு..

  பின்னூட்டம் by muthu — ஏப்ரல் 9, 2008 @ 2:53 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: