விருது

மார்ச் 11, 2008

கடலில் கரைந்த காசு

சேது சமுத்திர திட்டத்தில் தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துபோய் விட்டதால், இதுவரை செலவு செய்த பணம் அனைத்தும் வீண்  

 தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துவிட்டது: சேது திட்டம் பற்றி விஞ்ஞானிகள்

 தூத்துக்குடி, மார்ச் 10: சேது சமுத்திர திட்டத்தில் தோண்டப்பட்ட கால்வாய் தூர்ந்துபோய் விட்டதால், இதுவரை செலவு செய்த பணம் அனைத்தும் வீண் என, விஞ்ஞானிகள், சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரி ஜான் ஜேக்கப், ஒய்வு பெற்ற கடற்படை கேப்டன் எச். பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆர்.எஸ். லால்மோகன் ஆகியோர் தூத்துக்குடியில் திங்கள்கிழமை கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

சேது சமுத்திர கால்வாய் திட்டம் பொருளாதார ரீதியிலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும், சுற்றுச்சூழல் பாதிப்பிலும் பயன்படாத திட்டம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு பின்னோக்கி சொன்றுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.

சேது சமுத்திர திட்டத்தால் இவ்வளவு லாபம் என கணக்கு காட்ட அரசு தயாரா. அவ்வாறு அறிவியல் ரீதியாக கணக்கு காட்டினால் இந்தத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம்.

சேது சமுத்திர கால்வாய் வழியாக கப்பலை இயக்குவோம் என, இதுவரை எந்த கப்பல் நிறுவனமும் உறுதியளிக்கவில்லை. ஏனென்றால் இந்த வழியாக யாரும் கப்பலை இயக்கப்போவதில்லை. சேது கால்வாய் வழியாக கப்பலை இயக்கினால் நஷ்டம்தான் ஏற்படும்.

கடந்த 30 மாத காலம் சேது சமுத்திர கழகம் அல்லது மத்திய கப்பல் அமைச்சகம் அல்லது தூத்துக்குடி துறைமுக சபை ஆகியவற்றால், இதுவரை அகழ்வு செய்யப்பட்ட உண்மையான அளவு குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இதுவரை தோண்டியதாக கூறப்படும் கால்வாய் பகுதியும், பணிகள் நிறுத்தப்பட்ட இந்த சில மாதங்களில் முழுமையாக தூர்ந்து போய்விட்டது.

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து பணிகளை மீண்டும் தொடங்கினாலும், ஆரம்பத்தில் இருந்தே மீண்டும் பணிகளை செய்ய வேண்டும். எனவே, இதுவரை இந்த திட்டத்திற்கு செல்வு செய்யப்பட்ட பணம் முழுவதும் வீண். இது யாருடைய பணம். மக்களின் வரிப்பணம் தான்.

இதுபோல இந்த திட்டமே வீண் தான். மக்கள் பணம் ரூ. 2,400 கோடியை வீணடிக்கிறார்கள். கால்வாய் தோண்டும் பகுதி புயல், மழை மிகுந்த பகுதியாகும். இலங்கையில் ஒரு பலத்த மழை பெய்தால் கூட போதும், கால்வாய் தூர்ந்து போய்விடும்.

பாதுகாப்பு விஷயத்திலும் இந்தத் திட்டம் ஆபத்தான திட்டம்தான். அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு இந்த வழியாக போர்கப்பல்கள் செல்ல வேண்டியிருந்தால் மிகவும் மெதுவாக தான் செல்ல முடியும். அதுவே எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

மேலும், இந்த வழியாக தான் கப்பல் வரும் என எதிரிகள் குறிபார்த்து தாக்குவதற்கும் வசதியாகிவிடும். எனவே, கப்பல் படையின் எந்த கேப்டனும் சேது கால்வாய் வழியாக கப்பலை செலுத்த விரும்ப மாட்டார்.

நாங்கள் அறிவியல் பூர்வமாக பேசுகிறோம். ஆனால், அரசாங்கம் விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மதரீதியில் மட்டுமே பயப்படுகிறது.

எந்த பயனும் இல்லாத, மக்கள் பணத்தை வீணடிக்கிற, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த திட்டத்தை இனிமேல் தொடரக்கூடாது. இத்துடன் அரசு கைவிட வேண்டும் என்றனர் அவர்கள்.

பேட்டியின் போது, கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு உறுப்பினர் ஜீவா, அகில இந்திய மீனவர் சங்க தலைவர் ஜி. அண்டன்கோமஸ், நிர்வாகிகள் ஜான் பி. ராயன் ஆகியோர் உடனிருந்தனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080310143534&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0

Advertisements

5 பின்னூட்டங்கள் »

 1. இதனால் எப்படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?? ஒரே காமடி போங்க!

  பின்னூட்டம் by mayooresan — மார்ச் 11, 2008 @ 1:12 பிப | மறுமொழி

 2. ஜெயராமன், இதே கருத்தைத் தான் நிபுணர்கள் பலகாலம் சொல்லிவருகின்றனர். ஆனால் கருநாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் கேட்டால் தானே?

  மேலும், எந்த நிதி நிறுவனமும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்யத் தயாராக இல்லை : இது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாத கணக்கு என்பதற்கு இதுவே சான்று.

  பின்னூட்டம் by ஜடாயு — மார்ச் 11, 2008 @ 1:37 பிப | மறுமொழி

 3. /// இதனால் எப்படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?? ஒரே காமடி போங்க!

  மறுமொழி ஆல் mayooresan ///

  மயூரேசன் ஐயா,

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

  இந்த விவகாரத்தில், நீங்கள் புதுசு என்று நினைக்கிறேன். சேது சமுத்திர திட்டத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பல பேரால் பலதடவை பேசப்பட்டு விட்டன. இதனால், தீவிரவாதிகளுக்கு ஆதாயம் என்றும் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் கப்பல்படைத்தலைவர் மற்றும் சிறப்பு பாதுகாப்பு தலைவர் முதலானோர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். (அந்த கருத்தை தவறு என்று கண்டித்து அமைச்சர் டி.ஆர்.பாலு எகிறியதும், அதை நாடாளுமன்றமும், ஜயலலிதா போன்றவர்களும் கண்டித்ததும் கூடவா மறந்துவிட்டது!!). மேலும், நான் போட்ட இந்த கட்டுரையிலேயே இதற்கான பாதுகாப்பு அபாயங்களை கோடி காட்டியிருக்கிறது.

  அதனால், யாருக்கு புரியாமல் காமெடியாய் படுகிறது என்று தெரியவில்லை.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — மார்ச் 11, 2008 @ 5:21 பிப | மறுமொழி

 4. /// ஜெயராமன், இதே கருத்தைத் தான் நிபுணர்கள் பலகாலம் சொல்லிவருகின்றனர். ஆனால் கருநாநிதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் கேட்டால் தானே? ///

  நீங்கள் சொல்வது மிக்க சரி, ஜடாயு ஐயா. கருநாநிதியின் இந்த ப்ளாக் மெயில் இன்னும் ஒரு வருஷம் நீடிக்கலாம். அதற்குப்பின் புதிய தேர்தலில் நிலைமை என்னவாகப்போகிறது என்று தெரியவில்லை. அதுவரை, சோனியாவும், சிதம்பரமும் ஏதோதோ சொல்லி கருநாநிதிக்கு டேக்கா கொடுத்து பணம் ஏற்பாடு செய்யாமல் டபாய்த்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த பாழுங்கிணற்றில் பணம் போட அவரகளுக்கு மனம் இல்லை. ஆனால், பாவம், கருநாநிதிக்கும் டி.ஆர்.பாலுவுக்கும்தான் நிறைய காண்ட்ராக்ட் போகிறதே என்ற கவலை.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — மார்ச் 11, 2008 @ 5:23 பிப | மறுமொழி

 5. The entire project is a mega size Veeranam proj. I wonder if there’s any upper limit in KK’s Numbered accounts in Swiss.
  There are similar arivujeevis like Mayooresan who ridicule those show their fear for Dirty N-bombs falling into the hands of terrorists. They stupidly ask how can a lone terrorist trigger that bomb when he doesn’t have access to delivery systems like Fighter Jets or Missiles… LOL

  பின்னூட்டம் by முக்கோடன் — ஜூலை 14, 2008 @ 5:47 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: