விருது

மார்ச் 11, 2008

கருணாநிதியின் இன்றைய ஜோக்

Filed under: Uncategorized — விருது @ 4:48 முப

“சென்னை நகரம் சுத்தமாகிவருகிறது. தற்போது வெளியூருக்குச் சென்றுவிட்டு, நான்கு ஐந்து மாதங்கள் கழித்து சென்னைக்குத் திரும்பினால், நகரமே மாறியிருக்கும்”

(ஆமாமாம். இங்கே கரண்ட் கட்டில் அவஸ்தைபடுவதைக்காட்டிலும், எங்காவது கொட்டாம்பட்டிக்குப் போய் இருந்துவிட்டு வாருங்கள் என்கிறார்)

“அடுத்த தலைமுறை சென்னை நகரைப் பார்க்கும்போது, இது ஜெர்மனி நாட்டின் நகரா, இங்கிலாந்து நகரா என்று வியக்கும் நிலை உருவாகும்” என்றார் கருணாநிதி

(குதிரைப்பந்தயத்தை நிறுத்துவோம் என்று அரசு 30 வருடம் முன்பு அறிவித்ததைக் கொண்டாட சென்னையில் ஒரு சிலை உண்டு. அதற்கு பக்கத்தில் கருணாநிதியின் சிலையை வைத்து அடுத்த தலைமுறையில் சென்னை லண்டனாகிவிடும் என்று அறிவித்ததற்காக இன்னொரு சிலை நிறுவலாம்.     குதிரைச்சிலையைப் பார்த்து நாம் சிரிப்பதைப்போல,  அடுத்த சந்ததியும் இதைப்பார்த்து மனமாற சிரிக்க வசதியாக இருக்ககும்.)

செய்தி ஆதாரம்:
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080310140232&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist”>http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080310140232&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

Advertisements

6 பின்னூட்டங்கள் »

 1. joke is very useful about current politics. cleaning of the city is not only for corporation.each and every one’s activities . i think so

  பின்னூட்டம் by meerasadagopan — மார்ச் 11, 2008 @ 11:52 முப | மறுமொழி

 2. அம்மணி,

  /// joke is very useful about current politics. cleaning of the city is not only for corporation.each and every one’s activities . i think so///

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

  சென்னையில் ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக 500 கிலோ குப்பைகளை வருடத்திற்கு உற்பத்தி பண்ணுகிறது. இதில் நாம் எல்லோரும் முயன்றால் ஓரளவிற்கு குறைக்கலாம். ஆனால், இன்று சென்னையில் அரசாங்கம் குப்பை சுத்திகரிப்புக்கு யாதொரு வழியையும் ஏற்படுத்தவில்லை. குப்பைகளை கொட்ட வெற்றிடம் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. அந்த குப்பைகளும் விஞ்ஞான முறையில் சுத்திகரிக்கவோ, பாடம் பண்ணவோ செய்யப்படுவதில்லை. இதெல்லாம் அரசின் பொறுப்பு இல்லையா? இதற்கு தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?

  இன்று அரசாங்கத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தன் பணிகளை ஒழுங்காக செய்யாததால் பல கழிவுகள் நம் சுற்றுப்புறங்களில் மிகுகின்றன. இதற்கு தனி மனிதர்கள் எப்படிப்பொறுப்பாவார்கள்? அரசாங்கத்தில் மலிந்து கிடக்கும் ஊழலால் பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குப்பைகளும், கழிவுகளும் பெறுகுகின்றன. இதற்கும், தனி மனிதர்கள் காரணமில்லை.

  கூவம் முதலான சுகாதாரக்கேடுகளை நகரித்திலிருந்து ஒழித்து அதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் அரசு முயலவில்லை. கொசுத்தொல்லை, பலப்பல வியாதிகள் இதனால் பெருகுகின்றன. தனி மனித முயற்சிகளால் இதற்கு என்ன செய்ய முடியும்? அவர்களின் தனி முயற்சிகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

  தனி மனிதனால் முயல்வது மிக்க்குறைந்ததே. அரசாங்கம் தன் பணியை செய்யாவிட்டால் இந்த பிரச்சனை கொஞ்சமும் தீராது.

  இதை விட்டு இன்னும் ஐந்தாறு மாதத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்பது வெற்றுப்பேச்சு. வரட்டு ஜம்பம். ஈனமான ஜோக். மடமையின் அடையாளம்.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — மார்ச் 11, 2008 @ 12:06 பிப | மறுமொழி

 3. முதலில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். தனி மனித ஒழுக்கம் தான் சமுதாயத்தை சுத்த படுத்தும். வெறும் அதிகாரிகளை மட்டும் குறை கூறுவது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எரிவது போன்றது.
  தனி மனிதன் ஒழுக்கம் இல்லாமல் சமுதாயம் சீர் ஆகாது.

  பின்னூட்டம் by lightink — மார்ச் 11, 2008 @ 1:12 பிப | மறுமொழி

 4. // தனி மனிதன் ஒழுக்கம் இல்லாமல் சமுதாயம் சீர் ஆகாது.

  மறுமொழி ஆல் lightink //

  lightlink என்ற அன்பரே,

  உங்கள் உண்மை பிம்பத்தை நான் உணர்கிறேன். நீங்கள் எனக்குப்பின்னூட்டம் இடவேண்டாம் என்பதையே நான் விரும்புகிறேன். அதை நீங்கள் இன்னேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். அதையும் விடுத்து உங்களின் இந்த பின்னூட்டங்கள் உங்கள் பரிதாப நிலையையே காட்டுகின்றன.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — மார்ச் 11, 2008 @ 5:36 பிப | மறுமொழி

 5. இந்திய நகரங்களில் வாழ முதன்மையான நகரம் சென்னை என்று சமீபத்திய கருத்துகணிப்பு தெரிவிக்கிறது நண்பரே.எனவே கலைஜர் சொல்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

  பின்னூட்டம் by தீலிபன் — மார்ச் 11, 2008 @ 5:39 பிப | மறுமொழி

 6. ///இந்திய நகரங்களில் வாழ முதன்மையான நகரம் சென்னை என்று சமீபத்திய கருத்துகணிப்பு தெரிவிக்கிறது நண்பரே.எனவே கலைஜர் சொல்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். ///

  வாங்க திலீபன் ஐயா,

  என்னங்க நீங்க, கருநா நிதிக்கு மேல காமெடி பண்றீங்க. எந்த சர்வேங்க அது, கொஞ்சம் விவரம் கொடுக்கிறீங்களா?

  அப்படியே இருந்தாலும், இந்தியாவில் வாழ முதன்மையான நகரம் என்பதற்கும் லண்டன் நகரம் போல என்பதற்கும் ஒரே மாதிரிதாங்களா? கருநா நிதியே இன்னிக்கு சென்னை மோசம், இன்னும் நாலைந்து மாசத்தில் நிலைமை சரியாகும் என்றுதான் சொல்லியிருக்காறு. ஆனா, நீங்க அவருக்கு நல்லா சப்பை கட்டி இப்பவே நல்லாத்தான் இருக்குன்னு சொல்றீங்களே, அது எப்படீங்க. சென்னையில இன்னிக்கு பல இடத்தில கரண்ட் கட். அதுக்கு கேட்டா, ஆற்காட்டு ஐயா அதெல்லாம் ஜயலலிதா தான் முழுமுதல் காரணம் என்று சொல்றாரு. ஆனால், இப்போது சென்னை நம்பர் ஒன் என்றால் அது மட்டும் கலைஞர் புகழா… தாங்கல, சாமீ..

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — மார்ச் 11, 2008 @ 5:50 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: