விருது

ஜனவரி 31, 2008

தையில் புத்தாண்டு – இது ஸேடிஸம் – துக்ளக்

இது ஸேடிஸம் 
தாழ்வுற்று, வறுமை மிஞ்சிக்கிடந்த தமிழர்களின் வாழ்வு இனி மலர்ந்தது! தமிழ்ப் புத்தாண்டு மாற்றப்பட்டு விட்டது. எல்லா அவமானங்களுக்கும் காரணமான, சித்திரை மாத புதுவருடம் – இனி போயே போச்சு! பெருமையை அள்ளிக் கொட்டுகிற தை மாதத்தில், இனி புத்தாண்டு பிறக்கும். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் போட்டார் உத்தரவு! மாறியது புது வருடம்!!
  
தை மாதத்தில் அப்படி என்ன விசேஷம்? அது திருவள்ளுவர் பிறந்த மாதம்.
திருவள்ளுவர் அந்த மாதத்தில்தான் பிறந்தார் என்று (‘பகுத்தறிவுவாதிகள்” ஏற்கிற வகையில்) எப்படித்தெரியும்? இப்படிக்கேட்பதே, பகுத்தறிவுக்கு விரோதம்.
சரி, தொல்காப்பியர் – கலைஞர் கையினால் உரை எழுதப்படுகிற பெருமையைப் பெற்ற தொல்காப்பியத்தை எழுதியவர் – திருவள்ளுவருக்கு அறுநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே பிறந்தாரே? அவர் பிறந்த மாதத்தில் புத்தாண்டைத் துவக்க, ஏன் கலைஞர் ஆணையிடவில்லை? உஸ்!!! அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக் கூடாது. இது “கலைஞர் ஆதரவுத் தமிழறிஞர்கள்” ஏற்றுக்கொண்டுள்ள விஷயம்.
தவிர, கலைஞர் தனது முடிவிற்கு ஒரு ஆதாரமாக காட்டியிருக்கிற மாதிரி, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி இருக்கிறதே? ஹையா!! இப்ப என்ன செய்வே? இப்ப என்ன செய்வே….?
  thuglak.jpgthuglak.jpg 
சரி. இந்த மாதிரி பழமொழிகள், மற்ற எல்லா மாதங்களைப் பற்றியும் இருக்கின்றனவே!
      
ஆடிப்பட்டம் தேடி விதை… புரட்டாசி சம்பா பொன் போல விளையும்… ஐப்பசியில் அடை மழை… மாசிப்பிறையை மறக்காமல் பார்… என்று எல்லா மாதங்களைப் பற்றியும் பழமொழிகள் சொல்வதால், அந்த மாதங்களில் ஒன்றை வைத்துப் புத்தாண்டை தொடங்க வேண்டியது தானே? அட, அவ்வளவு ஏன்? இப்போதுள்ள சித்திரை மாதத் தொடக்கத்தையே பார்த்தால் – “சித்திரை மழை, செல்வ மழை’; சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம்’ என்று பழமொழிகள் இருக்கின்றனவே!! அப்படியிருக்க, பழமொழிச் சான்றைப் பார்த்து புது வருடத் தொடக்கத்தை சித்திரையிலிருந்து மாற்றுவானேன்?

இன்னும் சொல்லப்போனால், இப்போது நிச்சயமாகி இருக்கிற தை மாதத்தைப் பற்றி “தை வரண்டது; தை மழை தவிட்டுக்கும் ஆகாது’ என்ற பழமொழிகள் இருக்கின்றனவே! தவிட்டுக்கும் ஆகாத தொடக்கமா, புது வருடத்திற்குத்தேவை?

இதோடு நிறுத்துவானேன்? கையில்தான் அதிகாரம் இருக்கிறதே! மாதங்களின் பெயர்களை சும்மா விடுவானேன்! பெரியாரிலிருந்து தொடங்கி, அண்ணா உட்பட, தனது குடும்பத்து அரசியல் வாரிசுகளையும் சேர்த்து, இடையில் ஒரு சில தமிழ் மொழிப் போர்க்காரர்களையும் நுழைத்து, பெரியார் மாதம், அண்ணா மாதம்… ஸ்டாலின் மாதம், கனிமொழி மாதம் ….. என்று பண்ணிரண்டு புதுப்பெயர்களை வைத்து விடலாமே! கேள்வி கேட்கத்தான் யாருமில்லையே! இஷ்டத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே!

நரகாசுரன் நல்லவன்; அவன் அழிந்த தினத்தைக்கொண்டாடுவது அநியாயம்: அதனால் அவன் பிறந்தநாளைக் கண்டுபிடித்து, (அதற்கு சில அறிஞர்கள் கிடைக்க மாட்டார்களா, என்ன) அந்த நாள்தான் விளக்கேற்றி கொண்டாடப்படுகிற தீபாவளி என்று அறிவித்து விடலாமே?

இந்த முதல்வருக்கும் அரசுக்கும் வேண்டியது என்ன? – ஹிந்து மத நம்பிக்கைகளுடன் ஒன்றிய விஷயங்களை எள்ளி நகையாட வேண்டும்: ஹிந்து மத நம்பிக்கையுடன் ஒன்றிவிட்ட பழக்க வழக்கங்களை மதிக்காமல் நடந்துகொள்ள வேண்டும். இந்த ஒரு வகையான “ஸேடிஸம்” தவிர, இந்த புது வருட மாற்றத்திற்கு, வேறு ஒரு காரணமும் கிடையாது.

பிரிட்டிஷார் கூட, மக்களின் நம்பிக்கைகளில், அவர்களுடைய கலாச்சாரத்தில்கை வைக்கவில்லை. முதல்வர் அதைச் செய்ய முனைந்திருக்கிறார்.

ஆனால், ஒரு மக்கள் கூட்டத்தின் கலாச்சாரத்தை ஒரு அரசு உத்திரவு மாற்றிவிடப் போவதில்லை. கலைஞரின் புத்தாண்டு, அவருடைய அரசின் பதிவுகளில் மட்டுமே செல்லுபடியாகும்; ஆட்சி மாறும்போது அதுவும் கூட மாறிவிடும். அந்த மாற்றத்திற்காக காத்திருப்போம்.

— சோ இராமசாமி தலையங்கம். துக்ளக் 6 பிப்ரவரி 2008

Bold highlighting is by me.

Advertisements

7 பின்னூட்டங்கள் »

 1. வணக்கம் ஜெயராமன் சார்,
  மிக சிரத்தையாக இந்த அறிவார்ந்த கருத்தை டைப் செய்து வலையில் கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி. முதிர்ந்த தெளிவான சோ அவர்களின் அபிப்ராயங்களை தொடர்ந்து கவனித்து வரவேண்டும். நன்றி வணக்கம்.
  மிகுந்த அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

  பின்னூட்டம் by ஸ்ரீநிவாசன். — ஜனவரி 31, 2008 @ 4:58 முப | மறுமொழி

 2. தாத்தா ஒரு மெண்டல் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சோ!

  பின்னூட்டம் by கதிரவன் — பிப்ரவரி 1, 2008 @ 7:22 பிப | மறுமொழி

 3. தொல்காப்பியர் – கலைஞர் கையினால் உரை எழுதப்படுகிற பெருமையைப் பெற்ற தொல்காப்பியத்தை எழுதியவர் – திருவள்ளுவருக்கு அறுநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே பிறந்தாரே?///

  குறளோவியம் என்ற நூலையும் கருணாநிதி எழுதியுள்ளார். 🙂

  பின்னூட்டம் by சக்தி — பிப்ரவரி 3, 2008 @ 2:15 பிப | மறுமொழி

 4. http://longlivehindu.blogspot.com/

  need your support mr.jayaraman

  பின்னூட்டம் by Madhukumar — பிப்ரவரி 5, 2008 @ 7:50 முப | மறுமொழி

 5. இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற பொது கருத்து அடிப்படையில் ஆதாரமற்றது.
  சமீபத்தில் தென்காசியில் தங்கள் அலுவலகத்திற்கு தாங்களே குண்டு வீசி அதை மதகலவரமாக மாற்ற முயற்சி செய்தது RSS அமைப்பு.

  இது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் 6 அன்று மராட்டிய மாநிலம் நாண்டட் நகரில் ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத்துறைப் பொறியாளர் ஒருவரின் வீட்டில் அதிகாலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்தது. மூன்று பேர் சம்பவ இடத்தில் மாண்டு போனார்கள், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தப்பிய நபரை கைது செய்து விசாரித்த போது பல்வேறு இந்து பண்டிகையின் போது குண்டுவெடிப்பு நடத்துவதற்காக சேர்த்து வைத்த மருத்துகள் வெடித்தது என்று உண்மையை ஒப்புக்கொண்டார். உள்ளூர் போலீஸ் பட்டாசு விபத்து என்று பூசி மறைத்து விட்டது. இறந்தவர்களுக்கு RSS, VHP மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் “ஆறுதல்” கூறியிருக்கிறார்கள். பின்னர் இவ்வழக்கு பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்புகளினால் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படையால் அப்போது விசாரிக்கப்பட்டன. அதன் பிறகு மேலும் பல உண்மைகள் வெளிவந்தன.

  இந்த மாதம் 17 தேதி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கண்ணூர் அருகே RSS பிரமுகர் வீட்டில் குண்டு வெடித்து சிறுவன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் மாலூர் பகுதியை சேர்த்த ஷைஜு (25), அவருடைய தாய் ஷைலஜா (50), தங்கையின் மகன் ஜிபின் (12) படுகாயம் அடைந்தவர்கள். குண்டு வெடிப்பில் ஷைஜுவின் வீட்டு தரை மட்டமானது. மாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன் பிறகு உண்மை வெளிவரும். இதில் ஷைஜு உள்ளூர் RSS பிரமுகர் என்பது குறிப்பிட்டதக்கது.
  ஆதாரம்: தினகரன் 17-02-2008.

  பின்னூட்டம் by lightink — பிப்ரவரி 21, 2008 @ 6:17 பிப | மறுமொழி

 6. There are many festivals left for our political games. Thanks.

  பின்னூட்டம் by Jayaprakash — மார்ச் 4, 2008 @ 8:43 பிப | மறுமொழி

 7. அன்பரே சோ,

  நீங்கள் கடைபிடிக்கும் சமஸ்கிருத வருடங்கள் எல்லாம் 2040 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது போல பேசுகிறீர்.

  தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த மத போதனையும் செய்ய வில்லை. உங்கள் சமஸ்கிருத மொழியே சுமாராக 1500 வருடங்களுக்கு முன்பு தோன்றியவைதான். இதற்கெல்லாம் தொல்காப்பியமும், திருக்குறலும், பல் சங்க இலக்கியங்கலே சாட்சி.

  தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்த போதும், 1972’ல் திருவள்ளுவராண்டை அறிவித்த போதும் இதைத்தான் சொன்னார்கள், இன்று வரை அது மாற வில்லை.

  மா.சிவா
  அமெரிக்க வாழ் தமிழர்.

  பின்னூட்டம் by மா.சிவா — திசெம்பர் 30, 2008 @ 2:52 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: