விருது

ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

சித்திரையில்தான் புத்தாண்டு

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே.

சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவா தம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களி டையே எழுந்தது. சித்திரையை முதல் மாத மாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறு பது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப் படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
 

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப் பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப் படுகிறது என்பது உண்மையே. ஆனால் அத னைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத் துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங் குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்ப டையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்பட வில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பி டும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப் பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப் படை.
 
அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக் கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினை யொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியன வெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப் பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ் துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட் டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக் கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
 
(ஆசிரியரின் இந்த குறிப்பிலிருந்து தைப்புத்தாண்டு என்பது கிருத்துவ மிஷனரிகளின் சதி என்று அறிகிறேன் –  ஜயராமன்)
இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற் றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரி கிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமி ழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.
 
கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத் தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மக வருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடு கிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களை யும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கு வதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாக வும் இதனைக் கருதலாம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் நல்ழ்ண்ய்ஞ் எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர்.
 
கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங் குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்பு கள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ் வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்று வது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட் டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற் போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன.
 
இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங் கள் உள்ளன.
கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ் வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப் ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.
இந்திய ஜோதிட அறிவியலில் பூர் ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பார சீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாத மாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறு பாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாத மாகக் கருதப்பட்டுள்ளது.
காலக்கணக்கீட் டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.
இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத் தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுக மாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகி றதா? கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசி யம்.
மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதா யத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்பு படுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார் கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண் ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு.
பலராமன் சங்க இலக்கியங்களில் வாலி யோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப் பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க் கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடி யோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.
பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்ன னின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகி றது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்தி ரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித் திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என் பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பி டப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.
பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்தி ரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகா ரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.
பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளா கக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என் பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.
சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தரா யனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்க ணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படு வது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என் பது உண்மையே.
ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகை களை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித் திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப் பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந் நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமி ழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கரு தப்படவில்லை.
சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல் லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மை யான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கி ழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூ டத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்ப டுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டா டிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க் கத்தக்கது.
சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர் களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப் பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கி றார். (திருத்தொண்டர் புராணம், திருநாட் டுச் சிறப்பு, பா. 10, 12).
தமிழக வரலாற்றில் மருத நில உழவர்க ளான தேவேந்திர குல மள்ளர்களின் இடத் தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்பு களுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கட வுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்ப டவில்லை.
பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் கூட இந்திர விழாவைவிட பலராமன் விழா வாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங் களில் இந்திர விழா கொண்டாடப்பட்ட தைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப் படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவ னாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பல ராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புல னாகின்றன.
பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பரு வங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டா டப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்கு ரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத் தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபா கும்.
வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற் சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கை யின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.
“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டி லம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல் வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.
இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவே னில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது.
எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையி லும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்க மாகும்.
சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது.
இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்க மாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சி முறை “”வியாழ வட்டம்” (ஒர்ஸ்ண்ஹய் இண்ழ்ஸ்ரீப்ங்) எனப்ப டும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண் டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத் துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தா மிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவே தான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத் திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப் பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏது மில்லை.
 
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.
இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை.
சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.
—   எஸ்.. இராமச்சந்திரன்  (கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)
 
மேலும் படிக்க….
http://dinamani.com/NewsItems.asp?ID=DNE20080123113656&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist=
24 Jan 2008 paper – Page 8
Dinamani23JanPage8
Author
Advertisements

4 பின்னூட்டங்கள் »

 1. இந்த அருமையான கட்டுரையை எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி ஜயராமன்.
  இந்தப் பதிவுக்கு எனது பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன் –
  http://jataayu.blogspot.com/2008/01/blog-post_25.html

  பின்னூட்டம் by ஜடாயு — ஜனவரி 25, 2008 @ 4:42 முப | மறுமொழி

 2. //தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்க மாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே//

  அப்படியானல் அப்பெயர்ளுக்குறிய மொழி எது?

  இந்த காலக்கணிப்பீட்டு முறை என்று முதல்? எந்த இனத்தவரால்? நடைமுறைப் பாவனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

  அது எவ்வாறு, என்றிலிருந்து தமிழர்களின் பயன்பாட்டிற்கு உற்படுத்தப்பட்டது?

  போன்றவற்றிற்கான விடை தருவீர்களானால் மிகவும் பிரயோசனமானதாக இருக்கும்.

  பின்னூட்டம் by arunrayan — ஜனவரி 26, 2008 @ 1:36 முப | மறுமொழி

 3. சித்திரையில் “தான்’ புத்தாண்டா?

  சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது, இயற்கையான காலக் கணக்கீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறியிருப்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்பதற்கு இல்லை.
  ஏனெனில், சித்திரை முதல் தேதியன்று (ஏப்ரல் 13 14) முற்காலத்தில் நிகழ்ந்த விசு (பகலும் இரவும் ஒரே கால அளவைக் கொண்ட நாள்) தற்காலத்தில் பங்குனி 8 9 தேதிகளிலேயே (மார்ச் 21 22) நிகழ்ந்து விடுகிறது.
  இது போன்றே, ஐப்பசி விசு, தட்சிண அயனம், உத்தர அயனம் ஆகிய வானவியல் இயற்கை நிகழ்வுகளும் இன்றையப் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு முன்னரே நிகழ்ந்து விடுகின்றன. “சித்திரை’ விசு பங்குனியிலும், “அய்ப்பசி’ விசு புரட்டாசியிலும் தற்காலத்தில் நிகழ்கின்றன. இவை அறிவியல் அடிப்படையிலான இன்றைய வானவியல் காட்டும் நிதர்சன உண்மைகளாகும்.
  இக் குழப்பத்துக்கு நம் முன்னோர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவ்வப் பொழுது வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் யதார்த்த நிலைகளைக் கணக்கிட்டு பஞ்சாங்கங் களை காலத்துக்கு ஏற்ப அறிவியல் கண்ணோட்டத்தில் திருத்திக் கொள்ளாத நமது தலைமுறையினரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
  சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற் காலத்தில் அயனப் பிறப்பு நாட்கள் தலைகீழாக மாறி, உத் தராயணப் புண்ணிய காலத்தை தட்சிணியானப் பிறப்பு நாளான்று கொண்டாட நேரிடும்.
  இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்க ளின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக் குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந் தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே?
  அய்ராவதம் மகாதேவன், சென்னை88. நன்றி: `தினமணி 26.1.2008

  பின்னூட்டம் by செந்தில் — ஜனவரி 27, 2008 @ 12:30 பிப | மறுமொழி

 4. This gregorian calender ie 2008, 2009 all were set as a calender only in 1921. Before that the new year was in march for many europeans. Even the years 2008, 2009 were set based on the planetary position in India only. The pope gregory when he was in India and based on his training and advice of Hindu astrolgers this date was fixed more as a right solution then anything else. This calender is called secular calender/may be you send your e mail I can send links.

  பின்னூட்டம் by rama — திசெம்பர் 29, 2008 @ 9:11 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: