விருது

ஜனவரி 3, 2008

குஜராத் கற்பிக்கும் பாடம்

குஜராத் மாநிலத்தின் வியக்கத்தக்க வளர்ச்சி இப்போது தினசரி செய்திகளாக கிடைக்கின்றன.

இந்தியாவில் குஜராத் மாநிலம் ஆற்றிவரும் அதிசயக்கத்தக்க வளர்ச்சியை நாளொரு தகவல் நமக்கு மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன.

பாஜபாவின் ஆட்சி அங்கே மோடியின் தலைமையில் ஏற்படுத்திவரும் ஒரு சமுதாய புரட்சி என்றுதான் இதை சொல்லவேண்டும்.

இப்போதைய செய்தி நமக்கு நபார்ட் வங்கியின் வருடாந்திர ரிப்போரட்டிலிருந்து..

இந்த வங்கி மத்திய அரசு நடத்திவரும் “கிராமப்புற கட்டமைப்பு வேலைவாய்ப்பு உற்பத்தி திட்ட”த்திற்கான நிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

இந்த திட்டம் சோனியா காந்தி அவர்களின் தலையாயதிட்டம். இதன்படிகிராம்ப்புறங்களில்வேலைவாய்ப்புமேம்பட்டு எல்லோருக்கும்குறைந்த பட்சவேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இந்தியாவில் குஜராத் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதை நபார்ட் வங்கியின் சமீபத்திய வருடாந்திர ரிப்போர்ட் உறுதிசெய்கிறது.

இந்த திட்டத்தில் குஜராத்தை தவிர்த்து பிற மாநிலங்கள் குஜராத் அடைந்த வெற்றியின் ஒரு சிறிய அளவை மட்டுமே அடைய முடிந்திருக்கிறது.

இந்த திட்டத்தில் டெல்லி அரசின் முழு சப்போர்ட் பெற்ற கருணாநிதியின் அரசாங்கம், முழு தோல்வி அடைந்திருக்கிறது. தமிழகம் கடந்த வருடத்தில் இந்த திட்டத்தில் டாப் 5 வரிசையில் இல்லவே இல்லை. தமிழகம் இந்த திட்டத்தில் 25 ஆயிரம் வேலைகளுக்கும் குறைவாகவே ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு எதிராக, குஜராத் இந்த திட்டத்தின் மூலம் 10,59,571 வேலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமப்புற மக்களுக்கு இது மிகவும் அவசியமான முக்கிய திட்டம். இதில் தமிழகம் 25 ஆயிரம் வேலைகளை கூட ஏற்படுத்தவில்லை.

அது மட்டுமல்ல, குஜராத் இந்த வேலைவாய்ப்புகளை மிகக்குறைந்த செலவில் ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஊழல் இல்லாததும் இதற்கு காரணம். இந்த 10லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை குஜராத் 1367 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ஒரு கோடி ரூபாய்க்கு 775 வேலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதைத்தவிர எந்த மாநிலமும் இந்த அளவுக்கு திறைமையாக செயல்படவில்லை. குஜராத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் மேற்குவங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு 154 வேலைவாய்ப்புகளையே ஏற்படுத்த முடிந்திருக்கிறது. இந்தலிஸ்டில் தமிழகத்தின்நிலைசொல்லிக்கொள்ளும் படி இல்லை.

இதோ பட்டியல்:

getimage.jpg

தகவல் ஆதாரம் : எகனாமிக் டைம்ஸ் – சென்னை பதிப்பு 1 ஜனவரி 2008

நபார்ட் வங்கியின் 2006-07க்கான வருடாந்திர அறிக்கை

இதைப்பார்த்தாவது தமிழகத்தின் அரசியல்வாதிகள் திருந்தி மக்களுக்கு நல்லது செய்ய யோசிப்பார்களா? கலர் டிவியில் மயங்கி பிச்சைக்காரர்களாக நிற்கும் நமக்கு விடிவு வருமா?

Advertisements

4 பின்னூட்டங்கள் »

 1. very good information.first of all everybody shd know to identify the real growth of the people.i hope this article help .
  thangs
  kamala

  பின்னூட்டம் by kalyanakamala — ஜனவரி 4, 2008 @ 4:03 முப | மறுமொழி

 2. pls read as”this article will help”.thangs
  kamala

  பின்னூட்டம் by kalyanakamala — ஜனவரி 4, 2008 @ 4:04 முப | மறுமொழி

 3. modiji is great leader….
  jai shriram….

  பின்னூட்டம் by tamilhindu — ஜனவரி 6, 2010 @ 3:04 பிப | மறுமொழி

 4. “இனப்படுகொலைக்காக மோடிக்கு ஃபட்வா போடும் இவர்கள் முதலில்
  ராஜீவ்காந்திக்கு போடட்டும்”
  correct ……
  i am a srilankan tamil….
  we don’t forget “rajiv”

  பின்னூட்டம் by tamilhindu — ஜனவரி 6, 2010 @ 3:07 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: