விருது

திசெம்பர் 24, 2007

மோடிக்கு கலைஞர் கடிதம்

நரேந்திர மோடி அதிரடியாய் செயித்ததும் உடனே ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதி பேர் தட்டிக்கொண்டு விட்டார். இதைப்பார்த்து என் தமிழ் ரத்தம் கொதித்தது. ஜெயலலிதா எதைச்செய்தாலும் என் தலைவர் கலைஞரும் போட்டிக்கு செய்வதை எப்போதும் எதிர்பார்த்து பழக்கப்பட்ட எனக்கு கலைஞர் ஒரு கடிதம் எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும், கடிதம் எழுதுவதே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்ற புது உத்தியை கண்டுபிடித்ததே எங்கள் தன்மானத்தலைவன் கலைஞர்தானே.

அவர் கடிதம் எழுதும்வரை காத்திருக்கும் பொறுமை எனக்கு இல்லாததால் அதை கற்பனையில் பார்த்து மகிழ்கிறேன்.

கலைஞர் மோடிக்கு கற்பனைக் கடிதம் இதோ.

==========

அன்பு உடன்பிறப்பே நரேந்திர பாய்,

எல்லா பாய்களும் நம் உடன்பிறப்புக்களே என்று அன்று அண்ணா சொன்ன பேச்சை மறவாமல், நீயும் பாய் என்பதால் உன்னை என் உடன்பிறவா உடன்பிறப்பாக பாவித்து நான் இந்த மடலை உனக்கு வரைகிறேன்.

உன் மாபெரும் வெற்றி கண்டு உள்ளம் பூரித்தேன். தனிப்பெரும் தலைவனாக நீ போராடி வெற்றி பெற்றது கண்டு அதிசயப்பட்டது உண்மை.

ஆனாலும், உன் நடவடிக்கைகளில் நான் கண்டு வரும் சில அகாத செயல்கள் மற்றும் ஒவ்வாத சில கொள்கைகள் உன் இந்த வெற்றிப்பாதையில் விடமுட்களை போட்டு வதைக்க கூடாதே என்ற நல்லெண்ணத்தில் நான் உனக்கு சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளாக நீ சார்ந்திருக்கும் கட்சி ஆளுங்கட்சியாக இருந்ததன் பலன் என்னவென்று ஒரு கணம் சிந்தித்துப்பார்!! உன் மனைவியை நீ துறந்து முப்பது வருடங்களாகிறது என்றும் உன் உற்றார் உறவினர்கள் இன்றும் முப்பது வருட பழைய நிலையிலேயே வாடுகிறார்கள் என்றும் என் தம்பி ஆற்காட்டார் எள்ளி நகையாடும்போது என் உள்ளம் துடிக்கிறது. பொன்னான உன் அரசியல் ஆண்டுகளை நீ வீணடித்து விட்டாய், தம்பி.

முப்பது ஆண்டுகளாக நீ அரசியல் செய்ததின் பலனாக ஒரு “சிறிய குடில்” கூட இல்லாமல் நீ வாடுவதாக அறிந்து உன் தவறான பாதையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நீ பரிவாரம் பரிவாரம் என்று சொல்வது உன் குடும்பத்தை அல்ல மாறாக உன் கட்சியாளர்களை என்று எனதருமை தம்பி துரைமுருகன் தெளிவுபடுத்தியபோது நான் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. இதுவா அரசியல். இதற்காகவா நாம் பகுத்தறிவு கொண்டோம்.

உன் உண்மையான பரிவாரத்தை நீ அடையாளம் கண்டு அதையே கட்சியாக மாற்ற தவறிவிட்டாய் தம்பி! ஒரு அரசியலுக்கான இந்த குறைந்த தகுதி கூட இன்றிருப்பது உனக்கு அழகல்ல. உதாரணத்திற்கு, எளிதாக முப்பது நாட்களில் தயாராகும் ஒரு தொலைக்காட்சி சானல் கூட உன்னிடம் இல்லாமல் இருப்பதில் உன் வெற்றி அல்ல மாறாக தோல்வியையே நான் காண்கிறேன்.

குஜராத்திய பெருமை, குஜராத்திய தன்மானம் என்று நீ ஆறு ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இதை அடைய நீ தவறான பாதையில் போய் விழலுக்கு நீர் இறைக்கிறாய். குஜராத்திய பெருமையை நிலை நிறுத்த ஒரே வழி மற்ற இனங்களை வந்தேறிகள் என்று வரலாற்று உண்மையை நிலைநிறுத்துவதுதான் என்பதை கூட அறியா பாலகனாய் இருக்காதே. இந்திய இறையாண்மை பேசி உன் அறிய வாய்ப்பை நீ இழக்க கூடாது என்பதே என் அவா.

கடந்த தேரதலில் தியாகத் திருமதி சோனியாவின் சில குற்றச்சாட்டுகளுக்கு நீ பதிலளித்த விதம் தன்மானவழியாக இருந்தாலும் அது பகுத்தறிவு வழியில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அம்மையார்களின் குற்றச்சாட்டுகளுக்கு விடையாக அந்த அம்மையாரையே தாக்க வேண்டும் என்ற அரிச்சுவடிப்பாடத்தை நீ அறியாத காரணம் நீ திராவிட பரம்பரையில் பயின்றவன் அல்ல என்பதே. உனக்கு இதுகுறித்து எப்போதும் உதவி செய்ய என் உடன்பிறவா உடன்பிறப்பு இந்திரஜித் எப்போதும் தயார் என்பதை நீ அறிந்துகொள்.

தன்மான வீரன் சுராபுத்தீன் குறித்து நீ நடந்துகொண்ட விதம் என் உடன்பிறப்புக்கு அழகல்ல. சுராபுத்தீன் சார்பாக உன் மீது பூசிய களங்கத்தை களைய ஒரு எளிய வழியாக அந்த அறிஞனுக்கு ஒரு மணிமண்டபம் கட்டி உன் பகுத்தறிவுத்தன்மையை நிலைநிறுத்துக்கொள்ள வேண்டும்.

நம்மால் இயலாத ஒவ்வாத கொள்கைகளுக்கு நிரந்தர தீர்வு கோட்டங்களும், சிலைகளும், மண்டங்களும் என்பதை என் அனுபவத்தில் நான் அறிந்திருக்கிறேன். இதை ஆழ்ந்து யோசித்துப்பார்.

நேற்று தேர்தல் வெற்றி முகப்பில் நீ பேசிய பேச்சுகளை நான் தொலைக்காட்சியில் கண்டேன். அக்கணம், நீ குஜராத்திய மாநிலத்தின் பொன்விழா ஆண்டுக்காக என் உழைப்பை கொடுப்பேன் என்று சொல்லிவிட்டாய். அண்ணாவின் பாசறையில் நீ பயின்றிருந்தால் இப்படியோர் இழிநிலை குறிக்கோளை கொள்ள மாட்டாய்.

நரேந்திர மோடியாக உன் பொன்விழா கொண்டாட்டங்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பட்டது அந்த சட்டசபை. பொன்விழா கொண்டாடு,  ஆனால் அது உன் பொன்விழாவாக அல்லவா இருக்க வேண்டும்.

எனவே, அரசியலில் இன்னும் வேறூண்றி நரேந்திர பாய் அவர்களின் பொன்விழா அங்கு அரங்கேற்றம் என்ற இனிய செய்தியை கேட்டிடும் இன்னாளை எனக்கு கொடு. அக்கணம் நான் இன்றியும் என் பரிவாரம் அதாவது கட்சி அந்த காட்சியை காணும் என்று என் பகுத்தறிவு குலதெய்வம் திரு வெங்காய முனிவரை இறைஞ்சி உன்னை வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

முக.

 

========

 

இந்த லெட்டர் என் கனவில் வந்ததால் ஏதாவது பிழையிருப்பின் அது கனவில் வந்த கலைஞர் அவர்களையே சாரும். நான் பொறுப்பல்ல.

Advertisements

8 பின்னூட்டங்கள் »

 1. இதற்குத்தான் படுக்கப் போகும் முன்னால் தெய்வத்தை கும்பிட வேண்டும், நல்ல விஷயங்களை நினைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

  பாருங்கள், இப்போது விஷ ஜந்துக்கள் எல்லாம் கனவில் வந்து கடிதம் எழுதித் தொலைக்கின்றன.

  (அதுசரி, இந்த கருணாநிதி அடுத்தவர் கனவில்கூட கடுதாசிதான் எழுதுவாரா?)

  இந்த துர் சொப்பனத்தை நிவர்த்தி செய்ய 101 நல்ல விஷயங்கள் பற்றி திண்ணைக்கு நீங்கள் கடிதங்கள் எழுதவேண்டும் என நாடி சொல்லுகிறது.

  பின்னூட்டம் by பனித்துளி — திசெம்பர் 24, 2007 @ 5:58 முப | மறுமொழி

 2. பனித்துளி ஐயா,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  /// (அதுசரி, இந்த கருணாநிதி அடுத்தவர் கனவில்கூட கடுதாசிதான் எழுதுவாரா?) ///

  அதுல பாருங்க. தள்ளாத வயதிலும் நில்லாது உழைக்கும் எங்கள் தலைவருக்கு லெட்டர் எழுதவே டயம் போதலிங்க. எப்போதாவது கொஞ்சம் நாட்டுநலனுக்காக சிரமப்பட்டு நாலைந்து மணிநேரம் உட்கார்ந்து குத்தாட்டம் பாக்கறது உண்டுங்க, அவ்வளவுதாங்க முடியுது. நேத்து கூட டில்லி வரைக்கும் போய் தியாக அன்னையை பார்த்து போட்டோ எடுத்துக்கிட்ட உடனே, உடம்புக்கு முடியாம முதலமைச்சர்கள் கூட்டத்துக்கு போக முடியலீங்க. அதனால, லெட்டர்லேயே எல்லா அரசியலையும் முடிச்சுப்போங்க.

  /// பாருங்கள், இப்போது விஷ ஜந்துக்கள் எல்லாம் கனவில் வந்து கடிதம் எழுதித் தொலைக்கின்றன. ///

  என்னங்க, நீங்க கொஞ்சங்கூட பகுத்தறிவு இல்லாம இப்படி பேசுறீங்க. எங்க தலைவருக்கு கனவில எப்போதும் பெரிய்ய தலைங்க வரும்போது எனக்கு கலைஞர் வந்தா என்னங்க தப்பு.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — திசெம்பர் 24, 2007 @ 6:14 முப | மறுமொழி

 3. [எல்லா பாய்களும் நம் உடன்பிறப்புக்களே என்று அன்று அண்ணா சொன்ன பேச்சை மறவாமல், நீயும் பாய் என்பதால் உன்னை என் உடன்பிறவா உடன்பிறப்பாக பாவித்து நான் இந்த மடலை உனக்கு வரைகிறேன்.]

  Hillarious! The bhais will not think twice before these kafirs’ throats. Foolish guys.

  பின்னூட்டம் by Ilango — திசெம்பர் 24, 2007 @ 11:59 முப | மறுமொழி

 4. /// The bhais will not think twice before these kafirs’ throats. Foolish guys. ///

  Very true, Mr. Ilango

  Thanks

  Jay

  பின்னூட்டம் by ஜயராமன் — திசெம்பர் 24, 2007 @ 12:11 பிப | மறுமொழி

 5. அருமை ஆனால் அந்த எருமைத்தோலன் மஞ்சள் துண்டு பகுத்தறிவுக்கு உறைக்கும் என்கிறீர்கள்…

  பின்னூட்டம் by Aravindan Neelakandan — திசெம்பர் 24, 2007 @ 5:44 பிப | மறுமொழி

 6. //முப்பது ஆண்டுகளாக நீ அரசியல் செய்ததின் பலனாக ஒரு “சிறிய குடில்” கூட இல்லாமல் நீ வாடுவதாக அறிந்து உன் தவறான பாதையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்//

  கையில் ஒன்றுமில்லாமல் சென்னைக்கு வந்து இன்று கோடீசுவரனாக கோலோச்சும் வெங்காய முனிவரின் சீடனின் கருத்துக்களும் அறிவுரைகளும் கண்டு அக மகிழ்ந்தேன்..

  இந்த கடிதம் மோடியின் கையில் சிக்காமல் இருக்க இறவனை இறைஞ்சுகிறேன்.

  பின்னூட்டம் by Jeyakumar Srinivasan — திசெம்பர் 25, 2007 @ 2:45 பிப | மறுமொழி

 7. Great letter,
  Congradulations Jayaraman sir for the compilations of all our irritations.
  God Bless you,
  srinivasan,.

  பின்னூட்டம் by சீஷல்ஸ் சீனு . — திசெம்பர் 27, 2007 @ 5:03 முப | மறுமொழி

 8. திரு சீனு அவர்களுக்கும் ஜயகுமார் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

  கெட்டும் பட்டணம் சேர் என்பதை தவறாக புரிந்துகொண்டு இங்கு சேர்ந்து பட்டணத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கோடிகளை மட்டுமா சேர்க்கிறார்கள். ஏகத்துக்கு தனித்தனி செட்டப்களையும் ஏற்படுத்திவிடுகிறார்கள். இந்த ஆட்சி வந்ததிலிருந்து சென்னையில் பல இடங்களில் போலீஸ் தடை. கேட்டால் எல்லா இடங்களிலும் இந்த தலைவருக்கு “வீடு” இருக்கிறது. ரொம்ப கஷ்டம்டா சாமி.

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — திசெம்பர் 27, 2007 @ 12:53 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: