விருது

செப்ரெம்பர் 7, 2007

தமிழ் படித்தால் தற்கொலை

இன்று தமிழ்நாட்டில் ரொம்பவும் பரிதாபப்பட வேண்டியவர்கள் பிராமண பூசாரிகளே.

அதற்கு அடுத்த லிஸ்டில் வருவது நம் தமிழ் ஆசிரியர்கள்.

இன்றைக்கு கும்பகோணத்தில் ‘வேலையில்லாத தமிழக ஆசிரியர் சங்கம்’ என்ற குழுவினர்  ஒரு போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதன்படி அவர்கள் சென்னையில் கருணாநிதிக்கு முன் கோட்டையில் தீக்குளிக்க போகிறார்களாம்.  இது இன்றைய திணமனி செய்தி.

இன்று தமிழ்நாட்டில் 25000 பேர் தமிழ்ஆசிரியர்கள் இருந்தும்,  95 சதவீதம் பேருக்கு வேலை இல்லை.

தமிழ் படித்தால் இன்று தெருவில் நிற்கவேண்டும் என்பதற்கு இவர்கள் நடமாடும் அத்தாட்சி.

தமிழாசிரியர்கள் பெண்ணை ஊரில் எவனும் கட்டுவதில்லை.   கேட்டால்,   மாமனார் நம்ம கழுத்தை கட்டிக்கொண்டுவிடுவான் என்கிறார்கள்.

இவர்கள் கஷ்டப்ப்ட்டு பி.எல் மற்றும் பி.லிட் படித்து சீத்தளைச்சாத்தனார் மாதிரி தலையில் அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

இதில் பல பேர் வேறு படிப்பு கிடைக்காமல் பஞ்சத்துக்கு படிக்க வந்தவர்களாக இருக்கலாம்,  ஆனால்,  கொஞ்சம் பேர் தமிழ் மேல் ஆசைப்பட்டு படித்திருக்கிறார்கள்.    ஆனால்,  இவர்கள் படித்த தமிழ் இவர்களுக்கு கஞ்சிக்கு ஆக வில்லை.

தமிழ் ஆசிரயப் படிப்பு இன்று ஒது உதவாக்கரை சிலபஸில் மாட்டிக்கொண்டு இருக்கிறது.

கணிணி வழி தமிழ்,   அறிவியல் தமிழ் என்று பல புதிய பொருட்களை இவர்களுக்கு கற்பித்து, அரசாங்கம் பல புதிய வாய்ப்புகளை இவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.    

ஆனால்,  குத்துப்பாட்டுக்கு புதிய கலைஞர் சேனல்,  அதைப்பார்க்க இலவச பெட்டி,  அதற்கு சர்க்கார் கொடுக்கும் கேபிள் என்று இன்று முதல்வர் முயலும் தமிழகத்தில் இவர்களை மேம்படுத்துவார் இல்லை.

கருணாநிதியின் தமிழ் வளர்ப்பு என்பது சினிமாக்களுக்கு தமிழ்ப்பெயர் வைத்து வருஷத்துக்கு 300 கோடியை வரியை  கூத்தாடிகளுக்கு பங்கு போட்டு கொடுத்ததோடு முடிந்துவிட்டது.     அரைகுறை ஆடைகளுடன் அவர்களும் முதல்வருக்கு நேரிடையாக ஒரு ஆட்டம் போட்டு நன்றி சொல்லிவிட்டார்கள் முடிந்துவிட்டது.     அதுவும்,  இப்போது சிவாஜி,  ஆர்யா, என்பதெல்லாம் தமிழ்தான் என்று அபத்த ஆராய்ச்சியில் முடிந்துவிட்டது.

தமிழ் முன்பு தமிழக கலாசாரத்துடன் பிண்ணி பினைந்து பள்ளிகள் வளர்ந்தது.   தமிழ் ஆசிரியர்கள் திருநீறும்,  வெள்ளை உடையுமாக ஒரு வழிகாட்டும் கலங்கரை விளக்காக இருப்பார்கள்.   நாவில் செந்தமிழும்,  உணர்வில் கலைச்செறிவும் நிறைந்திருக்கும்.

இன்று தமிழ்ப்படிப்பு கலாசாரத்திலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டது.   தமிழில் ஹைகூ எழுதும் இந்த ஆசிரியர்கள் காசுக்காக தமிழை கூறுபோட்டு விற்க ரெடி.    இவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

தற்கொலை பண்ணிக்கொள்ள ஒரு சட்ட பூர்வமான வழியாக தமிழ்படிப்பு ஆகிவிட்டது.  

வாழ்க தமிழகம்!

Advertisements

2 பின்னூட்டங்கள் »

  1. its good

    பின்னூட்டம் by premtheva — செப்ரெம்பர் 7, 2007 @ 10:30 முப | மறுமொழி

  2. Premtheva sir,

    Thanks for your comment and encouragement.

    பின்னூட்டம் by ஜயராமன் — செப்ரெம்பர் 7, 2007 @ 11:10 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: