விருது

ஜூலை 30, 2007

வேணாம், வலிக்குது, அலுதுடுவேன் – கருணாநிதி

Filed under: அரசியல்,கருணாநிதி,Karunanidhi — விருது @ 8:22 முப

போனவாரம்,  ராமதாசும்-கருணாநிதியும் என்று ஒரு பதிவு எழுதினேன்.

அதில் சொன்னபடி, ராமதாசு கருணாநிதியை போட்டு தினசரி தோய்த்துக்கொண்டிருந்தார்.

இப்போது பார்த்தால், நம் கலைஞர் அவர்கள் திடீரென்று வேறு டிராக்கில் பதில் சொல்லி இருக்கிறார்.   அதாவது, வடிவேல் மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்.   (தலைப்பை படிக்கவும்)

டெல்லியில் முன்பு வி.பி.சிங் நடத்திவந்த ராஜினாமா டிராமா ஒரிஜினலாக கருணாநிதி அவர்கள் எழுதிய நாடகம்தான்.

 அதற்கு முழு திரைக்கதை, வசனம் நம் கலைஞரே தான்.

 அவரை, இந்த டிராமாவில் அடித்துகொள்ள ஆள் கிடையாது.

 அதுவும்,  இப்போ லேட்டஸ்டாக பதவி ஏற்றுக்கொண்டதிலிருந்து இந்த ஓரங்க நாடகத்தை பல தடவை பார்த்து விட்டோம்.

‘எப்போதுமே எனக்கு பதவி ஆசை கிடையாது.   எனக்கு பரிசும், பாராட்டு விழாவும் வேண்டவே வேண்டாம்.    தொண்டர்கள் வற்புறுத்தியதால் நான் உங்களுக்காக இங்கே உட்கார்ந்திருக்கிறேன்’  – இதெல்லாம் கலைஞர் அவர்களின் வழக்கமான உடான்ஸ்.

இது ஜயலலிதா அவர்களின் “காலில் விழ வேண்டாம் என்று சொல்கிறேன்.  அவர்கள்தான் கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்ற உடான்ஸை விட கொஞ்சமும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.

தான் எதிர்கட்சியில் இருக்கும்போது இவர் ஆளும்கட்சியின் ஒரு நல்ல தொழில்வள ஏற்பாட்டிற்கும் ஆதரவு கொடுத்ததில்லை.  ஆனால்,  இப்போது ஆளும்கட்சியில் இருப்பதால் ராமதாசும், அம்மாவும் பிரச்சனை பண்ணுவது எரிச்சலாக இருக்கிறது.

 உண்மையில், கருணாநிதிக்கு எதிர்ப்பை சந்திப்பதிலும் தீர்ப்பதிலும் கொஞ்சமும் முதிர்ந்த அணுகுமுறை எப்போதுமே கிடையாது.

டாட்டாவின் ஐநூறு கோடிக்கு கையெழுத்து போட்டு, செட்டில்மெண்ட் ஆனபோது இவர் கூட்டணிகளை கண்டுகொள்ளவில்லை.   இவர் பாடும் பாட்டுக்கு எல்லோரும் ஆதாயம் இல்லாமல் ஆமாம் போடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.   ராமதாஸ் அவர்கள் அதற்கு ரெடியில்லை.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் எல்லா திட்டங்களுக்கும் இவருக்கும் ஒரு கட்டிங் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அது உண்மையா என்று தெரியவில்லை.    ஆனால், அப்படி ஒரு ஏற்பாடு இருந்ததால் இவர் பல விழயங்களில் அடக்கி வாசித்தார் என்று ஊகிக்க முடிகிறது.

அப்படி ஒரு “கூட்டணி” ஏற்பாட்டை ராமதாஸ் முதலானோர் எதிர்பார்க்கிறார்களோ, தெரியவில்லை.    ஆனால்,    கலைஞரிடமிருந்து காசு கழலாது என்பது அரிச்சுவடி பாடம் அல்லவா.

இன்னொரு விஷயம்.    நேற்று கலைஞர் பேசும்போது,  இவரின் அரசியல் வாழ்க்கைக்கு காமராசரையும் ஒரு லட்சிய மனிதராக சொல்லியிருக்கிறார்.   இதைவிட, காமராசரை அவமானம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.   அவரை வாழ்நாள் முழுதும் எதிர்த்துவிட்டு,  தோற்கடித்து பழிபேசிவிட்டு இப்போது காமராசர் அவர்களின் பெயருக்கு சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்?   அடிக்கடி கருணாநிதியின் கனவில் வரும் பெரியார், அண்ணா போல காமராசரும் ஒரு முறையாவது கனவில் வந்து “என்னை விட்டுவிடு” என்று கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒருவேளே,  ஸ்டாலினை உட்கார்த்தி வைக்க நடக்கும் குணசித்திர நாடகமா இது, புரியவில்லை. 

ஆனால், இவர் ரொம்ப நல்லவருப்பா.   எத்தனை அடிச்சாலும் தாங்குறாருப்பா!

Advertisements

4 பின்னூட்டங்கள் »

 1. thalaiva kalakittingka

  பின்னூட்டம் by rama selvi — ஜூலை 31, 2007 @ 12:48 பிப | மறுமொழி

 2. ரமா செல்வி அவர்களே,

  தங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி

  பின்னூட்டம் by ஜயராமன் — ஓகஸ்ட் 1, 2007 @ 5:59 முப | மறுமொழி

 3. நல்லாயிருக்கு..

  வாழ்த்துக்கள்..

  சூர்யா
  துபாய்
  butterflysurya@gmail.com

  பின்னூட்டம் by Surya — ஓகஸ்ட் 9, 2007 @ 5:37 முப | மறுமொழி

 4. உண்மையிலேயே இது மிக நல்ல பதிவு !
  வாழ்த்துகள் !

  பின்னூட்டம் by கரிகாலன் — ஓகஸ்ட் 31, 2007 @ 6:45 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: