விருது

ஜூலை 25, 2007

ராமதாசும் கருணாநிதியும்

Filed under: அரசியல் — விருது @ 6:29 முப

நம் ஊரில் மாடுகள் ரொம்ப தூரம் அலையாமல் இருக்க, அதன் கழுத்தில் ஒரு கனமான கட்டையை கட்டி விட்டுவிடுவார்கள்.

மாடு எந்த பக்கம் நகர்ந்தாலும், அந்த கட்டை மொடேல், மொடேல் என்று முட்டியில் போட்டுக்கொண்டிருக்கும்.

கொஞ்ச நாள் இதற்கு பயந்து நகராமல் இருக்கும் மாடு, பின்னர் அந்த வலியை ஏற்றுக்கொண்டு முட்டியில் ரணத்துடன் மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் கருணாநிதியைப் பார்க்கும் போது, எனக்கு அவர் ராமதாஸ் என்கிற கட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார் என்று நினைத்து சந்தோஷமாய் இருக்கிறது.

இந்தாளு போடும் தினசரி மட்டையில் கருணாநிதிக்கு உட்கார்ந்தால் அடி, நின்றால் குத்து, படுத்தால் குட்டு.

கடந்த ஒரு மாதங்களாக தமிழ் மருத்துவர் குடிதாங்கி ஐயா, நம் திருக்குவளை திருடரை பிரட்டி பிரட்டி அடித்துக்கொண்டிருக்கிறார், கல்லூரியில் கட்டணம் சம்பந்தமாக.

கூட்டணி ஆரம்பத்தில், ரொம்பவே பாச மழை பொழிந்தது ஞாபகம் இருக்கலாம். ராமதாசு சொல்லித்தான் நான் மஞ்சள் துண்டு போடுகிறேன் என்று ரொம்பவும் பாசமாக பேசினார் கருணாநிதி.

தமிழக கல்லூரியில் நடக்கும் கட்டண பகல் கொள்ளை எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இதைப்பற்றி ராமதாசு கேட்டதும் “ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை” என்றார் கருணாநிதி.

ராமதாஸ் சலைக்கவில்லை “ஆதாரம் நான் கொடுக்கவேண்டுமானால், நீ என்னத்துக்கு” என்றார்.

கருணாநிதி “இதை போய் மத்திய சர்க்காரிடம் சுகாதார துறையிடம் (அதில் அன்புமணிதான் அமைச்சர்) கேட்க முடியுமா” என்றார். ராமதாசு “நீ பதவியில் இல்லாமல் இருந்தால் நான் மத்திய சர்க்காரிடம் கேட்பேன்” என்றார்.

இப்படி பதிலுக்கு பதில் வாங்கியதில், கருணாநிதிக்கு தினசரி முகத்தில் வழிந்ததை துடைக்கவே நேரம் போதவில்லை.

கடைசியாக ராமதாசு, “கூட்டணி எல்லாம் தேர்தலோடு காலி” என்று சொல்லி கருணாநிதியை அவமானப்படுத்தினார்.

முகத்தில் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல், “ராமதாஸ் அவர்களுக்கு என்னையும் தெரியும். அதனால், அவர் நல்ல முடிவுதான் எடுப்பார்” என்று தன்னைத்தானே ஆறுதல் செய்துகொண்டார்.

பிரதிபா பாடீலை என்னமோ தான்தான் கண்டுபிடித்து இந்தியாவுக்கு கொடுத்ததுபோல், சென்னையில் ஒரு மகளிர் பேரணி நடத்தினார். அதற்கு, ராமதாசு “மகளிர் பேரணி நடத்தினால், மசோதா பாஸ் ஆகிவிடுமா” என்று கேட்டார்.

கருணாநிதியை பார்க்க அய்யோ பாவம் என்று இருந்தது.

ஜயலலிதாவின் அறிக்கைகளை விட ராமதாசின் கண்டனங்கள் கருணாநிதிக்கு மிகுந்த அவமானம். மக்கள் மத்தியில் ராமதாசின் கண்டனங்கள், ஜயலலிதாவிடதைப் போல இல்லாமல், நன்றாக எடுபடுகின்றன.

கருணாநிதிக்கு குடைச்சல் தாங்கவில்லை. நேற்று ஒரு ஆம்பிளைத்தனமான அறிக்கையை (உள்ளுக்குள் தொடை நடுங்கிக்கொண்டே) விட்டார்.

நிருபர்களிடம் காட்டமாக “எதற்கும் ஒரு எல்லை இருப்பதை ராமதாசு புறிந்துகொள்ளவேண்டும்” என்றார்.

இன்று ராமதாசு அதற்கும் சூடாக பதிலை கேட்டிருக்கிறார். “என் ட்யூட்டியை நான் செய்கிறேன். நான் சொல்லும் அக்கிரமங்களை தீர்க்காமல் நான் கேட்பதற்கு லிமிட் வைத்தால் நடக்குமா” என்று. —

இந்த குடுமிப்பிடி சண்டையில் கருணாநிதியின் கதை கந்தரகோலமாகி வருகிறது. ராமதாசு வைத்த வேட்டு கோ-ஆபரேடிவ் எலெக்ஷனில் கருணாநிதிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்து தன் தேர்தலை தானே வாபஸ் வாங்க வைத்தது. கேபிள் டிவியிலும் ராமதாசுதான் முதலில் வற்புறுத்தி, அதையும் கருணாநிதி நிறைவேற்றும்படி ஆனது.

ஆக, ராமதாசு கருணாநிதியை பட்டறையில் நன்றாக காய வைத்து சம்மட்டியால் தினசரி அடித்துகொண்டிருக்கிறார்.

இந்த குடுமிப்பிடி சண்டையில் கருணாநிதியின் கதை கந்தரகோலமாகி வருகிறது.

ராமதாசு வைத்த வேட்டு கூட்டுறவுதேர்தலில் கருணாநிதிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்து தன் தேர்தலை தானே வாபஸ் வாங்க வைத்தது.

கேபிள் டிவியிலும் அரசே இதை ஆரம்பிக்கவேண்டும் என்று ராமதாசுதான் முதலில் வற்புறுத்தினார். தான் பிந்தய ஆட்சியில் இதை எதிர்த்திருந்த போதிலும், இப்போது அதையும் கருணாநிதி நிறைவேற்றும்படி ஆனது.

ஆக, ராமதாசு கருணாநிதியை கொல்லன் பட்டறையில் நன்றாக காய வைத்து சம்மட்டியால் தினசரி அடித்துகொண்டிருக்கிறார்.

இதற்காகவே ஜயலலிதா ராமதாஸை கொண்டாட வேண்டும்

Advertisements

6 பின்னூட்டங்கள் »

 1. ஆக, தமிழ்க் குடிதாங்கியின் அடி தாங்கியாகி விட்டார் தமிழினத் தலைவர் :))

  பின்னூட்டம் by ஜடாயு — ஜூலை 25, 2007 @ 8:38 முப | மறுமொழி

 2. ஆமாம்!

  வடிவேலு பாணியில் “இவன் ரொம்ப நல்லவன்பா. எத்தனை அடிச்சாலும் தாங்குறான்பா”!

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூலை 25, 2007 @ 8:44 முப | மறுமொழி

 3. MIHA ARPUTHAM. VERY GOOD EXPLANATION. I ENJOYED THIS. WRITE MORE IN THIS TOPIC. IF RAMADOSS CONTINUE LIKE THIS PEOPLE WILL THINK ABOUT HIM MORE THAN AIADMK.

  பின்னூட்டம் by rama selvi — ஜூலை 25, 2007 @ 9:00 முப | மறுமொழி

 4. Rama Selvi madam,

  Thanks for your comments

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூலை 25, 2007 @ 9:02 முப | மறுமொழி

 5. ஆக தமிழக அரசியலில் ஒரு நிஜ வடிவேலு-பார்த்திபன்! அசததலான மாநிலம் தான் போங்க!

  பின்னூட்டம் by Deepak Kumar Vasudevan — ஜூலை 29, 2007 @ 8:55 முப | மறுமொழி

 6. […] Filed under: Uncategorized — ஜயராமன் @ 8:22 am போனவாரம்,  ராமதாசும்-கருணாநிதியும் என்று ஒரு பதிவு […]

  Pingback by வேணாம், வலிக்குது, அலுதுடுவேன் - கருணாநிதி « விருது — ஜூலை 30, 2007 @ 8:22 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: