விருது

ஜூலை 24, 2007

அப்துல் கலாமின் கறை கனவுகள்

Filed under: ஜனாதிபதி — விருது @ 6:30 முப

அலெக்சாண்டர் முதலிய பல பேரை தேர்வு செய்து அது செல்லாமல், கூட்டணிக்கட்சிகளுக்கு அலர்ஜி வந்ததால் கடைசியில் செலக்ட் செய்யப்பட்ட ஒரு சமாதான-வேட்பாளராக பதவிக்கு வந்தார் அப்துல்-கலாம்.

ஆனால், என்ன ஆச்சரியம்.    அந்த குண்டு வைக்கும் நிபுணரோ,  தன் கள்ளம் அறியாத கனவுகளில் கோட்டை கட்டினார்.    

அவர் நடந்துவந்த முகல் நந்தனவனத்தில் விளைந்த இந்தியாவின் எதிர்கால பிம்பம் நம்ப முடியாமல் இருந்தாலும்  நன்றாகத்தான் இருந்தது. 

அந்த கனவை கலைத்து நிஜத்தை எதிர்கொள்ள யாருக்குமே வாய் வரவில்லை!   அந்த அரசனுக்கு துணி இல்லை என்று சொல்ல அந்த சபையில் யாருக்கும் துணிவில்லை! 

சோனியா காந்தி பதவி மர்மத்தில் முதல் பரிட்சை கலாமுக்கு.   சோனியா அடித்த அந்தர்பல்டியில் கலாமின் கான்டிரிப்யூஷன் என்ன என்று தெரியவில்லை!  

ஆனால், சோனியாவை அவர் தடுத்து நிறுத்தவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். 

மாறாக, சோனியாவுக்கு அரசியல் வாழ்வுப்பிச்சை போட்டு அன்டோனியோவை மதர்-இந்தியாவாக்கும் காங்கிரஸ் ஜால்ராக்களுக்கு ஆதாரம் கொடுத்தவர் கலாம்.    

சோனியா பதிவியேற்பில் துடித்துக்கொண்டிருந்த பாரதத்தை நினைவுபடுத்திப்பாருங்கள்.    கதர்சட்டைகளின் கயமைத்தனமான அம்மையார் ஆராதனை ஒருபுறம்,   தோல்வி அதிர்ச்சியில் வாயடைத்துப்போயிருந்த பிஜேபியின் அலறல் கூப்பாடு மறுபுறம்.     

சோனியா பதவியேற்றிருந்தால் சுஷ்மா மயிர் இழந்திருப்பார் ஆனால்   சோனியா பல நூறு வழக்குகளில் மாட்டியிருப்பார்
சில வருடங்களானாலும் அந்த பதவியில் நிம்மதியின்றி தினம் தினம் அலங்கோலப்பட்டு சோனியா சோகமாகிப்போயிருப்பார்.

இந்த விவகாரம் தினம் தினம் பேசப்பட்டு சோனியாவின் அரசியல்வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும். 

மாறாக, நடந்தது என்ன! 

கலாமின் அறிவுரையில் சோனியா பதவியை மறுத்தார் என்றால் சோனியா இந்த இடைஞ்சல்களிலிருந்து தப்பினார் என்று பொருள். 

தப்பியது மட்டுமா,  தியாக பதக்கமும் பெற்று இன்று தன் தேசவிரோத அரசியலுக்கு திரை போட்டுக்கொண்டுவிட்டார்.   

பழிகளை சுமக்காமலே,  ரிமோட் கண்ட்ரோலில் பதவி ஆண்டு –  ஒரு கல்லிலே இரட்டை மாங்காய் கிடைத்தது. 

இதுவே, என் பார்வையில், கலாம் தேசத்துக்கு செய்த பெரிய துரோகம். 

ரஷ்யாவில் தூங்கிக்கொண்டிருந்த நாளில் கலாமின் மதிப்பு இன்னும் ரணமாகிப்போனது.  அர்த்த ராத்திரியில் அரண்டு எழுந்து பிஜேபி சர்க்காருக்கு சாவு மணி அடிக்க கையெழுத்து போட்டார், தூங்கினபடியே.  

சோனியாவுக்கு அவர் ஆற்றிய இரண்டாவது ஜால்ரா. 

மனசாட்சி இழந்த இந்த மன்னருக்கு தன் மதிப்பை அறிந்து கொள்ள மற்றொரு சந்தர்ப்பம் –   ஆதாயம் தரும் பதவி மசோதாவில்.    அப்பட்டமான இந்த அயோக்கிய மசோதாவை,  ராத்திரியில் இல்லாமல் பகலில் பார்த்ததால்,  கையெழுத்த போட கலங்கி மன்மோகனிடம் மன்றாடி திருப்பிக்கேட்டார்.  

ஆனால், அந்தோ பரிதாபம்!   சொல்வதைச்செய் என்று இவர் வகித்த ஆதாயம் இல்லாத பதவிக்கு ஆணை பிறந்தது. 
இப்படி விழுப்புண்களை பெற்று தன் பதவியை தக்கவைத்து ஒரு பிரயோஜனமும் இல்லாமல் அப்துல் கலாம் குழந்தைகளுக்கு கனவு கற்றுக்கொடுத்தார்.  

ஆனால், மந்திரிகளுக்கு மனசாட்சி கற்றுக்கொடுக்கவில்லை. 

குண்டு வெடித்த இந்த ஆசிரியர் கண்ட இடங்களில் எல்லாம் இந்தியாவின் எதிர்காலத்தை வார்த்தைகளில் வரைந்தார்.     

நிகழ்காலத்தை மறைக்க நாம் பெற்ற ஒரே உத்தி இது.
 

இத்தனை வளைந்தும் இறுதியில் இத்தாலியர்களுக்கு இவர் இனிக்கவில்லை.  

மேலும் கனவு காண சென்னையில் இடம் கொடுத்து,   காரியவாதியான ஒரு கொள்ளை குற்றச்சாட்டை  இப்போ கொண்டாடுகிறார்கள்.  

சோரம் போன இந்த பதவியில் இன்று இறுதி வாழ்க்கை வாழும் ஐயனை வாழ்த்துகிறோம்!   

ஐந்து வருடத்தில் நீங்கள் அந்த பதவிக்கு ஒரேஒரு புதுமை கொடுத்தீர்கள்.    

ஆம்,  ராஷ்டிரபதி உரையில் பவர் பாயிண்ட் இடம் பெற்றதே இவர் செய்த பெரிய சாதனை.

மற்றதெல்லாம் மாக்கல் கோலமாய் பிரதிபா மழையில் அழிந்து போகும். 

அதனால் என்ன,  நாளை முதல்,  நானோ டெக்னாலஜியில் கனவு தொடரும்.

அங்கு டெல்லியிலோ, முகல் கார்டனில் மராடி பஜனை -அயோக்கியர்களையும் வாழவைக்கும் அன்னை அன்டோனியோவை வாழ்த்தி!

Advertisements

6 பின்னூட்டங்கள் »

 1. What you are trying to say? It is totally negative review on Kalam’s tenure..

  பின்னூட்டம் by swamytk — ஜூலை 25, 2007 @ 4:15 முப | மறுமொழி

 2. என் பார்வையை நான் எழுதியிருக்கிறேன். ஒரு புனிதபிம்பம் ஏற்பட்டுவிட்டதாலேயே அவரை ஒன்றும் சொல்லக்கூடாது என்பது ஆப்ரகாமிய கோட்பாடு.

  அவர் குழந்தைகளுக்கு கனவு காண சொல்லிக்கொடுத்தார் என்று நான் எழுதியிருக்கிறேன்.
  ஒத்துக்கொள்கிறேன்.

  ஆனால், தன் பதவிக்கு மிகவும் அத்தியாவசமான பல இடங்களில் அவர் சறுக்கி இருக்கிறார்.

  ஒரு வாட்ச்மேன் சரியாக வீட்டை பாதுகாக்கவில்லை என்கிறேன் நான், ஆனால் அவன் நன்றாக சமைக்கிறான் என்கிறீர்கள் நீங்கள்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூலை 25, 2007 @ 4:40 முப | மறுமொழி

 3. அய்யா,
  வெளிப்படையாக குதிரைபேரம் நடந்து அது வெற்றி பெறாமல், பீகார் சர்க்காரை கலைக்க கையெழுத்து போடப்பட்டது. முதுகெலும்பு இல்லாத மன்மோகன் சிங்கே வெட்கப்படும் அளவுக்கு நியாயமில்லாத இந்த கோரிக்கை, கடைசியில் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போய் சிரிப்பாய் சிரித்து அது செல்லாது என்று தெரியவந்தது. ஆனால், நம் அப்துல் மாமா அங்கும் கனவு கண்டு கொண்டிருந்தார்.
  தேசத்துரோகி அப்ஸலுக்காக ஆயிரம் போராட்டங்கள், மனுக்கள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேசப்பற்று லவலேசம் இருக்கிறவனாக இருந்தாலும் அந்த அப்ஸலை அன்னிக்கே தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஆனால், நம் அப்துல் மாமா அங்கும் கனவு கண்டு கொண்டிருந்தார்..

  நேற்று அவரின் பிரியாவிடை பேச்சை கேட்டீர்களா? ஒரே கனவு மயம். அதில் தமிழ்நாட்டில் வீரமணி நடத்தும் பெரியார் புரா பற்றி பத்து நிமிடம் பாராட்டு. செல்வன் பதிவை படித்துவிட்டார் போலிருக்கிறது.

  கவனமான வரிசையில் நிற்கவைக்கப்பட்ட குழந்தைகளிடம் ராமேச்வரம் ஆங்கிலத்தில் இந்தியா விஷன் 2020 என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்ற ஒரே காரணத்தாக அவர் பண்ணின மற்ற போர்ட்வண்டி வேலைகளை நான் குறைத்து மதிப்பிட தயாரில்லை.

  அவர் அரசியல்வாதியில்லை. அதனால், ஊழல் இங்கு ஒரு பிரச்சனை இல்லை. அவர் ஒரு விஞ்ஞானி. மேலும், குடும்பம், குடித்தனம் தன் சொந்தங்கள் என்று யாரும் இல்லாதவர். அதனால், தன் மாமன் மச்சானுக்கு பதவி கேடக மாட்டார்.

  ஆனால், அந்த பதவியின் முக்கிய வேலைகளில் கோட்டை விட்டார். அவரை அங்கு உட்கார்த்திய நோக்கத்தை கேலிக்கூத்தாக்கினார். லாலு முதலான கொள்ளை குற்றச்சாட்டையும், சிபுசோரன் முதலிய கன்விக்ட்களையும் மந்திரி பிரமாணம் செய்துவைத்த முதல் அராஜகத்துக்கு சொந்த மானவர்.

  நானும் கலாம் சொன்னதுபோல கனவு காணுகிறேன். அந்த பதவியில் இருப்பவர் இன்னும் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன். கலாம் என்னும் நிஜம் அதனால் எனக்கு பிடிக்கவில்லை.!

  அவ்வளவுதான் என் மதிப்பு!

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூலை 25, 2007 @ 4:43 முப | மறுமொழி

 4. கலக்குகிறீர்கள்.

  தொடர்ந்து கலக்குங்கள். என்னால் இந்த கட்டுரையின் தாத்பர்யத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், உங்கள் எழுத்துத் திறமை மயக்குகிறது.

  குமுதத்திற்கு இதை அனுப்பிப் பாருங்களேன். ஞானி என்கிற ஒரு மறைகழண்ட, எழுத்தால் உளறுபவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டு உங்களை தங்களது ஆஸ்தான எழுத்தாளராக வைத்துவிடுவார்கள். என்ன, வஹாபிஸத்திற்கு ஆதரவாக, வஹாபிஸ மதவெறிக்கு எதிரானவர்களை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படியெல்லாம் செய்தால் சென்னை வானொலி நிலையத்தின் “நிலைய இசையமைப்பாளர்” போல உங்களையும் “நிரந்தர கட்டுரையாளர்” என்ற பட்டம் கொடுத்து வேலைக்கு வைத்துக்கொள்வார்கள்.

  பின்னூட்டம் by பனித்துளி — ஓகஸ்ட் 1, 2007 @ 1:39 முப | மறுமொழி

 5. தேன்கூட்டில் இணையலாமே?

  பின்னூட்டம் by பனித்துளி — ஓகஸ்ட் 1, 2007 @ 1:40 முப | மறுமொழி

 6. ்பனித்துளி அய்யா,

  தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

  தேன்கூட்டில் விண்ணப்பித்திருக்கிறேன். இதுவரை, என் பதிவை ஏற்கவில்லை. பார்க்கலாம்!

  ஞானி மாதிரி மானங்கெட்டு பிழைக்க ஆசையில்லை. அவ்வளவு ஞானம் வேண்டாம் என்று நான் விட்டுவிட்டேன்!

  பின்னூட்டம் by ஜயராமன் — ஓகஸ்ட் 1, 2007 @ 5:54 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: