விருது

ஜூலை 20, 2007

ராமர் பாலம் இந்து இயக்கத்துக்கு முக்கியமா?

Filed under: இந்துமலர்ச்சி,ராமர்பாலம் — விருது @ 11:33 முப

இன்று  இந்து சமுதாயத்துக்கு இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.  

முதலாவது,  வெளிப்படையானது.   மதமாற்றம்,  மைனாரிட்டிஸம்,    முஸ்லிம் தீவிரவாதம்,    சுற்றுப்புற நாடுகளின் சதிகள் எல்லாம் இந்த வகைதான். 

ஆனால்,  இந்த ராமர்-பாலம் இரண்டாவது வகை பிரச்சனை.  

இன்று இந்து சமுதாயத்தில் இந்து அடையாளங்கள் மறக்கப்பட்டு வருகின்றன,   மறைக்கப்பட்டு வருகின்றன.   இன்றைய செகுலர்,  சந்தர்ப்பவாத  சிறுபான்மை-சார்ந்த திம்மி அரசியலில் இந்து கலாசாரம் இழிவுபட்டுக்கிடக்கிறது.   

பாராளுமன்ற நுழைவாயிலில் மகாபாரதத்தின் ஒரு அற்புதமான சுலோகம் பதியப்பட்டு இருக்கிறது.   ஒரு சபை என்றால் அதன் இலக்கணம் என்ன என்று அந்த சுலோகம் சொல்கிறது.  மிகவும் ஆழ்ந்த பொருள் கொண்ட,   பொருத்தமான நம் கலாசார செறிவை அங்கே நாம் காண்கிறோம்.  

அம்மாதிரி இன்றைய சூழலில் ஒரு இந்து மத நூல்களிலிருந்து ஒரு சிம்பல் இன்று அரசியலில் கையாளப்படும் ஒரு சூழல் இருக்கிறதா?   

இல்லை என்றால்,  ஏன் இல்லை?  எங்கே போனது, நம் கலாசார பாரம்பரிய, வாழ்க்கை சின்னங்கள்.

இன்று இந்தியாவின் பற்பல பொதுத்துறை நிறுவனங்கள் உபநிஷத் வாக்கியங்களையும், இந்து கலாச்சார சின்னங்களையும் தாங்கி இருக்கின்றன.    இன்றைய தேதியில் ஒரு பொதுத்துறை ஆரம்பித்தால் இவ்வாறு ஒரு கலாச்சார சின்னத்தை ஸ்லோகனாக வைக்க இயலுமா?  இயலாது, என்றால் ஏன்?   இடையில் என்ன நடந்தது?

இன்று தமிழக அரசின் சின்னமாக கோபுரம் இருக்கிறது.     ஆனால், தற்போதைய சூழலில் ஒரு சின்னம் தேர்ந்தெடுக்கப்படுமானால்,  அது என்னவாக இருக்கும்?   

 ஒரு வெங்காயமோ,  இல்லை மஞ்சள் துண்டோ போடலாம்!! 

கோபுரம் போட கோட்டை சம்மதிக்காது!

என் உறவினர் ஒருவர் டெல்லியில் ஐ.ஏ.எஸ் ஆக இருந்து ரிடையர் ஆனார்.   குருஷேத்ராவில் இருந்த ஒரு பெரிய ஏரியை செப்பனிட்டு அதை நிர்மாணிக்கும் ப்ராஜக்டில் ஒரு அங்கம் வகித்தார்.    அப்போது அந்த ஏரிக்கு பெயர் விவாதம் நடந்தது.   விவாதத்தின் முடிவில்,  அது “பிரும்ம சரோவர்” என்று புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை வாதாடி அதற்கு அப்படி பெயர் சூட்டப்பட்டதாக சொல்லுவார்.   

இன்றைய வீணாகிப்போன சூழலில் இம்மாதிரி நினைத்துப்பார்க்க முடியுமா?  

இன்று நாம் இந்த மைனாரிட்டியிஸத்தில் எத்தனை சோரம் போய் கிடக்கிறோம் என்பதை பாருங்கள்.    

இன்று இந்து கலாசார, பாரம்பரிய குறியீடுகள் திட்டம் போட்டு அழிக்கப்படுகின்றன.     இந்திய நாணயத்தில் சிலுவையை ஒத்த டிஸைன் போன்ற பல எரிச்சல்களை நான் இதன் ஒருமித்த ஒரு அம்சமாகவே காண்கிறேன்.  

இன்று இளைய தலைமுறைக்கு இதனால் வாழும் ஒரு கலாசாரத்தை பற்றி பரிச்சயமோ,  பெருமையோ இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.     தங்கள் அன்றாட பொருளாதார வளர்ச்சி மட்டுமே இந்த மடையர்களின் குறிக்கோள்.   அதற்காகவே,  அவர்கள் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

இதனால், இந்த சமூக சீரழிவுக்கூட்டங்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது.

இந்த இரண்டாவது உத்தி,   அடிமரத்தில் வென்னீர் ஊற்றி அந்த மரத்தை பட்டு போகச்செய்யும் உத்தி.   இராமர் பாலம் போராட்டம் அதற்கு ஒரு எதிர்ப்பு.   

நம் கலாசார, சமுதாய சின்னங்களை  எந்த காரணமானாலும் நாம் விட்டுகொடுக்ககூடாது.  

அறிவியல் பேசி இன்று இந்த உணர்வுகளை கிண்டல் அடிக்கலாம்.   

நம் இளைய தலைமுறைக்கு இன்று இந்து கலாசாரம் ஒரு வாழும் கலாசாரமாக எஞ்சி இருக்க வேண்டுமானால்,  இம்மாதிரி சதிகளை நாம் எதிர்கொள்வதும் அவசியம்.

சொல்லப்போனால்,   இந்த இரண்டாவது அச்சுறுத்தலை நாம் கண்டுகொள்ளவில்லை என்றால்,  நம் விரல்களாலேயே நம் கண்கள் குத்தி குருடாக்கப்படும்.   

நம் இளைய சமுதாயமே,  நாளை  நம் இந்து கலாசார குறியீடுகளை புறக்கணித்து நம் பாரம்பரியத்தை காவுகொடுக்கும்.  பின்னர்,   நம் சரித்திரம் சேறு பூசப்படும்.    இந்து என்ற ஒரு கூட்டம் மிஞ்சியிருக்காது.

அதனால்,  ராமர் பால போராட்டம் இந்து எழுச்சிக்கு ரொம்பவும் முக்கியமான ஒன்று!

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. ராமர் பாலத்தை எந்த அடிப்படையில் இந்து அடையாளம் என்கிறீர் ஜெயராமன் ?

  கனடாவுக்கு அருகிலும் ஒரு பாலம் இதுபோல் இருக்கிறது என்று அதே நாசா சாட்டிலைட் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறதே ? அது என்ன லட்சுமணர் பாலமா ?

  அறிவியல் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் மூட நம்பிக்கைகளை களைய ஏன் மனம் ஒப்பவில்லை ?

  பின்னூட்டம் by செந்தழல் ரவி — ஜூலை 23, 2007 @ 9:01 முப | மறுமொழி

 2. ரவி சார்,

  வருகைக்கு நன்றி.

  ராமர் பாலம் ஒரு இந்து கலாச்சார குறியீடாக மட்டுமே பாதுகாக்கச்சொல்லுவதில் எனக்கு உடன்பாடு. இந்த கலாசார பிம்பம் ஒரு விதத்தில் அறிவியல் காரணிகளைசார்ந்து (ஆரம்பத்தில்) இருந்திருக்கலாம். ஆனால், முழுமையாக அது காரணமில்லை. சமய மற்றும் கலாசார காரணிகளுக்கு அறிவியல் மூலக்கூறு எதிர்பார்ப்பது நியாயமில்லை. காபா என்பது அல்லாஹ்வின் இல்லம் என்று நம்பப்படுகிறது. இன்றும், சபரிமலை தீபம், அமர்நாத் பனிலிங்கம், ஹஜ்ரபாலில் இருக்கும் முகம்மதுவின் மயிர் என்று பல அறிவியல் ஆராய்ச்சிக்கு தாண்டியவை. அறிவியல் பகுத்தறவும், சமய நம்பிக்கையும் – வினோதமாக- இரு வேறு தளங்களில் பயணிக்கின்றன. ஒரு கலாசார அபிமானியாக இதை புரிந்துகொள்வதில் எனக்கு ஏதொரு ஐயப்பாடும் எழவில்லை. நீங்களும் ஒரு தமிழக கலாசார கூறுகளை மிகவும் உள்வாங்கியவர். தங்களுக்கு இந்த கலாசார, சமய குறியீடுகளின் முக்கியத்துவம் புரிந்திருக்கும்.

  ஒரு அறிவியல் பார்வை உடையவன் இம்மாதிரி கலாசார சின்னங்களை எப்போதுமே வழிமொழிய மாட்டான் என்று நினைப்பது பிராக்டிகலாக இருக்காது.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜூலை 23, 2007 @ 9:11 முப | மறுமொழி

 3. Nan palveru samuka puthakangali padithurikiren….

  Kabba enbathu mathiram ala win allayam illai anithu palivasalkalum alavin alayam enbarkal….

  ungalathu pathilukum ravin kelvikum sampathemeillai..
  nan rameshwarathai serthavan… sethu samuthura thitatal engal pakuthil broadgauge train vasathium natkara salai thitam…. matrum nila mathipum vuyarthathu… varanda pakuthiyai sertha nangal poralatharathi munneruvathu pidikamal ningal ethirkathirkal

  பின்னூட்டம் by santhanam — மார்ச் 28, 2008 @ 2:18 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: