வான சாத்திரத்தில் டார்க் மேட்டர் (dark matter, கருப்புப்பொருள் என்று சொல்லலாமா!) கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த டார்க் மேட்டர் மற்ற பொருட்களைவிட திண்மையானது. இந்த அண்டத்தின் பெரும்பான்மை திண்மை (mass) டார்க் மேட்டரினால் ஆனது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால், இதில் ஒரு சங்கடம். இது இருப்பதை யாராலும் காண முடியாது. ஏனென்றால், இது தன்னில் வரும் ஒளிக்கதிர்களை பிரதிபலிப்பதில்லை. அதனால், விஞ்ஞானிகளால் இதன் இருப்பையும், இயல்பையும் யூகிக்க மட்டுமே முடிகிறது. இந்த டார்க் மேட்டர் இருட்டை உற்பத்தி செய்கிறது.
நம் கண்திரையில் விழும் பிம்பத்தை அளப்பதற்கு கண்விழித்திரையில் நுகரிகள் (sensors) ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இந்த நுகரிகள் cone, rod (குவளை வடிவ மற்றும் தண்டு வடிவ) என்று இருவகையாகும். சிலருக்கு இந்த நுகரிகள் பிறவியில் பழுதுபட்டிருக்கும். இந்தக் குறை cone, rod dystrophy என்று ஆங்கிலத்தில் பொதுப்பெயரில் வழங்கப்படுகிறது. இந்தக் குறை அந்த நோயிளியின் ஜீன்ஸ் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த வியாதிக்கு இன்றைய தேதிவரை நிவாரணம் இல்லை. இக்குறை உள்ளவர்கள் சிறுகச்சிறுக கண் பார்வை இழந்து குருடாகிவிடுவார்கள். இந்த குறையை சமாளிக்க நோயாளிகள் எப்போதும் கருப்புக்கண்ணாடி அணிந்திருக்கவேண்டும். பிரகாசமான காட்சிகளும், திண்மையான ஒளியும் இந்த குறையை தீவிரப்படுத்தி கண்பார்வையை விரைவில் பறித்துக்கொள்ளும். இந்தக்குறையுள்ளவர்களுக்கு இருட்டில்தான் வாழ்க்கை. வெளிச்சம் இவர்களின் கண்பார்வையை பறிக்கும்.
புறஊதாக்கதிர்களைப்பற்றி (ultraviolet rays) நாம் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறோம். இவை சாதாரண ஒளிக்கதிர்களை விட வீரியமானவை. நம் சாதாரணக்கண்களுக்குப் புலப்படாதவை. ஆனால், இவை செல்களின் டி.என்.ஏ வின் வேதியல் கூறுகளை சிதைக்கும் ஆற்றல் வாய்ந்தவை. உதாரணமாக, நம் தோலின் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒளிக்கதிர்களால் 50 முதல் 100 முறை தாக்கப்பட்டு எதிர்விளைவை ஏற்படுத்துகின்றன (source: goodsell, 2001). ஆனால், அதிருஷ்டவசமாக ஒரு ஆரோக்கியமான மனிதனின் செல்கள் இந்த தாக்கங்களை தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருந்தாலும், இந்த தன்மை இல்லாத பல நுண்ணுயிரிகளுக்கு (bacterium) இந்த ஒளிக்கற்றைகள் சாவு மணி அடிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் இந்த ஒளிக்கற்றைத் தாக்கத்தை 15 வினாடிகள் கூட தாங்காமல் இறக்கின்றன. இவைகளுக்கு புறஊதா ஒளியே சாவுமணி.
பொதுவாக தாவரங்கள் வெளிச்சத்தில் வளமாகவும் வேகமாகவும் வளர்கின்றன. ஆனால், தாவரங்களின் பல இனங்கள் நேரிடையான சூரிய ஒளியைத்தாங்க முடியாதவை. இவைகளை நாம் நிழலில் வைத்துத்தான் காப்பாற்ற வேண்டும். இவை நேரடியாக வெளிச்சத்தை ஏற்க முடியாதவை. இம்மாதிரி உயிர்கள் பிரிதிபலிக்கும் ஒளிக்கற்றைகளை மட்டுமே ஏற்று வாழ முடியும். இவைகளை shade plants என்று பொதுவாக சொல்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், ஜெர்மானிய அறிஞர் ஒரு புகழ்பெற்ற பரிசோதனை செய்தார். இமாலயப்பிராந்தியத்தின் எலிகளை பல நாட்கள் துளியும் வெளிச்சம் இல்லாத இருட்டில் வைத்தார். நாளாக நாளாக இந்த எலிகளின் பார்வை விழிகளில் ocular melanin என்ற மாசு அதிகமாகிக்கொண்டே வந்தது. பின்னர், அவை வெளிச்சத்தில் கொண்டு வரப்பட்டபோது அவை அந்த ஒளிகளை எதிர்கொள்ளும் திறமையை இழந்துவிட்டிருந்தன.
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரும் மனிதன் தன் விழிக்கோளம் சிறிதாகும்வரை சில நோடிகள் அந்த ஒளிக்கற்றையால் கூச்சப்படுவான். ஆனால், இந்த எலிகளின் குறைபாடு என்பது இப்படிப்பட்ட ஒரு இயல்பைத்தாண்டி நேரிடையான ஒரு பார்வைக்கோளாறாகவே மாறியிருந்தது. மீண்டும் பழைய பார்வையை பெற அவற்றிற்கு பல மாதங்களாயின.
இந்த பரிசோதனை அல்பேனியா போன்ற இதர பிராந்தீய எலிகளிடமும் நடத்தப்பபட்டது. விளைவுகள் ஒரே மாதிரி இருந்தாலும், இமாலய எலிகளுக்கு இந்த குறை மிகவும் தீவிரமாக ஏற்பட்டது.
இப்படி இருட்டாகவே இருக்கும் பலவற்றை நாம் கேள்விப்படுகிறோம். வெளிச்சத்தால் உயிர் ஆபத்து உண்டாகும் பல பொருட்களை நாம் அறிகிறோம். இந்த இமாலய எலிகள் போல.
இப்போது, இதைவிட தீவிரமான பிரச்சனை உள்ள சில இமாலய எலிகளை கற்பனை செய்து பார்க்கிறேன்.
இந்த எலிகள் ஆயிரம் வருடங்களாக இருட்டில் வாழ்கின்றன. அதனால், இவை தாம் வாழும் சுவனத்தை விவரமாக கற்பனை செய்துகொண்டிருக்கின்றன. அந்த எலிகளின் பார்வைத்திறன் உண்மையில் மிகவும் அறுகியிருக்கிறது. ![]()
ஆனால், இந்த முட்டாள் எலிகளுக்கோ பார்வை போனதே தெரியவில்லை. கண்கள் விழித்திருந்தாலும் இவைகள் குருடர்களே. ஆனால், தான் குருடர்கள் என்று தெரியாதவைகள். இதுதான் இவர்களின் பரிதாபம்.
இந்த எலிகள் இப்போது இந்த பொய் வாழ்க்கைக்கு நன்கு பழகி விட்டன. அவை தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக நிசத்தை மாற்றி கற்பனையாக தனக்கேற்ற நிசத்தைப் படைத்துக்கொண்டிருக்கின்றன.
இந்த எலிகளுக்கு நிவாரணம் எப்படித்தருவது? இவைகள் உண்மையை எதிர்கொள்ள பயப்படுகின்றனவே! இவைகளை வலுக்கட்டாயமாக வெளிச்சத்தில் வைத்தால் வலியால் துடித்து இருட்டிற்குள் பதுங்கிக்கொள்கின்றனவே!
மேலும், இவைகளுக்கு தங்கள் கனவு சுவனத்திலிருந்து வெளிவர முயற்சியில்லை. நிதர்சனம் வேறு மாதிரி இருந்தால் இவை அந்த செய்தியை மறுக்கின்றன. இது ஏதோ நம் விரோதிகளின் சதி என்று தனக்குத்தானே தீர்ப்பு எழுதி தங்கள் மயக்க வாழ்க்கையில் மீண்டும் மூழ்குகின்றன.
இந்த இமாலய எலிகள் நம்மிடையே உலவும் பல சகோதர, சகோதரிகள்தாம்.
மனிதனின் மனம் நம்பிக்கையால் கட்டப்பட்டிருக்கிறது என்கிறார்கள் மனவியல் வல்லுனர்கள். அந்த நம்பிக்கை பொய்க்கும்போது மிகவும் வலிக்கிறது. அந்நிலையில் மனிதன் தன் அடிப்படை வாழ்க்கைக்குறிக்கோளை இழக்கிறான். சில சமயம், அந்த நம்பிக்கை தகரும்போது எதிர்விளைவுகள் வன்முறையாக இருக்கின்றன. மனிதனின் பொதுஅறிவுத்திறனைப்பொறுத்து அந்த வன்முறை விளைவு அமைகிறது.
உலகம் தட்டையானது, வானத்தை கூரையாக்கி மலைகளால் தாங்கப்பட்டுள்ளது என்று அவன் புனிதநூலினால் நம்புகிறான். உலகம் ஒரு ஆயிரம் ஆண்டுகளே பழைமையானது என்று அவன் நூலில் எழுதியுள்ளதை அவன் தினசரி அறியாமல் உள்வாங்குகிறான்.
இதற்கு எதிர்மறையாக காணும் எல்லா உண்மைகளையும் அவன் ஆராய மறுக்கிறான். தன் பிரச்சனைகளுக்கும், தன் இயலாமைக்கும் பிறர்களின் சதியே காரணம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டுவிடுகிறான்.
பரிணாம வளர்ச்சியின் சிகரமான மனிதகுலத்தின் மூளை மிகுந்த நுட்பமானது. ஆனால், மூளையின் ஒரு பாகம் (ஏமிக்டல (amygdala) பாகம்) புலன்களின் உணர்வுகளுடன் நேரிடையாக தொடர்புள்ளது. இதில் புலன்களின் உணர்வுகளை நேரிடையாகப்பெற்று பல எதிர்விளைவுகளை உடலுக்கு பணிக்கிறது. இந்த பாகம் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் உயிரனங்களின் தற்காப்புக்காக அமைந்த பகுதி.
தூங்கும் ஒரு மனிதன் ஏதோ சத்தத்தில் உண்மையை ஆராயாமல் கூரை இடிந்ததோ என்று அலறி ஓடுவது இந்த மூளையின் செயல்விளைவே.
இந்த முட்டாள் மூளைக்கு உண்மையை தெரிந்துகொண்டுதான் அபாய எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தெரியாது. (Dr. LeDoux’s paper). குருட்டாம்போக்கில் அபாயச்சங்கு ஊதிவிடுகிறது.
பரிணாம வளர்ச்சியில் பின்தங்கியுள்ள சில உயிரினங்களுக்கு இந்த ஏமிக்டல பகுதியே மூளையை பெறுமளவில் ஆக்கிரமித்திருக்கிறது. பகுத்தறிவான மனிதக்கோ இந்த பாகம் தன் தேவையை குறுக்கிக்கொண்டுள்ளது.
ஆனால், நம்பிக்கையால் வளர்ச்சி குன்றிய சில மனிதர்களின் எதிர்வினைகள் நமக்கு இன்னும் இந்த மிருகத்தனத்தின் எஞ்சிய கூறுகளைக்காட்டுகின்றன.
ஔரங்கசீப் மீதான வரலாற்றுக் கண்காட்சிக்கான எதிர்விளைவை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.
இம்மனிதர்கள் இப்போது இமாலய எலிகள் போல உண்மை ஒளியை எதிர்கொள்ளும் தன்மையை இழந்திருக்கிறார்கள். இம்மனிதர்களின் வன்முறை விளைவுகள் அவர்களின் மூளை வளர்ச்சி இன்மையை காட்டுகின்றன.
இவர்களின் வன்முறை எதிர்விளைவுகள் இவர்கள் காணும் உண்மையை எப்போதுமே நிரூபிக்கின்றன, என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள்.
வரலாற்றில் தீர்க்க வேண்டிய கணக்குகள் பல எஞ்சியிருக்கின்றன. The only thing that remains to be learned is the history you don’t know என்றான் ஹாரி ட்ரூமன். உண்மைதான். வரலாற்றின் பல பரிமாணங்கள் இந்த பொய்யர்களை பயமுறுத்துகின்றன.
தங்களின் மடத்தனத்தை இழந்து புழு பட்டாம்பூச்சியாகும் பரிணாம வலியே இது. இது காலத்தால் தவிர்க்க இயலாதது.
உண்மை என்னும் வெளிச்சத்தில் இவர்களின் பார்வைக்கோளாறு தீரும். ஆனால், அதற்கு பல பலிகள் தேவைப்படும்.
ஏனென்றால், தங்களின் பூர்வீக வன்முறையாளர்களாகவே இவர்கள் இன்று மாறிவிட்டார்கள். இவர்கள் உண்மையில் அழிக்கப்பட்டவர்கள், ஆனால் இன்று அழித்தவர்களாக மாறிவிட்டார்கள்.
இந்த சமுதாயத்தைத் தோலுரித்து மனிதநேயமுள்ள சமதர்ம சமுதாயமாக மாற்றுவது இவர்களுக்குத்தேவையானது. ஆனால், இவர்களின் பொய்களை விதந்தோதும் மூடத்தனமும், வரலாற்றைப் பார்க்க மறுக்கும் குருட்டுத்தனமும் இவர்களை மீட்சியிலிருந்து வஞ்சிக்கின்றன.
இவர்களுக்காகவே, இவர்களின் மறுமலர்ச்சிக்காகவே, இவர்களை எதிர்ப்போம்.
வாய்மை என்றும் மருந்தில் இவர்களின் ஆயிரக்கணக்கான ஆண்டு இருளை நீக்குவோம்.
நண்பா, கதவைத்திற, உண்மையைப் பார். மனிதனாகு!!!
தொடர்பான சுட்டிகள்..
MEDIA REPORTS:-
Aurangazeb Expo abruptly closed – The New Indian Express dated 7th March 2008.
http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE920080306222128&Page=9&Title=Chennai&Topic=0&
Art Exhibition on Aurangazeb cancelled – The Hindu dated 7th March 2008.
http://www.hindu.com/2008/03/07/stories/2008030759280300.htm Aurangazeb Exhibition creates flutter – Deccan Chronicle dated 7th March 2008. http://www.deccan.com/chennaichronicle/home/homedetails.asp#Aurangazeb


//நுகரி//அற்புதமான தமிழாளுமை தங்களுக்கு
Comment by மஸ்கிட்டோ மணி — மார்ச் 10, 2008 @ 6:12 மு.பகல் |
வீர வேல் ! வெற்றி வேல் !
தாங்கள் எழுதியதைப் படித்தேன்.
>> இவர்களுக்காகவே, இவர்களின் மறுமலர்ச்சிக்காகவே, இவர்களை எதிர்ப்போம்.
என எழுதியுள்ளீர்கள். ஒரு ஹிந்துவால் இப்படித்தான் யோசிக்க முடியும். ஆபிரகாமிய ஆதாம் ஏவாள் கதையின்படி இவ்வுலகில் உள்ள மற்ற மதத்தினரும் தமது சகோதர சகோதரிகளாக இருந்தாலும், தன்னுடைய மதத்தில் இல்லாவிட்டால் அவர்கள் நரகத்திற்குப் போகவேண்டும், அவர்கள் அடிமையாக நடத்தப்படவேண்டும் என்று சொல்லுகிறது இஸ்லாம். ஆனால், வசுதைவ குடும்பகம் என்ற ஹிந்து மதக் கோட்பாட்டின்படி இஸ்லாமில் உள்ளவர்கள் தங்களது நம்பிக்கைசார்ந்த குருட்டுத்தனத்தை விட்டுவிட்டு, பகுத்தறிவோடும், சமத்துவத்தோடும், மரியாதையோடும் தங்களையும், மற்றவர்களையும் நடத்தவேண்டும் என்று சொல்லுகிறது ஹிந்து மதம்.
இந்த ஹிந்து மதத்தின் குரலாகவே உங்களது எழுத்துக்கள் உள்ளன. உங்களது கருத்துக்களைக் கேட்டு பரிசோதனைக்குட்படுத்தபப்ட்ட அந்த இமாலய எலிகள் கதவைத் திறந்து வெளியே வந்துவிடலாம். ஆனால், ஆபிரகாமிய எலிகள் தங்களது ஸனானாவிலிருந்து வெளியே வருமா?
இமாலய எலிகளைவிட ஆபிரகாமிய எலிகள் ஆபத்தானவை. இமாலய எலிகள் போல் இல்லாமல், ஆபிரகாமிய எலிகள் தாஙக்ளும் குருடாவதோடு, மற்றவர்களையும் கண்ணை குருடாக்கச் சொல்லுகின்றன. ஒத்துக்கொள்ளாதவர்களின் வாழ்க்கையை நரகமாக்குகின்றன. ஜிஸியா வரிபோட்ட ஒருவனை ஆதரிப்பதுதான் இவர்களது மார்க்கம் சொல்லித் தரும் பாடம். இதுவரை நடந்த எந்த பயங்கரவாத நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்போ, அல்லது கண்டிப்போ வெளியிடாத இஸ்லாமியர்கள் இதற்கும் கண்டனத்தை வெளியிடப்போவதில்லை.
இவர்கள் வன்முறையால் தங்களையும், மற்றவர்களையும் அழித்துக்கொள்ளும் பாராஸைட்டுகள்.
ஆனால், தங்களை அழிக்கும் இந்த பாராஸைட்டுகளுக்காகவும் பரிந்துபேசும் கருணை உலகில் ஹிந்துக்களுக்கு மட்டுமே உண்டு. உங்களைப்போல.
இருப்பினும், நாம் ஹிந்துக்கள் என்பதால், இஸ்லாமியர்கள் என்றாலே அனைவரும் கெட்டவர்கள் என்ற முடிவுக்கு வராமல், அங்கும் நல்லவர்கள் உண்டு என்பதைப் புரிந்துகொள்கிறோம். அவர்கள் தங்களுடைய கட்டுரையை ஆதரிப்பர்கள்.
இக்கட்டுரைக்காக, நீங்கள் அறிவியல் விஷயங்கள் பலவற்றை கூறியுள்ளீர்கள். அதெல்லாம், ஹிந்துக்களுக்கு மட்டும்தான் புரியும். இருப்பினும், தன்னையும் தன்னைச் சார்ந்தவனையும் பற்றிய நல்லெண்ணத்தினால் நமக்கு ஏற்படும் கருணையும், கோபமும்கூட நம்மிடமிருக்கும் அறிவியல், தத்துவ கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, அவற்றை பலப்படுத்தவும் செய்கின்றன. உங்கள் கட்டுரையில் இது தெரிகிறது.
உங்கள் முயற்சி வெற்றிபெற பாரத மாதா அருள் செய்வாளாக !
வந்தே மாதரம் !
Comment by cuziyam — மார்ச் 10, 2008 @ 6:12 பிற்பகல் |
இமாலய எலிகள் அறியாமைக்கு இப்படி ஒரு எடுத்துக்காட்டுன்னு இப்பத்தான் தெரிஞ்சுது!
அமன்புடன்
கமலா
Comment by kalyanakamala — மார்ச் 11, 2008 @ 6:00 மு.பகல் |
கடந்த காலத்தில் நடந்தது தவறாகவே இருந்தாலும், அதை தற்போது உரக்க கூறுவதற்கு என்ன அவசியம்? வரலாற்றை திருத்த நினைப்பது மூடத்தனமே அன்றி வேறொன்றும் இல்லை. அமைதியான சமூகத்தில் வேண்டாத பிரச்சனைகளைத்தான் அது உருவாக்கும். கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து விட்டு நிகழ் காலம் மற்றும் வருங்காலத்தில் கவனம் செலுத்தினால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
Comment by இரா.பாரதிராஜா — மார்ச் 11, 2008 @ 1:16 பிற்பகல் |
இரா. பாரதிராஜா அவர்களே,
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் வரவால் என் பதிவு சிறக்கிறது.
/// கடந்த காலத்தில் நடந்தது தவறாகவே இருந்தாலும், அதை தற்போது உரக்க கூறுவதற்கு என்ன அவசியம்? ///
வரலாற்றை ஒரு சாரார் திரித்துக்கூறிக்கொண்டே இருக்கிறார்கள். முகலாய மன்னர்கள் இந்தியாவுக்கு பெரும் கேடு விளைவித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை ஏதோ பெரிய்ய சாதனையாளர்கள் போல இஸ்லாமிய மற்றும் கம்யூனிஸ அமைப்புகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதனால், உண்மையை அடுத்த தலைமுறைக்கு தெரிவிப்பது அவசியமாகிறது. பொய்களை கடை விரித்து வியாபாரம் செய்பவர்களால், உள்ளே கிடக்கும் உண்மையை வெளியே காட்டுவது அவசியமாகிறது.
/// வரலாற்றை திருத்த நினைப்பது மூடத்தனமே அன்றி வேறொன்றும் இல்லை. அமைதியான சமூகத்தில் வேண்டாத பிரச்சனைகளைத்தான் அது உருவாக்கும். ///
உண்மைதான். உண்மைக்குப் புறம்பான பொய்களைச்சொல்லி வரலாற்றை திருத்த நினைக்கும் இஸ்லாமிய அமைப்புகளால் பல வேண்டாத பிரச்சனைகள் உருவாகின்றன.
/// கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து விட்டு நிகழ் காலம் மற்றும் வருங்காலத்தில் கவனம் செலுத்தினால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும். //
வரலாற்றைக்கண்டு பயப்படாதீர்கள், அன்பரே. வரலாறு என்பது நம் அனுபவத்தின் ஏடு. வரலாறு என்பது நம் மூதாதையர்களின் உயிர்மூச்சின் பிரதிபலிப்பு. வரலாறு என்பது நம் இருக்கையின் ஒரு இன்றிமையாத கூறு. வரலாற்றை தவிர்த்து ஒரு மனிதன் பெருமை கர்வம் கொள்ளத்தக்கது ஏதுவும் இல்லை.
இன்று ஜெர்மானியர்கள் தங்கள் யூத அழிப்பு வரலாற்றை மறைக்க முயலவில்லை. அதை மீண்டும் மீண்டும் அடுத்த தலைமுறைக்கு சொல்லி அவர்களை பாடம் கற்பிக்க பழக்குகிறார்கள்.
அதுபோல, அமெரிக்கர்களும் தங்களின் கருப்பர் இன அழிப்பு-அடிமை வரலாற்றை மறைக்க முயலவில்லை. அதை மீண்டும் மீண்டும் அடுத்த தலைமுறைக்குச்சொல்லி அவர்களுக்கு சரியான வழி காட்டுகிறார்கள்.
அது போலத்தான் உலகெங்கும்.
ஆனால், இந்தியாவில்தான் இந்தியர்கள் தங்களின் கடந்த பாதையை மறைக்கிறார்கள். எத்தனை வீர போராட்டங்களைக் கடந்து இந்த இந்திய சமுதாயம் வாழ்கிறது என்பதை உணர மறுக்கிறார்கள்.
இப்படி இந்திய வரலாற்றை மறைக்க முயலுபவர்கள் எல்லோரும், இந்தியாவை ஆரம்பத்தில் அடிமைப்படுத்த முற்பட்டு தோற்றவர்கள்தாம். அதனால்தான், வரலாற்றை நாம் இனம் கண்டு கொள்வது அவசியமாகிறது. வரலாற்றை உணர்ந்தவன் இவர்களின் உண்மை பிம்பத்தை உடனே அடையாளம் கண்டு கொள்வான்.
என்ன, நான் சரியாகச்சொல்கிறேனா? வரலாற்றைக்கண்டு ஓட மாட்டீர்கள் தானே?
நன்றி
ஜயராமன்
Comment by ஜயராமன் — மார்ச் 11, 2008 @ 5:33 பிற்பகல் |
ஜெயராமன் அவர்களே,
அபாரம் !!! சூப்பர்!!!
It’s quite interesting to read all ur writeups. Just keep up the good work.
Comment by சின்ன பையன் — ஜூலை 14, 2008 @ 1:41 பிற்பகல் |
ada muttalkale ungal arivu enpathu sirithu alavukada velai seyyathathai ninaiththu vethanaya irukku. pakutharivalana niya ONLINEPJ.com po paru pakutharivalanin ueir padura pattai
Comment by nanthaa — அக்டோபர் 26, 2009 @ 11:49 மு.பகல் |